மத்திய இணையமைச்சராக இருந்த எல் முருகன் திடீரென தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தமிழகத்தில் பாஜகவை வளர்க்க அரசியல் களத்தில் இறங்கி வேலை செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளார், இந்த நிலையில் தற்பொழுது எல் முருகன் தன்னுடைய மத்திய இணையமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளதால், அடுத்து தமிழகத்தை சேர்ந்த யாருக்கு மத்தியில் அமைச்சரவையில் இடம் கிடைக்க இருக்கிறது.
எல் முருகன் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளதால், அவருக்கு கட்சியில் ஏதும் உயரிய பதவி கொடுக்க பட இருக்கிறதா,? என்ன பொறுப்பு வழங்க பட இருக்கிறது.? தமிழக பாஜக தலைவர் பதவியில் ஏதேனும் மாற்றம் இருக்குமா.? அப்படி மாற்றம் நடந்தால், யாருக்கு அடுத்த பாஜக மாநில தலைவர் பொறுப்பு வளக்கப்டும் என்கிற பல கேள்விக்களுக்கு விடை காணும் வகையில் டெல்லி பாஜக வட்டாரத்தில் விசாரித்ததில் பல முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது நடந்து முடிந்த 2026 சட்டசபை தேர்தல் முடிவுகளுக்கு பின்பே டெல்லி பாஜக தலைமையும் சரி, பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர் அமித்ஷா ஆகியோர் தமிழக பாஜக மீது கடும் அப்செட்டில் இருப்பதாகவும், குறிப்பாக தமிழக பாஜகவை தற்பொழுது டெல்லி பாஜக தலைமையையும் சரி, பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா ஆகியோர் கருத்திலே கொள்வதில்லை என்கிறது டெல்லி பாஜக வட்டாரங்கள்.
அந்த வகையில் தமிழகத்தை சேர்ந்த எல் முருகன் மத்தியமைச்சர் பொறுப்பை ராஜினாமா செய்துள்ள நிலையில், அடுத்து தமிழகத்தை சேர்ந்த ஒருவருக்கு முக்கிய துவம் கொடுக்கும் வகையில் அமைச்சரவையில் இடம் கொடுத்து தானே ஆக வேண்டும் என டெல்லி வட்டாரங்களில் விசாரித்தால், அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை என்றும், இனி மத்திய அமைச்சரவையில் தமிழக பாஜகவை சேர்நதவர்களுக்கு இடம் வேண்டும் என்றால்,
2029 நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று அமைச்சரவையில் இடம் பெறட்டும், அதனால் இப்போதைக்கு தமிழக பாஜகவில் இருக்கும் யாருக்கும் மத்தியில் அமைச்சரவையில் இடம் இல்லை என டெல்லி பாஜக தலைமை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில் தமிழகத்தில் இருந்து இனி யாருக்கும் மத்திய அமைச்சரவையில் இடம் இல்லை என்பது உறுதியாகி உள்ளது.
அடுத்ததாக தமிழக பாஜக தலைவர் மாற்றம் குறித்து டெல்லி வட்டாரத்தில் விசாரித்ததில், தற்போதைக்கு வட மாநிலங்களில் இருக்கும் பிரச்சனையே பெரும் பிரச்சனையாக இருக்கிறது, மேலும் அடுத்தடுத்து உதிர்ப்பிரதேஷ், குஜராத் தேர்தலில் கவனம் செலுத்த இருப்பதால் ,இப்போதைக்கு தமிழக பாஜக மாநில தலைவர் மாற்றம் தேவையில்லை என டெல்லி பாஜக தலைமை கருதுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் தற்பொழுது தமிழகத்தில் பாஜக தலைவர் மாற்றம் கொண்டு வந்தால் மட்டும் என கட்சியின் வளர்ச்சி விண்ணை தொடும் அளவுக்கு சென்று விடுமா என்கிற அதிருப்தியில் இருக்கும் டெல்லி பாஜக தலைமை, இப்ப எப்படி இருக்கோ, அதன் படி செல்லட்டும், 2029 நாடாளுமன்ற தேர்தலுக்கு 1 வருடத்திற்கு முன்பு அதாவது, 2028ல் தமிழக பாஜகவில் என்ன மாற்றம் கொண்டு வர வேண்டும் என்பதை அப்போது முடிவு செய்வோம் என்கிற திட்டத்தில் டெல்லி பாஜக தலைமை உள்ளதாம்.
இந்நிலையில் தமிழக பாஜக குறித்த செய்திக்கே தமிழகத்தில் முக்கியத்துவம் இல்லாதவகைள் , தமிழக பாஜக மிக பெரிய வீழ்ச்சியை சந்தித்து இருக்கும் நிலையில், டெல்லி தலைமையும் தமிழக பாஜகவை கண்டு கொள்ளாமல் இருப்பது, மிக பெரிய பரிதாபத்தில் இருக்கிறது தமிழக பாஜக என்கிறது அரசியல் வட்டாரங்கள்.




