காங்கிரஸ் உடன் இனைந்து மூன்றாவது அணி.! அதிமுக-திமுகவுடன் கூட்டணி கிடையாது.! கமல்ஹாசன் திட்டவட்டம்.!

0
Follow on Google News

சமீபத்தில் நடந்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் பேசிய கமல்ஹாசன் திமுக மற்றும் அதிமுகவையும் கடுமையாக பேசினார் அவர் பேசியதாவது, கொஞ்ச காலம் முன்பு பாண்டிச்சேரியில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், மக்கள் நீதி மய்யம் பற்றிய கேள்விக்கு, ‘நான் அரசியல் பத்தி பேசிக்கிட்டிருக்கேன்’ என்று கிண்டலாக பதில் சொன்னார் ஸ்டாலின். நாமெல்லாம் ஒரு கட்சியா என்ற மாதிரி பதில் கொடுத்திருந்தார். அதை மன்னித்துவிடலாம், ஆனால் மறக்க முடியாது.

ஆனால் இன்றைக்கு மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் என்று பேசுகிறார். அன்று நம் பெயரையே உச்சரிக்கத் தயங்கினார்கள். ஆனால், இன்று நம்மையும் ஒரு கட்சியாக பேசும் அளவுக்கு நமது வளர்ச்சி இருக்கிறது. இந்த வளர்ச்சியை நாம் இன்னும் அதிகரிக்க வேண்டும். கட்சிக்கு எங்கிருந்து பணம் வருகிறது என்று நம்மை கேட்கின்றனர். நாம் முறையாக மக்களிடம் வாங்கி அதை ஒழுங்கான கணக்கோடு பராமரித்து வருகிறோம்.

ஆனால் நம்மைக் கேள்வி கேட்பவர்கள் எப்படி அரசியலுக்கு வந்தார்கள், அரசியலுக்கு வரும்போது எப்படி இருந்தார்கள், இன்று எவ்வளவு சொத்துகளோடு இருக்கிறார்கள். இன்று என் மகள் அட்சராகூட இந்தப் பொதுக்குழுவுக்கு வருகிறேன் என்று சொன்னார்கள். ஆனால் அதை நான் தவிர்த்துவிட்டேன். அவர்களுக்கான பாதையை அவர்களே கட்டமைத்துக்கொள்கிறார்கள். இந்தக் கட்சியில் எனக்குப் பிறகு வருபவர்கள் இங்கிருந்தே, கட்சியில் இருந்தே வர வேண்டும்” என்று கூறிய கமல்ஹாசன்,

“ஜெயலலிதா, சசிகலா என்று முதலில் இரண்டு அக்காக்கள் இருந்தனர். பின் அவர்கள் அம்மா என அழைக்கப்பட்டனர். இப்போது ஊழல் செய்துவிட்டு சிறைக்குப் போன சசிகலாவை ஏதோ விடுதலை போராட்ட தியாகியைப் போல வரவேற்கிறார்கள். சசிகலா வெளியே வந்ததும் அதிமுகவில் ஏதாவது நடக்கும் என்று ஸ்டாலினும் காத்திருக்கிறார். இந்த அபூர்வ சகோதர்கள் ஓபிஎஸ், இபிஎஸ்ஸின் நடவடிக்கைகளால் அதிமுக விரைவில் இரண்டாக உடையும். அதற்காக நாம் காத்திராமல் நம்முடைய வேலைகளைத் தொடர்ந்து பார்ப்போம்.

பெரிய கட்சிகள் என்று திமுக, அதிமுகவை சொல்லி வந்தார்கள். இப்போது மக்கள் வேறுவிதமாக பேசிக்கொள்கிறார்கள். நாம் திமுக, அதிமுகவோடு சேர வேண்டாம். நாம் நேர்மையான அணி. டெல்லியில் மக்களுக்கான போராளியாக எனது அருமை நண்பர் கெஜ்ரிவால் ஆட்சியைப் பிடிக்கவில்லையா? அதுபோல நாமும் தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்போம். அதற்காக மக்களிடம் சேர்வோம், திமுக, அதிமுகவை மக்களிடம் அம்பலப்படுத்துவோம். 21ஆம் தேதி மாநாட்டுக்குத் தயாராவோம்” என கமல்ஹாசன் பேசினார்.இந்நிலையில் கமல்ஹாசன் திமுக, அதிமுகவுடன் கூட்டணி கிடையாது என அவருடைய பேச்சில் வெளிப்பட்டுள்ளதாக கூறிய அரசியல் பார்வையளர்கள் காங்கிரஸ் போன்ற கட்சிகளை ஒன்றிணைத்து முற்றாவது அணி அமைக்க வாய்ப்புகள் அதிகம் என அடித்து கூறி வருகின்றனர்.