தற்காலிகமாக அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் விலகும் முடிவை டிம் பெய்ன் எடுத்துள்ளார். ஆஸி டெஸ்ட் அணியின் கேப்டனாக கடந்த சில ஆண்டுகளாக டிம் பெய்ன் செயல்பட்டு வருகிறார். அவர் தலைமையில் பல தொடர்களை ஆஸி அணி இழந்தாலும், அவரே தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில் அடுத்த மாதம் பாரம்பரியம் மிக்க ஆஷஸ் தொடர் நடக்க உள்ள நிலையில் அதையும் அவரே வழிநடத்துவார் என சொல்லப்பட்டது. ஆனால் இப்போது அவர் தன்னுடைய கேப்டன் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இதற்குக் காரணம் அவர் 2017 ஆம் ஆண்டு தன்னுடன் பணியாற்றிய டாஸ்மானியா கிரிக்கட் அமைப்பின் பெண் ஊழியருக்கு பாலியல் ரீதியாக குறுஞ்செய்திகள் மற்றும் படங்களை அனுப்பியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அப்போதே அது சம்மந்தமாக விசாரணை நடத்தப்பட்ட நிலையில் டிம் பெய்ன் குற்றமற்றவர் என வாதிட்டார். ஆனால் இப்போது அவர் அனுப்பிய புகைப்படம் மற்றும் குறுஞ்செய்தி ஆகியவை வெளியாகி உள்ளன.
இதையடுத்து தனது தவறுக்காக அவர் ஆஸி அணியின் கேப்டன் பதவியை ராஜினாமா செய்த பெய்ன் அணித்தேர்வில் ஒரு வீரராக செயல்படுவார் என அறிவிக்கபப்ட்டது. ஆனால் இப்போது தொடர்ந்து எழும் சர்ச்சைகளை எடுத்து அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் தற்காலிகமாக கால வரையறையின்றி விலகுவதாக அறிவித்துள்ளார்.