மருத்துவமனையில் ரஜினிகாந்த்.. டிசம்பர் 31 அரசியல் அறிவிப்பு வெளியாகுமா.? அல்லது தேதி ஒத்திவைக்கப்படுமா.?

0
Follow on Google News

நான் அரசியலுக்கு வருவது உறுதி, தனிக்கட்சி தொடங்கி தமிழகம் முழுவதும் வரும் 2021 சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுவேன், என ரஜினிகாந்த் அரசியல் அறிவிப்பு வெளியாகி மூன்று வருடங்கள் கடந்த நிலையில், இதுவரை அரசியல் கட்சி தொடங்கமால் இருந்து வந்த நிலையில், ரஜினிகாந்த் புதிய கட்சி தொடங்குவரா.? மாட்டாரா.? என்ற குழப்பமான சூழல் நிலவி வந்த நிலையில், சில தினங்களுக்கு முன் ஜனவரியில் புதிய கட்சி தொடக்கம், டிசம்பர் 31 அறிவிப்பு வெளியிடப்படும் என அதிரடியான அறிவிப்பு வெளியிட்டார் நடிகர் ரஜினிகாந்த்.

புதிய கட்சி அறிவிப்பு வெளியான உடனே கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர்களை நியமித்து அதற்கான வேலையை தொடங்கினார் ரஜினிகாந்த். இதனைத்தொடர்ந்து கொரோன தொற்று வருவதற்கு முன்பாக தொடங்கப்பட்ட அண்ணாத்தே படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டு உள்ளதால், தற்போது மீதி படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக ஹைதராபாத் சென்றார் ரஜினி. ஹைதராபாத்தில் இருந்த ரஜினிகாந்துக்கு திடீர் உடல் நலக் குறைவு ஏற்பட்டதால், ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருக்கும் நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருக்குமோ என்ற அச்சம் நிலவி வந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு கொரோன தொற்று கிடையாது என உறுதி செய்யப்பட்டுள்ளது, அவருக்கு ரத்த மாறுதல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என மருத்துவமனை தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்னும் இரண்டு அல்லது மூன்று தினங்கள் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெறுவார் ரஜினிகாந்த் என மருத்துவமனை தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது,

இந்நிலையில் புதிய கட்சிக்கான அறிவிப்பை டிசம்பர் 31-ஆம் தேதி நடிகர் ரஜினிகாந்த் அறிவிக்க இருந்த நிலையில், இன்னும் நான்கே நாட்கள் மட்டுமே அறிவிப்புக்கான தேதி உள்ள நிலையில், அதற்குள் நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி அரசியல் அறிவிப்பை வெளியிடுவாரா அல்லது அரசியல் அறிவிப்பு தள்ளி வைக்கப்படுமா என்ற குழப்பம் நிலவி வருகிறது. இந்த நிலையில் ரஜினிகாந்த் அவர்களிடம் நெருங்கிய தொடர்பில் இருப்பவர்களிடம் நாம் விசாரித்ததில் விரைவில் ரஜினிகாந்த் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி ஜனவரி மாதம் தொடங்க இருக்கும் அரசியல் அறிவிப்பை வெளியிடுவார் என்றும்,

அப்படியில்லையென்றால் மருத்துவமனையில் இருந்து கொண்டே டிசம்பர் 31-ஆம் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில் அரசியல் அறிவிப்பை வெளியிடுவார் என உறுதிப்படுத்தியுள்ளனர்.இதனைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் அறிவிப்பு டிசம்பர் 31-ஆம் தேதி வெளியாவதில் எந்த சந்தேகமும் இல்லை என்பதை உறுதி படுத்தப்பட்டுள்ளது, மேலும் ஜனவரி மாதம் புதிய கட்சியை தொடங்குவதற்கான ஏற்பாடுகளை இப்போதிருந்தே தீவிரமாக செயல்பட்டு ஒரு ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் செயல்பட்டு அதற்கான இடத்தை மதுரையில் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.