ஐசிசி டி 20 தரவரிசை… எவ்வளவு தேடினாலும் இந்திய வீரர்களைக் காணவில்லை!

0

டி 20 போட்டிகளுக்கான தரவரிசையை இப்போது ஐசிசி வெளியிட்டுள்ளது. நடந்து முடிந்த உலகக்கோப்பை தொடருக்கு பின்னான ஐசிசி டி 20 பேட்ஸ்மேன்கள் மற்றும் பவுலர்களுக்கான தரவரிசையை வெளியிட்டுள்ளது. எதிர்பார்த்தது போலவே இந்த தொடரில் சிறப்பாக செயல்பட்ட வீரர்கள்தான் தரவரிசையில் ஆதிக்கம் செலுத்தியுள்ளனர். தொடரின் சூப்பர் 12 போட்டிகளிலேயே இந்தியா வெளியேறி விட்டதால் இந்திய வீரர்கள் பெரியளவில் இல்லை.

பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம் முதலிடத்தில் தொடர்கிறார். டேவிட் மலான் மற்றும் மார்க்ரம் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் ஐந்தாவது இடத்தில் உள்ளார். இந்திய வீரர் லோகேஷ் ராகுல் 6 ஆவது இடத்திலும், கோலி 8 ஆவது இடத்திலும் உள்ளனர். வேறு எந்த இந்திய வீரர்களும் முதல் 10 இடத்துக்குள் இல்லை.

இதுவாவது பரவாயில்லை பவுலர்களுக்கான தரவரிசையில் இந்திய பந்துவீச்சாளர்கள் ஒருவர் கூட இல்லை. இலங்கை வீரர் ஹசரங்கா, தப்ரைஸ் ஷம்ஸி மற்றும் ஆடம் ஸாம்பா ஆகியோர் முதல் 3 இடங்களில் உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பூம்ரா மற்றும் சஹல் உள்ளிட்டவர்கள் இடம்பிடித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.