பப்ஜி மதனிடம் தீவிர விசாரணை….வங்கியில் கோடி கணக்கில் பணம்… பிட்காயினாக மாற்றி முதலீடு..

0
Follow on Google News

நாடெங்கும் இன்றைய இளைஞர்களின் பொழுது போக்காக இருப்பது ஆண்ட்ராய்ட் போன்தான். இதில் அதிகமாக நேரமாக இளைஞர் வாட்ஸ் அப், யூ ட்யூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்ற சமூகவலைத்தளங்களிலும் நேரத்தை செலவிடுகிறார்கள். மேலும் பொழுதுபோக்காக ஆண்ட்ராய்டு கேம்ஸ் மூழ்கி விடுகிறார்கள்.

இதில் பஜ்ஜி கேம்ஸ் தான் இளைஞர்களை மிகவும் கவர்ந்தது. இதில் இளைஞர்கள் நேரத்தை அதிகமாக செலவழிப்பதால் தூக்கத்தை இழந்து மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். முக்கியமாகஇதில் அதிக பாதிப்புக்கு உள்ளானது சிறுவர்களும் சிறுமிகளுமே. இதனால் மத்திய அரசு பப்ஜி மேலும் சில சீன ஆண்ட்ராய்ட் ஆப்ஸ்களை தடை செய்தது. இதனால் பப்ஜி விளையாட்டு முழுவதுமாக தடை செய்யப்பட்டது ஆனால் பப்ஜி பிரியர்கள் பஜ்ஜி கேமை இணைத்தளம் மூலம் எப்படியோ டவுன்லோட் செய்து விளையாடி வந்தனர்.

இந்த தடை செய்யப்பட்ட பஜ்ஜி கேமை வைத்துதான் மதன் ஒரு யூடியூப் சேனல் தொடங்கி அதில் பஞ்சு கேம் விளையாடுவது லைவ் ஸ்ட்ரீமிங் போட்டு சிறுவர் சிறுமிகளின் ஆபாசமாகவும் பேசி வந்து அதை யூடியூபில் அப்லோட் செய்துள்ளான். இவனது அட்டகாசம் அதிகரிக்கவே கடந்த சில வாரங்கள் முன்பு இவன் மீது புகார் எழுந்தது. இவன் சிறுவர்-சிறுமிகளை வைத்து ஆபாசமாக பப்ஜி கேம் விளையாடும் போது பேசி வந்தது தெரியவந்தது.

போலீசாரும் மதன் மீது கைது செய்ய முயன்றது தெரிந்து மதன் தலைமறைவானார். போலீசார் அவரது செல்போன் மூலம் நான் இருக்கும் இடத்தை தேட முயற்சி செய்தனர் அப்போது ஒரே நம்பருக்கு அடிக்கடி மதன் நம்பர் போன் போனது. அந்தநம்பரை டிரேஸ் செய்தபோது அதை சேலத்தில் ஒரு வீட்டை காட்ட அங்கு போலீசார் விரைந்து சென்று பார்த்த போது அங்கு மதனின் மனைவியான கிருத்திகா இருந்தார். குழந்தையுடன் இருந்த கிருத்திகாவை நீண்ட விசாரணைக்குப் பிறகு மதனுக்கு உடந்தையாக செயல்பட்டதால் போலீசார் கைது செய்தனர்.

கிருத்திகாவிடம் நடைபெற்ற கிடுக்குப்பிடி விசாரணையில் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார். மேலும் கைது செய்ய தீவிரமாக தனிப்பிரிவு அமைத்து தேடி வந்த போலீசார் கடைசியில் தர்மபுரியில் பதுங்கி இருந்த மதனை கைது செய்தது. மதன் மற்றும் கிருத்திகா வங்கி கணக்கை சோதனை செய்தபோது இரண்டு பேர் வங்கி கணக்கிலும் கோடிக்கணக்கான பணம் உள்ளதாக தெரிவித்தனர். அவர்கள் பல பேரை ஏமாற்றியும், யூடியூபில் பப்ஜி கேம் விளையாட்டு மூலம் பணத்தை பிட்காயினாக மாற்றி முதலீடு செய்தது தெரியவந்தது. மதன் இந்த சம்பாத்தியத்தின் மூலம் வழங்கிய சொகுசு கார்களை பறிமுதல் செய்தனர். மதனிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.