பீஸ்ட் படத்தில் செல்வராகவனின் கதாபாத்திரம் இதுவா?

0
Follow on Google News

செல்வராகவன் சாணிக்காயிதம் படத்தை அடுத்து பீஸ்ட் படத்தில் வில்லனாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். நடிகர் விஜய் நடிக்கும் பீஸ்ட் திரைப்படம் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. டாக்டர் திரைப்படம் தந்த வெற்றியை அடுத்து உத்வேகத்தோடு இந்த படத்தை இயக்கி வருகிறார் நெல்சன்.

இந்த படத்தில் விஜய்யோடு பூஜா ஹெக்டே, யோகி பாபு, ரெட்டின்ஸ் கின்ஸே, செல்வராகவன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்நிலையில் சென்னையை அடுத்து பூந்தமல்லியில் அமைக்கப்பட்டுள்ள பீஸ்ட் படத்தின் ஷாப்பிங் மால் செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடத்தப்பட்டது.

இந்நிலையில் இந்த படத்தில் செலவராகவன் நடிக்கும் கதாபாத்திரம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. படத்தில் செலவராகவன் அரசியல்வாதியாக நடிக்கிறாராம். அவரது கதாபாத்திரம் எதிர்மறை குணாதிசயங்கள் கொண்ட ஒன்றாக உருவாக்கப்பட்டுள்ளதாம்.