விராட் கோலி சூர்யகுமாருக்கு பின்னால் இறங்கவேண்டும்… கவுதம் கம்பீர் கருத்து!

0
Follow on Google News

இந்திய அணியின் முன்னாள் டி 20 அணி கேப்டன் விராட் கோலி இப்போது ஓய்வில் இருக்கிறார்.
அதையடுத்து நடந்து வரும் நியுசிலாந்து தொடரில் சூர்யகுமார் யாதவ் அவரிடத்தில் விளையாடி வருகிறார். முதல் போட்டியில் 40 பந்துகளில் 62 ரன்களை சேர்த்து அவர் ஆட்டநாயகன் விருதைப் பெற்றார். விராட் கோலி அணிக்குள் மீண்டும் திரும்பினால் சூர்யகுமார் எந்த இடத்தில் விளையாடுவார் என்பது இப்போது கேள்விக்குள்ளாகியுள்ளது.

இதுகுறித்து பேசியுள்ள கவுதம் கம்பீர் ‘விராட் கோலி வந்தாலும் சூர்யகுமார் மூன்றாவது இடத்திலேயே இறங்கவேண்டும். அவரிடம் அனைத்து விதமான ஷாட்களும் உள்ளன. ரோஹித் ராகுல் அதிரடியை அப்படியே தொடர்ந்து எடுத்து செல்லக் கூடியவர். கோலி நான்காம் இடத்தில் இறங்கி அணியை ஒருங்கிணைத்துச் செல்ல வேண்டும். ஒருவேளை சீக்கிரமாக இரண்டு விக்கெட்கள் இழந்தால் விராட் கோலி மிடில் ஆர்டரை திறம்படக் கொண்டு செல்வார்’ எனக் கூறியுள்ளார்.

ஆனால் உலகின் தலைசிறந்த டி 20 பேட்ஸ்மேனாக விளங்கி வரும் கோலியை அவரிடத்தில் இருந்து பின் தள்ளுவது சரியாக இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.