பப்ளிசிட்டிக்காக இது போன்று செயல்படுகிறாரா சூர்யா.? மரண கலாய் கலாய்த்த காயத்ரி ரகுராம்..

0
Follow on Google News

நீட் தேர்வுக்கு எதிராக நடிகர் சூர்யா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில். அரசுப்பள்ளியில் படித்து உயர்கல்வி பெறுகிற மாணவர்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு ‘கல்வியே ஆயுதம்’. ஏழைகளுக்கு ஒருவிதமான கல்வி வாய்ப்பும், பணம் படைத்தவர்களுக்கு ஒருவிதமான கல்வி வாய்ப்பும் இருக்கிற சூழலில், தகுதியைத் தீர்மானிக்க ‘ஒரே தேர்வு முறை’ என்பது சமூக நீதிக்கு எதிரானது.

எளிய குடும்பத்தினர் கல்வி பெற ஆதாரமாக இருக்கும் அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் படிக்கும் முறையே 40% மற்றும் 25% மாணவர்களில் 20% மாணவர்களே உயர்கல்விகளுக்கு செல்கின்றனர். தங்கள் எதிர்காலத்திற்காக 12 ஆண்டுகள் பள்ளிக்கல்வி படித்த பிறகும் நுழைவுத் தேர்வு மூலமாகவே உயர்கல்வி செல்ல முடியும் என்பது கல்வித் தளத்தில் அவர்களை பின்னுக்குத் தள்ளும் சமூக அநீதி.

‘நீட் நுழைவுத்தேர்வு’ வைக்கப்படுவதன் மூலம் மருத்துவராக வேண்டும் என்கிற லட்சியத்தோடு படித்த ஆயிரக்கணக்கான ஏழை மாணவர்களின் கனவில் தீ வைக்கப்பட்டது. அது ஏற்படுத்திய காயத்தின் வடுக்கள் காலத்திற்கும் மறையாது. மாணவர் நலனுக்கும், மாநில நலனுக்கும் ‘நீட்’ போன்ற நுழைவுத் தேர்வுகள் ஆபத்தானவை. இந்தியா போன்ற பல்வேறு மொழி, பண்பாடு, கலாச்சார வேற்றுமைகள் நிறைந்த நாட்டில், கல்வி என்பது மாநில உரிமையாக இருப்பது அவசியம்.

அது ஒன்றே, நிரந்தர தீர்வு. ‘கல்வி மாநில உரிமை’ என்கிற கொள்கையில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன் என நடிகர் சூர்யா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். இதற்கு பாஜக கலை மற்றும் கலாச்சார பிரிவு தலைவர் நடிகை காயத்ரி ரகுராம் பதிலளித்துள்ளார். அதில், தயவு செய்து நீட் தேர்வை தடை செய்வது பற்றி தமிழக முதல்வர் மற்றும் அமைசர்களிடம் முறையிடுங்கள்.

அவர்கள் உங்களுக்கு உதவி செய்வார்கள், அல்லது இதை போற்றி பொய்யான தகவலை தெரிவிப்பார்கள். உங்கள் அகரம் அறக்கட்டளையில் மட்டும் நீட் தேர்வை ரத்து செய்து கொள்ளுங்கள். நாங்கள் மக்கள் தெளிவாக இருக்கிறோம், எங்களுக்கு நீட் தேர்வு ரத்து என்பது தேவையில்லை. மாணவர்களின் எதிர்காலத்தின் வளர்ச்சியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவித்த காயத்ரி ரகுராம், அடுத்து என்ன படம்.? இன்னும் ஏதேனும் விளம்பரம் இருக்கா.? என நடிகர் சூர்யாவை நக்கல் செய்யும் விதத்தில் பதிலளித்துள்ளார்.