தவெகாவில் கூண்டோடு இணையும் அதிமுக… எஸ் பி வேலுமணி போட்ட ஸ்கெட்ச்… மகனை களம் இறங்கிய எடப்பாடி…

0
Follow on Google News

நடந்து முடிந்த இரண்டு இடைதேர்தலிலும் அதிமுக மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டு, அதிமுக தொடர்களின் நம்பிக்கையை முழுசாக இழந்துள்ளது, மேலும் 6 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்தது குறித்தான வழக்கின் தீர்ப்பும் எடப்பாடி பழனிசாமிக்கு பின்னடைவை ஏற்படுத்தி இருக்கிறது. இதில் உச்சகட்டமாக சி வி சண்முகம் மற்றும் எஸ் பி வேலுமணி ஆகியோர் எடப்பாடிக்கு எதிராக அதிமுகவில் தங்களுக்கும் என ஆதரவை பெருக்கி வருகிறார்கள்.

இப்படி எடப்பாடிக்கு எல்லா பக்கமும் அடி விழுந்து கொண்டிருக்க, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிமுக மாவட்ட செயலாளர்கள் பெரும்பாலானோர் ஆதரவு எஸ்பி வேலுமணி தரப்புக்கு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது, இதனை தொடர்ந்து இந்த நிலை நீடித்தால் அதிமுக தலைமை பொறுப்புக்கு எஸ் பி வேலுமணி வந்துவிடும் சூழல் உருவாகி இருக்கிறது,

இதனை தொடர்ந்து தன்னுடைய மகன் மிதுனை களம் இறக்கி இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் யாரும் எஸ் பி வேலுமணி பக்கம் சென்று விட கூடாது, மாவட்ட செயலாளர்கள் யாரும் எஸ்பி வேலுமணி பக்கம் சென்று விட கூடாது அதற்கான வேலையை மகன் மிதுனிடம் கொடுத்து இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. இதனை தொடர்ந்து மிதுன் பழனிசாமி தனக்கு பக்க பலமாக அக்ரினி கிருஷ்ணமூர்த்தி போன்றவர்களை வைத்து கொண்டு,

ஒவ்வொரு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள், மற்றும் மாவட்ட செயலாளர்களை தொடர்பு கொண்டு பேசி வருகிறாராம் மிதுன் பழனிச்சாமி, யாரும் எஸ் பி வேலுமணி பக்கம் சென்று விட வேண்டாம், உங்களுக்கு தேவையானதை செய்து கொடுக்கிறேன் என பல உத்தரவாதங்களை அள்ளி தெளித்து வருகிறாராம் மிதுன் பழனிச்சாமி, ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள்,

மிதுன் பழனிச்சாமி சொல்வதை கேட்டு, அதெல்லாம், நாங்கள் போவோமா, எங்கள் உயிர் மூச்சு உள்ளவரை அதிமுகவில் தான் இருப்போம், அப்படி அதிமுக கட்டி காப்பாற்ற பட வேண்டும் என்றால் எடப்பாடி பழனிச்சாமி தான் சரியான தலைவர் என்றெல்லாம் மிதுன் பழனிசாமிக்கு உத்தரவாதம் கொடுத்து விட்டு, மறுப்பக்கம் எஸ் பி வேலுமணி மற்றும் சி வி சண்முகத்துடன் நெருங்கிய தொடர்பில் இருந்து வருகிறார்களாம்.

அதுமட்டுமில்லாமல் மிதுன் பழனிசாமி அவர்களிடம் என்ன பேசினார் என்பதையும் எஸ் பி வேலுமணியிடம் தெரிவித்து விடும் , அதிமுக எம் எல் எல் மற்றும் மாவட்ட செயலாளர்கள், ஆனால் எஸ் பி வேலுமணியிடம் தொடர்பில் இருப்பதை மிதுன் பழனிசாமியிடம் வெளி காட்டாமல் மைண்டைன் செய்கிறார்களாம், மேலும் அப்படியே மைண்டைன் பண்ணுக என்று எஸ் பி வேலுமணி தான், அந்த குறிப்பிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்களிடம் தெரிவித்து இருக்கிறாராம்.

அந்த வகையில் எடப்பாடி பழனிசாமிக்கு தற்பொழுது அதிமுகவில் யாரை நம்புவது, யாரை நம்ப கூடாது என மிக பெரிய குழப்பத்தில் இருந்து வருவதால், மகனிடம், யாரிடம் பேசினாலும் கவனமாகவே பேசு என்று சொல்கிறாராம், அதே நேரத்தில் எல்லோருடன் தொடர்பிலே இரு, யாரும் எதிரணி பக்கம் சென்று விடாமல் பார்த்து கொள்வது உன்னுடைய வேலை என்று மகன் மிதுனிடம் தெரிவித்து இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

ஆனால் மறுப்பக்கம் எடப்பாடி மற்றும் அவருடைய மகன் மிதுன் இருவருக்கும் தண்ணீ காட்டும் விதமாக , பல முன்னேற்பாடுகளை செய்து முடித்துள்ள எஸ் பி வேலுமணி, தற்பொழுது அதிமுகவை முழுமையாக கைப்பற்றுவதா, இல்லை கூண்டோடு தன் பக்கம் இருக்கும் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்களை அழைத்து கொண்டு தவெக வில் இணைவதா என்கிற யோசனையில் இருக்கிறாராம் எஸ் பி வேலுமணி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here