தமிழ்நாடு என்பதை விட தமிழகம் என்று சொன்னால் தான் சரியாக இருக்கும் என தமிழக ஆளுநர் பேசியுள்ளது தமிழக அரசியலில் மிக பெரிய விவாத பொருளாக மாறியுள்ளது. இந்நிலையில் ஆளுநரின் கருத்துக்கு வலு சேர்க்கும் விதத்தில் தமிழகம் என்பதே சரியானது என ஆதாரங்களை முன் வைத்து திமுகவினருக்கு பதிலடி கொடுத்துள்ளார் பாஜக மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் இராம ஸ்ரீனிவாசன்.
இது குறித்து அவர் பேசுகையில், முதலில் தமிழ்நாடு என்ற வார்த்தையை தமிழ் இலக்கியங்களில் எங்கும் இல்லை, தொல்காப்பியத்தில் தமிழ்நாட்டின் வட எல்லையாக இமயமலையும் தென் எல்லையாக கடலும் சொல்லப்பட்டிருக்கிறது என சுட்டி காட்டிய பேராசிரியர்.
மேலும் இந்தியாவின் தேசிய கவி பாரதி தான் முதன்முதலாக இதை தமிழ்நாடு என்று குறிப்பிட்டார். கல்வி சிறந்த தமிழ்நாடு உயர் கம்பன் பிறந்த தமிழ்நாடு என்ற பாடல் வரிகளை தமிழுக்கு அறிமுகப்படுத்தியவன் பாரதி தான், அதற்கு முன்னதாக இந்த வார்த்தை எங்கும் இல்லை, அது போலவே நாம் அன்றாடம் பாடும் தமிழ் தாய் வாழ்த்து எங்குமே தமிழ்நாடு என்று குறிப்பிடப்படவில்லை. தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும் என்று தான் பாடல் வரிகள் சொல்கின்றன…. 1950 களுக்கு முன்பாக இந்தப் பகுதி சென்னை மாகாணம் என்று தான் அழைக்கப்பட்டது. தமிழ்நாடு என்பதே அண்மைக்கால கருத்தாக்கம்தான் என தெரிவித்த பேராசிரியர்.
மேலும், பல்வேறு அறிஞர்களும் அரசியல் தலைவர்களும் கூட தமிழகம் என்ற வார்த்தையை நிறைய பயன்படுத்தி இருக்கிறார்கள். குறிப்பாக ஒன்றை நினைவூட்ட விரும்புகிறேன், பேரறிஞர் என்று நாம் புகழும் அண்ணாதுரை அவர்கள் சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழாவில் உரையாற்றும்போது, அந்த உரையின் தலைப்பாக ஏ தாழ்ந்த தமிழகமே என்று தான் பேசுகிறார்.
இதே தலைப்பில் அண்ணா துரையின் சொற்பொழிவு புத்தகமாகவும் வந்துள்ளது என சுட்டி காட்டியுள்ள பேராசிரியர். மேலும் கருணாநிதி அவர்கள் தனது எழுத்துக்களில் ஆயிரக்கணக்கான இடங்களில் தமிழக என்கிற வார்த்தையை பயன்படுத்தி இருக்கிறார், திராவிடர் கழகத்தின் எழுத்தாளர்களும் இதற்கு விதிவிலக்கல்ல, ஆனால் அதையே ஒரு ஆளுநர் சொல்லும் போது அவர்கள் பொங்கி எழுகிறார்கள்.
அண்ணாதுரை தாழ்ந்த தமிழகமே என்று சொல்லும் போது வராத கோபம் ஆளுநர் இது தமிழகம் என்று சொல்லும் போது ஏன் வருகிறது…. திராவிடம் என்பதும் தமிழ் என்பதும் ஒரே பொருள் தரும் இரண்டு வார்த்தைகள் என்று இப்போது தலையங்கம் எழுதும் முரசொலி. திராவிட நாடு என்றால் திராவிட மொழிக் குடும்பம் என்றால் அதில் தெலுங்கு, கன்னடம், மலையாளம் இவை எல்லாம் இல்லையா என்பதை எடுத்துச் சொல்ல வேண்டும் என கேள்வி எழுப்பியுள்ள பேராசிரியர்.
ஆளுநர் என்ன பேசினாலும் எதிர்ப்பது என்பதுதான், ஆளுங்கட்சியின் வழக்கமாக இருக்கிறது சென்ற முறை ஆளுநர் சட்டமன்றத்தில் உரையாற்றும்போது அவரது உரையின் நிறைவாக ஜெய்ஹிந்த் என்றும் ஜெய் தமிழ்நாடு என்றும் சொல்லி ஒரு புதிய மரபை தோற்றுவித்தவர் என்பதை நினைவூட்டிய பேராசிரியர்.
தமிழ்நாடு என்ற கருத்தாக்கத்தை உருவாக்கியவர்கள் தேசியவாதிகள்
தமிழுக்கென்று ஒரு மாநிலத்தை உருவாக்கியவர்கள் தேசியவாதிகள்
இதை தமிழகம் என்றும் அழைக்கலாம் என்று புரிய வைப்பவர்களும் தேசியவாதிகள்
இதில் திராவிடம் என்ற தேவையற்ற இனவாதத்தை கலப்படம் செய்வதுதான் திமுக என தமிழகம் – தமிழ்நாடு இடையில் எழுந்துள்ளது பிரச்சனை குறித்து வரலாற்று சம்பவங்களை குறிப்பிட்டு விளக்கம் கொடுத்து இந்த சர்ச்சைக்கு முற்று புள்ளி வைத்துள்ளார் பாஜக மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் இராம, ஸ்ரீநிவாசன்.