தமிழக இந்துக்கள் எழுச்சி.. அச்சத்தில் எதிர்க்கட்சிகள்..!வேல் யாத்திரைக்குத் தடை விதிக்க வேண்டுமாம்.!

0
Follow on Google News

வருகிற சட்டமன்ற தேர்தலில் மிக பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தலைமையில், நவம்பர் 6 ஆம் தேதி திருத்தணியில் பாஜக சார்பில் தொடங்கும் ‘வெற்றிவேல் யாத்திரை’ டிசம்பர் 6ல் திருச்செந்துாரில் நிறைவடைய தமிழக பாஜக திட்டமிட்டுள்ளது, யாத்திரையின் அடையாள சின்னம் மற்றும் பாடலும் சமீபத்தில் பாஜக தலைமையகமான கமலாலயத்தில் எல்.முருகன் வெளியிட்டார்.

இந்த யாத்திரைக்காக உருவாக்கப்பட்டுள்ள பாடலில், ” அந்த பொன்மனச்செம்மலின் அம்சமாய் நாங்கள் மோடியைக் கண்டோமடா என்ற வார்த்தைகளின் போது எம்ஜிஆர் அப்படியே மோடியாக மாறுகிறார் இந்த காட்சிகள் மற்றும் பாடல் வரிகள் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது, கடந்த காலங்களில் அத்வானியின் ரதயாத்திரை, தேசிய அரசியலில் பெறும் தாக்கங்களை எற்படுத்தியது. அதே போன்று வேல் யாத்திரை மூலம், தமிழகத்தில் மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்த தமிழக பாஜக தலைவர் எல். முருகனின் யுக்தியை தான், தமிழக பாஜக வெற்றிவேல் யாத்திரை மூலம் செயல்படுத்த இருக்கிறது என்று அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் தமிழக பாஜக சார்பில் நடைபெற இருக்கும் வேல் யாத்திரைக்கு தமிழக மக்கள் மத்தியில் இருக்கும் அமோக வரவேற்பை கண்டு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அச்சத்தில் உள்ளன, இந்த வேல் யாத்திரை நடைபெற்றால் இந்துக்களுக்கு எதிராக பேசி வரும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு எதிராக தமிழக மக்களிடம் மிக பெரிய மாற்றங்கள் ஏற்படும் என்பதை உணர்ந்த திமுக, அதன் கூட்டணி காட்சிகளை தூண்டிவிட்டு, வேல் யாத்திரைக்கு தடை விதிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதனை தொடர்ந்து திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தை, கம்யூனிஸ்ட் காட்சிகள் பாஜக சார்பில் நடைபெற இருக்கும் வேல் யாத்திரையை தடை செய்ய வலியுறுத்து வருகின்றனர், விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,பாஜக சார்பில் நவம்மர்-06 முதல் தொடங்கி நடத்தப்படவுள்ள ‘வேல் யாத்திரை’ தமிழ்நாட்டில் மதக்கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் திட்டமிடப்பட்டுள்ளதோ என்ற ஐயம் எழுந்துள்ளது.

எனவே, இதற்குத் தமிழக அரசு அனுமதியளிக்கக்கூடாது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம் என தெரிவித்துள்ளார், இதற்கு தமிழக இந்துக்களிடம் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது, தமிழ் கடவுள் முருகன் பெயரில் நடைபெறும் வேல் யாத்திரைக்கு தடையா.? என திருமாவளவனுக்கு எதிராக தமிழக இந்துக்கள் அவர்களின் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். ஏற்கனவே இந்து பெண்கள் குறித்து பேசி சர்ச்சையில் சிக்கியுள்ள திருமாவளவன் தற்போது தமிழ் கடவுள் முருகன் பெயரில் நடைபெற இருக்கும் வேல் யாத்திரைக்கு தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.