நடந்து கொண்டிருக்கும் தமிழக அரசியல் நிலவரங்களை டெல்லியில் இருந்தபடியே வேடிக்கை பார்த்து வருகிறது டெல்லி பாஜக தலைமை. இந்தி கூட்டணியில் இருந்த காங்கிரஸ் – திமுக பிரிந்து இருப்பது பாஜகவுக்கு சாதகமான ஒரு சூழலை உருவாக்கி இருக்கிறது, அதாவது திமுக கைவசம் இருக்கும் 22 எம்பிக்கள் காங்கிரஸ் உடன் இணைந்து பாஜகவுக்கு எதிராக செயல்பட்டு வந்த நிலையில், தற்பொழுது அந்த பிரச்சனை தற்பொழுது பாஜகவுக்கு இல்லை.
மறுபக்கம் தவெக அமைச்சரவையில் காங்கிரஸ் இருந்தாலும் கூட, மத்திய அரசுடன் குறிப்பாக பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா உடன் இணக்கமாகவே இருக்கிறார் முதல்வர் விஜய். மத்திய அரசுடன் முதல்வர் விஜய் இணக்கமாக இருப்பதை காங்கிரஸ் ரசிக்கவில்லை என்றாலும் கூட, அதையெல்லாம் முதல்வர் விஜய் ஒரு பொருட்டாகவே கருதவில்லை என்றே கூறப்படுகிறது,

இதற்கு இடையில் அதிமுகவில் நடந்து வரும் கோஷ்டி பூசலை மிக உன்னிப்பாக கவனித்து வரும் டெல்லி பாஜக தலைமை, தற்பொழுது நேரடியாக இந்த விவகாரத்தில் தலையிடாமல், வேடிக்கை மட்டுமே பார்த்து வருகிறது, இந்நிலையில் தற்பொழுது அதிமுகவில் இருக்கும் பெரும்பாலான சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ் பி வேலுமணி மற்றும் சி வி சண்முகம் அணிக்கு ஆதரவாக இருப்பதாக டெல்லி பாஜக தலைமைக்கு ரிப்போர்ட் சென்று இருக்கிறது.
குறிப்பாக தமிழக அரசியலை பொறுத்தவரை டெல்லி பாஜக தலைவர்களில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்சா தான் நேரடியாக இதுவரை டீல் செய்து வந்தது, தற்பொழுது தமிழக அரசியல் குறித்த தகவல் அவருக்கு தான் சென்று கொண்டிருப்பதாகவும், அந்த வகையில் இதுவரை தமிழக அரசியலில் எவ்வளவோ முயற்சி செய்தும் நம் வித்தை ஏதும் தமிழக அரசியலில் எடுபடவில்லை,
ஆனால் தற்பொழுது அதிமுகவில் நடக்கும் குழப்பத்தை பாஜகவுக்கு சாதகமாக மாறும் சூழல் உருவாகி வருவதை வேடிக்கையாகவே பார்த்து வருகிறாரம் அமித்சா. அந்த வகையில் விரைவில் அதிமுகவை உரிமை கோரி தேர்தல் ஆணையத்தில் எஸ் பி வேலுமணி மற்றும் சி வி சண்முகம் தரப்பு கடிதம் ஒன்றை கொடுக்க இருக்கும் நிலையில், இதில் முதலில் இரட்டை இலை சின்னத்தை முடங்கி, பின்பு உறுதியவரிடம் அதிமுக கட்சியையும் இரட்டை இலை சின்னமும் ஒப்படைக்க வாய்ப்புள்ளது.
மேலும் அதிமுக மற்றும் இரட்டை இலை சின்னத்திற்கு இருக்கும் வாக்குகளை பயன்படுத்தி 2029 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக செல்லப்பிள்ளையாக எஸ் பி வேலுமணி தலைமையிலான அதிமுக உடன் பாஜக கூட்டணி அமைத்து, தேர்தலை சந்திக்கும் திட்டத்துடன் டெல்லி பாஜக தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது, மேலும் எடப்பாடி மீது நம்பிக்கையை இழந்து விட்டது பாஜக.
அந்த வகையில் பாஜகவின் செல்ல பிள்ளையான எஸ் பி வேலுமணி கைவசமே அதிமுக மற்றும் இரட்டை இலை சின்னம் செல்ல வாய்ப்புள்ளது என டெல்லியில் இருந்து வெளியாகும் தகவல் உறுதி படுத்துகிறது, அந்த வகையில் அதிமுகவின் பொதுச் செயலாளராக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவில் இருந்து வெளியேற்ற படுவதற்கான கால சூழல் நெருங்கி வந்து கொண்டிருக்கிறது என்கிறது அரசியல் வட்டாரங்கள்.
அதாவது எப்படி மேற்கு வங்கத்தில் திருனாமுல் காங்கிரஸ் இரண்டு துண்டுகளாக உடைந்து தற்பொழுது திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மம்தா பானர்ஜி கையை விட்டே செல்லும் சூழல் ஏற்பட்டு இருக்கிறதோ, அதே போன்ற ஒரு சூழல் தான் அதிமுகவில் ஏற்பட்டு இருக்கிறது, அந்த வகையில் எடப்பாடி பழனிசாமியின் கையை விட்டு அதிமுக செல்ல இருப்பதை விரைவில் எதிர்பார்க்கலாம் என்கிறது அரசியல் வட்டாரங்கள்.




