372 ரன்கள் வித்தியாசத்தில் வரலாற்று சிறப்புமிக்க வெற்றி… தொடரைக் கைப்பற்றிய இந்தியா!

0

மும்பை வான்கடே மைதானத்தில் இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் இந்தியா 372 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. மும்பையில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அதையடுத்து முதல்நாளில் தாமதமாக தொடங்கிய ஆட்டத்தால் முதல் செஷன் நடக்கவில்லை.

பின்னர் ஆடிய இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 235 ரன்களோடு முடித்தது. அதையடுத்து இன்று தொடர்ந்து ஆடிய இந்தியா 325 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இந்திய அணியின் அனைத்து விக்கெட்களையும் நியுசி சுழல்பந்து வீச்சாளர் அஜாஸ் படேல் மட்டுமே வீழ்த்தினார். இதன் மூலம் ஒரு இன்னிங்ஸின் அனைத்து விக்கெட்களையும் வீழ்த்திய மூன்றாவது வீரரானார்.

இதையடுத்து களமிறங்கிய நியுசி அணிக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி காத்திருக்கிறது. சீட்டுக்கட்டு கோபுரம் தடதடவென விக்கெட்கள் வீழ்ந்து 62 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் இந்திய அணி 263 ரன்கள் முன்னிலை பெற்றது. ஆனால் பாலோ ஆன் கொடுக்காமல் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்து ஆடி வருகிறது.

இரண்டாம் நாள் ஆட்டமுடிவில் விக்கெட் இழப்பின்றி 69 ரன்கள் சேர்த்து 332 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் இருந்தது. பின்னர் மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்து ஆடிய இந்திய அணி 276 ரன்கள் சேர்த்து 7 விக்கெட்டை இழந்து டிக்ளேர் அறிவித்தது. இதன் மூலம் நியுசிலாந்து அணிக்கு வெற்றி இலக்காக 540 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது. இதையடுத்து களமிறங்கிய நியுசிலாந்து அணி முதல் இன்னிங்ஸ் போலவே சொதப்பலான ஆட்டத்தை ஆடியது.

மூன்றாம் நாள் முடிவில் 140 ரன்கள் சேர்த்து 5 விக்கெட்களை இழந்த நியுசிலாந்து இன்று நான்காம் நாள் ஆட்டத்தை தொடர்ந்து ஆடியது. இன்று மேற்கொண்டு 27 ரன்கள் எடுப்பதற்குள் மீதமிருந்த ஐந்து விக்கெட்களை இழந்தது. இதன் மூலம் இந்திய அணி வரலாற்று சிறப்புமிக்க 372 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியைப் பதிவு செய்துள்ளது. ஆட்ட நாயகனாக மயங்க் அகர்வால் தேர்வு செயப்பட்டுள்ளார். இந்த வெற்றியின் மூலம் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை வென்றுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here