தோனியை வெளுத்து வாங்கிய கம்பீர்…எல்லாத்துக்கு நீங்க தான் என்று பப்ளிசிட்டி தேடாதீர்கள்…

0
Follow on Google News

இந்திய கிரிக்கெட் அணியில் இருந்த கேப்டன்களில் அதிக ரசிகர்களை கொண்ட கேப்டனாக திகழ்ந்து வந்த எம்.எஸ் தோனி தலைமையிலான இந்திய அணி 2007 டி20 உலகக் கோப்பை, 2011 ஒருநாள் உலகக் கோப்பை, 2013 சாம்பியன்ஸ் டிராபி என பல கோப்பைகளை வாங்கிக் குவித்தது. மேலும், சர்வதேச கிரிக்கெட் அரங்கில் 3 ஃபார்மெட்டுகளிலும் கொடி கட்டி பறந்தது.

குறிப்பாக, 2011 ஆம் ஆண்டு சொந்த மண்ணில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில், இலங்கைக்கு எதிரான இறுதிப்போட்டியில் தோனி தனது கையால் சிக்ஸரை பறக்கவிட்டு ஃபினிஷிங் கொடுப்த, இந்த தருணம் கிரிக்கெட் ரசிகர்களின் மனதில் பசுமரத்து ஆணி போல, ஆழமாகப் பதிந்துகிடக்கிறது. அத்துடன் 2011 உலகக்கோப்பை என்றாலே, “தோனி” தான் என அவரை ஹீரோவாக இன்றளவும் இந்திய ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

ஆனால், சச்சின் முதல் ஜாகீர் கான் வரை அனைவரும் சேர்ந்து தான் உலகக்கோப்பையை வென்றுக் கொடுத்தார்கள் என்றும், தோனியை மட்டும் ரசிகர்கள் ஹீரோவாக கொண்டாடுவதாகவும் கவுதம் கம்பீர் விமர்சித்திருந்தார். இதையடுத்து, கம்பீருக்கு ஆதரவாக சிலரும், தோனிக்கு ஆதரவாக சிலரும் என இணைந்து கொண்டு இணையத்தில் கடும் விவாதத்தில் ஈடுபாடுவார்கள். இந்த ரசிகர்கள் சண்டையால் சமூக வலைதளத்தில் பெரும் அக்கப்போரே நடக்கும்.

கம்பீர் தன்னுடைய பேட்டிகளில் எப்பொழுதும் ஒரு நபரால் ஒரு கோப்பையை வெல்ல முடியாது, ஒரு அணியால் மட்டும் தான் ஒரு கோப்பையை வெல்ல முடியும், எனவே ஒரு அணியின் வெற்றிக்கு தனிநபரை பொறுப்பாக்கக் கூடாது, இந்தியாவில் தனிநபர் வழிபாடு மிக அதிகமாக இருக்கிறது என்று கூறி வருகிறார். மேலும் மீடியாக்கள் தான் தோனி போன்றவர்களை உருவாக்கி இருக்கிறது என்றும், 2011ம் ஆண்டு உலகக் கோப்பையில் மிகச் சிறப்பாக விளையாடிய ஜாகிர் கான் மற்றும் யுவராஜ் சிங் போன்றவர்களுக்கான அங்கீகாரம் இதுவரையில் கிடைக்கவில்லை என்றும் வெளிப்படையாக விமர்சனம் செய்திருக்கிறார்.

“ஹீரோ வழிபாட்டில் இருந்து இந்தியா வெளிவர வேண்டும். அது அரசியலாக இருந்தாலும் சரி, இந்திய கிரிக்கெட் அல்லது டெல்லி கிரிக்கெட்டாக இருந்தாலும் சரி. ஹீரோக்களாக முன்னிறுத்த கூடாது. நாம் வணங்க வேண்டியது இந்திய கிரிக்கெட் அல்லது டெல்லி கிரிக்கெட் அல்லது இந்தியாவைத் தான். இது போன்றவையை உருவாக்கியது யார்?. அவை இந்த இரண்டு விஷயங்களால் தான் உருவாக்கப்படுகிறது. முதலில், சமூக ஊடகப் பின்தொடர்பவர்களால், அது இந்த நாட்டில் உள்ள போலியான விஷயம். இரண்டாவது, ஊடகங்கள் மற்றும் ஒளிபரப்பாளர்களால் நடக்கிறது, ” என்று கம்பீர் கூறியிருந்தார்

கடந்த ஆண்டு 2023 இந்தியாவில் ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை தொடர் நடைபெற்றது. அதில் 2011 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட ஓரியோ பிஸ்கட் கம்பெனிக்கு மகேந்திர சிங் தோனி ஒரு விளம்பரத்தில் நடித்தார். அந்த விளம்பரத்தில் சூசகமாக 2011 ஆம் ஆண்டு இந்திய அணி உலக கோப்பையை வென்றது போல 2023 ஆம் ஆண்டு மீண்டும் இந்தியாவில் வெல்லும் என்பதாக காட்சிகள் வரும்.

நடந்து முடிந்த இந்த உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி மிகச் சிறப்பாக முதல் 10 ஆட்டங்களில் வென்று, பதினோராவது போட்டியாக இறுதிப்போட்டியில் துரதிஷ்டவசமாக ஆஸ்திரேலியா அணியிடம் தோல்வி அடைந்து கோப்பையை வெல்லும் வாய்ப்பை தவறவிடும். தற்பொழுது அந்த விளம்பரத்தை இந்த உலகக் கோப்பை தோல்வியோடு தொடர்பு படுத்தி கம்பீர் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டு இருக்கிறார்.

அதில் கம்பீர் கூறும் பொழுது “உலகக்கோப்பையில் விளையாடி வெற்றி பெற்றதால் எனக்கு அந்த அழுத்தமும் தெரியும் அதன் மகிழ்ச்சியும் தெரியும். 140 கோடி இந்திய மக்கள் மூச்சை இழுத்துப் பிடித்து வைத்திருக்கிறார்கள். நாம் உலகக் கோப்பையில் வெல்வது தான் முக்கியம். எனவே தோழர்களே இனி எந்த திருப்பத்தையும் உள்ளே கொண்டு வர வேண்டாம். விளம்பரங்களை அனுமதிக்காதீர்கள். இந்திய அணி வீரர்களை விளையாட விடுங்கள்” என்று அதாவது விளம்பரங்களை அனுமதிக்காதீர்கள் என மறைமுகமாக டோனி பப்ளிசிட்டி தேடுவதை அனுமதிக்காதீர்கள் என கம்பீர் தெரிவித்துள்ளது குறிப்பிடதக்கது.