டாஸ்மாக் கடை திறப்பு ..! தமிழக மக்களையும் குழப்பி தனது ரசிகர்களையும் ஏமாற்றிய சிஸ்டம் தூங்குகிறதா.?

0
Follow on Google News

1996ல் இருந்து நான் எப்ப வருவேன் எப்படி வருவேன்னு தெரியாது ஆனால் வரவேண்டிய நேரத்தில் கரெக்ட்டா வருவேன், ஆண்டவன் கட்டளையிட்ட உடனே அரசியலுக்கு வருவேன் என தனது ரசிகர்களை அரசியலுக்கு வருவேன், வரமாட்டேன் என தெளிவாக பதில் கூறாமல் குழப்பதிலே வைத்திருந்தார் நடிகர் ரஜினிகாந்த், ஒரு கட்டடத்தில் தலைவர் இனி அரசியலுக்கு வரமாட்டார் என அவரவர்கள் பொழப்பை பார்க்க சென்று விட்டார்கள்.

இந்த நிலையில் காலம் கடந்து முன்னால் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின் 2017ஆம் ஆண்டு தனக்கு சொந்தமான ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரசிகர் சந்திப்பை நடத்தி மீண்டும் அவர் ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தினார் ரஜினிகாந்த், 6 நாட்கள் நடந்த ரசிகர்கள் சந்திப்பின் இறுதி நாளில் தனது அரசியல் அறிவிப்பை வெளியிட்டார் ரஜினிகாந்த் அதில், நான் அரசியலுக்கு வருவது உறுதி. இது காலத்தின் கட்டாயம்… இது காலத்தின் கட்டாயம்… வரப்போகிற சட்டமன்ற தேர்தலில் நான் தனிக்கட்சி ஆரம்பித்து தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளிலும் போட்டியிடுவோம் என அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.

மேலும் கண்ணன் அர்ச்சுனனிடம் கடமையை செய், யுத்தத்தை நான் பார்த்துக் கொள்கிறேன் என்றார். யுத்தம் செய் நான் ஆள்கிறேன், செத்தால் வீர மரணம். யுத்தம் செய்யாமல் போனால் உன்னை கோழை என்று சொல்வார்கள். நான் எல்லாவற்றையும் ஏற்கனவே முடித்துவிட்டேன். இனி அம்பு விடுவதுதான் பாக்கி என அவர்கள் ரசிகர்களை உசுப்பேத்தி விட்டது மாட்டமில்லாமல் தமிழக மக்களையும் குழப்பத்தில் ஆழ்த்தினார் ரஜினிகாந்த்

மேலும் அரசியல் ரொம்ப கெட்டுப்போச்சு… நாட்டு அரசியல் ரொம்ப கெட்டுப் போச்சு… ஜனநாயகம் சீர்கெட்டுப் போச்சு. தமிழ்நாட்டில் நடந்த அரசியல் நிகழ்ச்சிகள், சம்பவங்கள், ஒவ்வொரு தமிழ் மக்களையும் தலைகுனிய வைத்துவிட்டது. எல்லா மாநிலத்து மக்களும் நம்மைப்பார்த்து சிரித்துக் கொண்டு இருக்கிறார்கள். இந்த நேரத்தில் நான் இந்த முடிவு எடுக்கவில்லை என்று சொன்னால், என்னை வாழ வைத்த தெய்வங்களான தமிழக மக்களுக்கு நல்லது செய்வதற்கு ஜனநாயக ரீதியாக, நான் ஒரு முயற்சி எடுக்கவில்லை என்றால், சாகிற வரைக்கும் அது என்னை துரத்தும்.

மாத்தணும் எல்லாவற்றையும் மாத்தணும். என பேசிவிட்டு அடுத்த மூன்று வருடத்தில் புதிய கட்சி எப்ப தொடங்குவது, புதிய கட்சியின் பெயர் என்ன என்பது பற்றி எந்த தகவலும் இல்லை. ஆனால் அடுத்தடுத்து சினிமாவில் நடிப்பதில் கவனம் செலுத்தி வந்தார், அவரது ரசிகர்களும் இந்த படத்தை முடித்துவிட்டு தலைவர் கட்சியை தொடங்கிவிடுவார் என எதிர்பார்ப்பில் இருக்க, ஆனால் அடுத்தடுத்து ரஜினி நடிப்பில் திரைப்படம் மட்டுமே வெளியானது தவிர புதிய அரசியல் கட்சி தொடர்பாக எந்த அறிவிப்பும் இல்லை.

இதனை தொடர்ந்து தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு கொரோனவை காரணம் காட்டி புதிய அரசியல் கட்சி தொடங்குவதை கை விடுவதாக அறிவித்துவிட்டு, அவர் ரசிகர்களை மட்டுமில்லை மூன்று வருடமாக காத்திருந்த தமிழக மக்களையும் ஏமாற்றி விட்டு அண்ணாத்தே படத்தில் நடிக்க சென்று விட்டார் ரஜினிகாந்த். இந்நிலையில் கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காலத்தில் அதிமுக அரசு டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கு நடிகர் ரஜினிகாந்த் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

அவர் தனது டிவீட்டர் பக்கத்தில் இந்த நேரத்தில் அரசு டாஸ்மாக் கடைகளை மறுபடி திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்து விட வேண்டும். தயவுகூர்ந்து கஜானாவை நிரப்ப நல்ல வழிகளை பாருங்கள் என பதிவு செய்திருந்தார். இந்நிலையில் தற்போது கொரோனா தொற்று இன்னும் முடிவுக்கு வராத நிலையில் திமுக அரசு டாஸ்மாக் கடைகளை திறக்க இருப்பது குறித்து கருத்து தெரிவிக்க வேண்டும் என பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.