தொடரைக் கைப்பற்றுமா இந்தியா? இன்று இரண்டாவது டி 20 போட்டி!

0
Follow on Google News

இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டி 20 போட்டி இன்று மாலை நடக்க உள்ளது. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியுசிலாந்து அணி டி 20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. முதலில் டி 20 தொடர் நடந்து வருகிறது. இதில் ஜெய்ப்பூரில் நடந்த முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.

இதையடுத்து ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடக்க உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் தொடரை இந்தியா வெல்லும் என்பதால் போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் நியுசிலாந்து அணி எப்படியும் போட்டியை வெல்ல வேண்டும் என்ற கட்டாயத்தில் இருப்பதால் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.