இந்து பண்பாடு புத்தகத்தில் இல்லை, ரத்தத்தில் உள்ளது. ! திருமாவளவனுக்கு பாடம் எடுத்த பேராசிரியர்.! வீடியோ உள்ளே….

0
Follow on Google News

சமீபத்தில் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் இந்து மனு தர்மப்படி இந்து பெண்கள் அனைவரும் விபச்சாரிகள் என பேசியது இந்துக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது, குறிப்பாக தமிழக பெண்கள் கடும் கோவத்தில் இருந்து வருகின்றனர், இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பாஜக மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் இராம.ஸ்ரீநிவாசன் அவர்கள் திருமாவளவனுக்கு பாடம் கற்பிக்கும் வகையில் அவர் அளித்த பேட்டி சமூக வளைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

பேராசிரியர் பேசுகையில், சமீபத்தில் திருமாவளவன் பேசிய பேச்சு வன்மையாக கண்டிக்கத்தக்கது, இதற்கு முன் இந்து கோவில்களை புத்த விகாரங்களாக மாற்ற வேண்டும் என்று திருமா பேசிய போதும், இந்து கோவில் கோபுரங்கள் ஆபாச சின்னமாக இருக்கும் என்று திருமா பேசியபோதும், அமைதியாக இருந்த இந்து சமுதாயம், தற்போது இந்து பெண்கள் விபச்சாரிகள் என்று கூறியதும் ஒவ்வொரு இந்துக்களும் கொதித்து போய் உள்ளார்கள்,

ஆங்கிலேயன் இந்த நாட்டை ஆட்சி செய்த போது, இந்த தேசம் தன்னை பற்றிய பெருமிதமான உணர்வுக்கு வந்து விடக்கூடாது என்பதற்காக, இந்த நாட்டை பற்றி கொச்சைப்படுத்தியும், கேவலப்படுத்தியும், இந்த நாட்டின் உள்ள புராண இதிகாசங்களை வித விதமாக விமர்சனம் செய்துவிட்டு சென்றுள்ளார்கள், அதயெல்லாம் எடுத்து கொண்டு பேசும் வெள்ளைக்காரர்களின் பிள்ளைகள் தான் இந்த திருமாவளவனின் கூட்டம் என பேசிய பேராசிரியர்.

மேலும் ஒரு நகரிகத்தின் பொக்கிஷம் பெண்கள், அவர்களை அவமதிப்பதை எந்த ஒரு சமுதாயமும் ஏற்று கொள்ளாது, அதை பார்த்து கொண்டு இருப்பவன் ஆண்மகன் இல்லை, பெண்களின் மரியாதையை காப்பாற்ற கூடியவன் தான் ஆண்மகன் என்பது இந்தியா பண்பாட்டின் மரபு, அதை கொச்சை படுத்தி பேசுகிறார் திருமாவளவன், இது திருமாவளவன் என்கிற தனி மனிதன் பேசியதாக பார்க்கவில்லை என பேசிய பேராசிரியர்.

தொடர்ந்து இந்து நம்பிக்கைகளை கேலி பேசுகின்ற ஒரு கூட்டம் இருக்கிறது, அது கறுப்பர் கூட்டம் என்கிற பெயரில் You Tube மூலம் பேசுகிற கூட்டமும் இருக்கிறது, ஆனால் அந்த கறுப்பர் கூட்டம் பின்னால் இருக்கின்ற கயவர் கூட்டமாக தான் திருமா போன்றவர்களை பார்க்கின்றேன் என பாஜக மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் இராம.ஸ்ரீநிவாசன் பேசிய முழு வீடியோ லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.