சர்ச்சையில் சிக்கிய சரத்குமார்..! வன்னியர்களுக்கு வந்தால் தக்காளி சட்னி.. அதுவே நாடார்களுக்கு வந்தால் ரத்தமா..! இது தேவையா சரத்குமார் உங்களுக்கு.?

0
Follow on Google News

காஞ்சிபுரத்தில் உள்ள கிருஸ்துவ சர்ச்சில் மத போதகர் பியூலா செல்வராணி, குறிப்பிட்ட நாடார் சமூகத்தை இழிவு படுத்தும் விதத்தில் பேசியதாக கூறப்படுகிறது. அவர் அவ்வாறு பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதனால் நாடார் சமூகத்தினர் மத்தியில் கடும் கண்டன குரல் பியூலா செல்வராணிக்கு எதிராக எழுந்துள்ளது. மேலும் அவர் மீது பல்வேறு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது குறித்து நடிகர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூரில் அமைந்துள்ள சி.எஸ்.ஐ கிறிஸ்தவ ஆலயத்தில், கடந்த 21.11.2021 (ஞாயிற்றுக்கிழமை)
அன்று நடைபெற்ற மத மத போதனை கூட்டத்தின் போது, திருமதி. பியூலா செல்வராணி என்பவர் நாடார் சமூகத்தை இழிவுபடுத்தி பேசியிருப்பது தவறு, எந்தவொரு சமூகத்தையும், சமுதாயத்தையும் இழிவுபடுத்தி பேசுவது கண்டனத்திற்குரியது.

மதவழிபாட்டு தலத்தில் இறைவனை வழிபடும்போது, பிற மதத்தையோ, இனத்தையோ, மொழிகளையோ சாடுவது ஏற்புடையதல்ல. நவீன காலத்தில், பேசுவதற்கு முன்பாக, ஆழமாக சிந்தித்து கருத்துகளை பதிவு செய்ய வேண்டும். எந்தவொரு விதத்திலும், உதாரணத்திற்காக கூட, மதம், இனம், மொழி சார்ந்து கருத்தை பதிவு செய்து, பிறர் மனதை புண்படுத்துவது தவறு. பேசுவதற்கு முன்பாக சிந்தித்தால், அதனால் ஏற்படக்கூடிய விளைவுகளையும்,

மோதல்களையும், சிக்கல்களையும் தவிர்க்கலாம் என்பதை தெரிவித்துக் கொண்டு, பிரிவினைவாதத்துக்கு வழிவகுக்கும் இது போன்ற சர்ச்சைக்குரிய பேச்சுகளை தவிர்த்திட சம்பந்தப்பட்ட அமைப்பினர் அறிவுறுத்த கேட்டுக் கொள்கிறேன் என் சரத்குமார் தெரிவித்துள்ளார். இந்நிலையில் ஜெய்பீம் படத்தில் வன்னியர்களை இழிவு படுத்தும் விதத்தில் காட்சிகள் அமைத்துள்ளதாக நடிகர் சூர்யாவுக்கு எதிராக வன்னியர்கள் போராடிக்கொண்டிருந்த போது.

நடிகர் சரத்குமார் ஜெய்பீம் பட குழுவுக்கு ஆதரவாக, சிறந்த படைப்பை தந்த சூர்யாவை போற்றுகிறேன். ஞானவேலை வாழ்த்துகிறேன். ராசாகண்ணு, செங்கேணி, தமிழ், சூப்பர்குட் சுப்பிரமணி மற்றும் பாத்திரங்களாகவே வாழ்ந்திருக்கும் சக கலைஞர்கள் அனைவரையும், என் உள்ளத்தின் அடித்தளத்தில் இருந்து போற்றுகிறேன் என வெந்த புண்ணில் வேல் பாச்சுவது போன்று சூர்யாவுக்கு ஆதரவாக சரத்குமார் ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இதை தற்போது சுட்டி காட்டி, வன்னியர் சமூகத்துக்கு ஒரு பிரச்சனை என்றால் அது தக்காளி சட்னி, அதுவே நாடார் சமூகத்துக்கு ஒரு பிரச்சனை என்றால் ரத்தமா.? என சரத்குமாரை வன்னிய சமூகத்தை சேர்ந்த வலைதளவாசிகள் கேள்வி எழுப்பி வருவது. இது சரத்குமாருக்கு தேவையா என நாடார் சமூகத்தை சேர்ந்தவர்கள் கூட சூர்யாவுக்கு ஆதரவாக சரத்குமார் கருத்து தெரிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடதக்கது.