உடனே Operation start பண்ணுக… விஜய் போட்ட உத்தரவு… ஆட்டத்தை தொடங்கிய செங்கோட்டையன்…

0
Follow on Google News

நடந்து முடிந்த இடைதேர்தல் முடிவுகள் ஒவ்வொரு கட்சிக்கு என்ன பலம் உள்ளது என்பதை வெளிப்படுத்தி இருக்கிறது, குறிப்பாக ஆளும் தவெக அரசுக்கு பல அரசியல் பாடங்களை நடந்து முடிந்த இடைதேர்தல் கற்று கொடுத்து இருக்கிறது, குறிப்பாக நடந்து முடிந்த இரன்டு தொகுதி இடைதேர்தலிலும், திமுக – அதிமுக ஆகிய இரண்டு காட்சிகளில் ஒரு கட்சி டெபாசிட் இழக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை, இதில் அதிமுக கட்சிக்கென அந்த இரட்டை இலை வாக்குகள் இன்னும் இருக்கிறது, எம் ஜி ஆர்க்கான வாக்கு வங்கி ஜெயலலிதாவுக்கான வாக்கு வாங்கி இருந்து கொண்டே தான் இருக்கிறது என்பதை நடந்து முடிந்த இடைதேர்தல் முடிவுகள் தவெக வுக்கு உணர்த்தி இருக்கிறது, மேலும் அதிமுகவை முற்றிலும் தங்கள் பக்கம் கொண்டு வந்தால் தான் அடுத்தடுத்து நடக்கும் தேர்தலில் திமுகவை மிக எளிதாக வெற்றி பெற முடியும் என கணக்கு போடுகிறது தவெக.

இந்நிலையில் தற்பொழுது அதிமுகவில் இரண்டு அணியாக பிரிந்து கிடக்கிறார்கள், அதில் எஸ் பி வேலுமணி மற்றும் சி வி சண்முகம் அணியினர் தவெக வுக்கு ஆதரவாக இருக்கிறார்கள், ஆனால் அதிமுகவில் இரண்டு அணியாக பிரிந்து இருப்பதால், அதில் ஒரு அணியினர் தவெக வுக்கு ஆதரவு கொடுப்பதால் தவெக வளர்ச்சிக்கு எந்த வகையிலும் நன்மை இல்லை என கருதுகிறாராம் முதல்வர் விஜய்.

அதிமுக வாக்கு முழுமையாக தவெக வுக்கு வர வேண்டும், தேர்தல் காலத்தில் திமுக vs தவெக என்கிற இரண்டு கட்சிகள் மட்டுமே போட்டியில் இருக்க வேண்டும், அப்படி ஒரு சூழல் உருவாக வேண்டும் என்றால், தற்பொழுது தவெக வாக்கு வங்கியுடன் அதிமுக வாக்கு வங்கி முழுமையாக இணைய வேண்டும், அப்போது தான் அடுத்தடுத்து நடக்கும் தேர்தலில் தொடர் வெற்றியை பெற்று எம் ஜி ஆர் போன்று ஒரு நிலையான ஆட்சியை அமைக்க முடியும் என கருத்துகிறாராம் முதல்வர் விஜய்.

அந்த வகையில் அதிமுக இரண்டு பிரிவுகளில் இருந்து கொண்டு, அதில் ஒரு பிரிவு நமக்கு ஆதரவு கொடுப்பதை விட, அதிமுகவில் இருக்கும் ஒரு பிரிவை அப்படியே தவெகவுக்கு கொண்டு வருவதற்கான வேலையை உடனே செய்யுங்கள் என மூத்த அமைச்சர் செங்கோட்டையனுக்கு அசைன்மென்ட் கொடுத்து இருக்கிறாராம் முதல்வர் விஜய். இதன் தொடர்ச்சியாக அதிமுகவில் இருக்கும் ஒரு அணியுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம் செங்கோட்டையன்.

மேலும் சமீபத்தில் மேலும் 15 சட்டமன்ற உறுப்பினர்கள் தவெக பக்கம் வருவார்கள் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்ததின் பின்னணியில் கூட இந்த அப்ரேஷன் தான் என்கிறது அரசியல் வட்டாரங்கள், மேலும் அமைச்சர் ஆதவா அர்ஜுனா கூட அதிமுகவை சேர்ந்த பெரும்பாலான ஒன்றிய செயலாளர்கள் தவெக பக்கம் வர இருப்பதாக பேசி இருப்பதின் பின்னணியும் இது தான் என கூறப்படுகிறது.

அந்த வகையில் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர் கோடி தூக்கி இருக்கும் எஸ் பி வேலுமணி மற்றும் சி வி சண்முகம் ஆகிய இருவரும், அதிமுகவில் இருக்கும் பெரும்பான்மை சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்களை தங்கள் பக்கம் கொண்டு வந்து அதிமுகவை கைப்பற்றும் வேளையில் இறங்கி இருக்கிறார்கள்.

அப்படி அதிமுகவை கைப்பற்றி, தவெக அரசுக்கு ஆதரவளிக்கலாம் என்கிற திட்டத்தில் எஸ் பி வேலுமணி மற்றும் சி வி சண்முகம் ஆகிய இருவரும் திட்டமிட்டாலும் கூட, இதை தவெக விரும்பவில்லை என்றும், மொத்தமாக எஸ் பி வேலுமணி மற்றும் சி வி சண்முகம் ஆகிய இருவர் தலைமையிலான அணி மொத்தமாக தவெக வில் இணைய வேண்டும் என்பதே தவெகவின் விருப்பம் என கூறப்படுகிறது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

error: Content is protected !!