ஒரு பைத்தியம்…….செயல்கள் பைத்தியக்காரத்தனமானவை என்பது உண்மையானது.! ரஜினி குறித்து மனுஷ்ய புத்திரன் சர்ச்சை கருத்து.!

0
Follow on Google News

நடிகர் ரஜினிகாந்த் புதிய அரசியல் கட்சி தொடங்க இருப்பதும் குறித்தும், அவருடைய உடல்நலம் குறித்தும் அவர் அறிக்கையின் பெயரில் வெளியான தகவல் குறித்து விளக்கம் கொடுத்த ரஜினிகாந்த், “என் அறிக்கை போல ஒரு கடிதம் சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் தீவிரமாகப் பரவிக் கொண்டு வருகிறது. அது என்னுடைய அறிக்கை அல்ல என்பது அனைவருக்கும் தெரியும். இருப்பினும், அதில் வந்திருக்கும் என் உடல்நிலை மற்றும் எனக்கு மருத்துவர்கள் அளித்த அறிவுரைகள் குறித்த தகவல்கள் அனைத்தும் உண்மை. இதைப் பற்றி தகுந்த நேரத்தில் என் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளோடு கலந்தாலோசித்து எனது அரசிய்ல் நிலைப்பாட்டைப் பற்றி மக்களுக்குத் தெரிவிப்பேன்.” என்று தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்த் விளக்கம் குறித்து திமுகவை சேர்ந்த மனுஷ்யபுத்திரன் கருத்து தெரிவிக்கையில், இது ரஜினி சாரைப்பற்றியதல்ல என குறிப்பிட்டுள்ளவர், என் காதல் உண்மையானதல்ல ஆனால அந்தக் காதலைப்பற்றிய என் கவிதைகள் உண்மையானவை

என் போராட்டங்கள் உண்மையானவை ஆனால் அந்தப்போராட்டத்தின் வெற்றிகள் உண்மையானவையல்ல, என் கடவுள் இருக்கிறார் என்பது உண்மையானதல்ல ஆனால் அந்தக் கடவுளின் கருணை உண்மையானது, நான் ஒரு பைத்தியம் என்று சொல்லப்படுவது உண்மையானதல்ல ஆனால் என் செயல்கள் பைத்தியக்காரத்தனமானவை என்பது உண்மையானது என மனுஷ்ய புத்திரன் சர்ச்சைக்குரிய வகையில் ரஜினிகாந்த் பெயரை குறிப்பிடாமல் அவருடைய விளக்கத்தை பைத்தியக்காரத்தனம் என குறிப்பிட்டுள்ளது ரஜினி ரசிகர்களை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.

error: Content is protected !!