என்னை அம்போன்னு விட்டுட்டு போயிராதீங்க… பாமகவிடம் கதறிய எடப்பாடி.. கடைசி நேரத்தில் நடந்த அரசியல் ட்விஸ்ட்..

0
Follow on Google News

மக்களவைத் தேர்தல் தேதி அறிவிப்பு வந்தவுடனேயே, தென்னிந்தியாவில் தேர்தல் களம் பரபரப்பு அடைந்துவிட்டது. குறிப்பாக, தமிழகத்தில் கோடை வெயிலை மிஞ்சும் அளவுக்கு, தேர்தல் அனல் வீசுகிறது. அதுவும், வட மாவட்டங்களில் தவிர்க்க முடியாத சக்தியாக இருக்கும் பாமக-வின் முடிவு திடீர் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இம்முறை தமிழகத்தில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி, நாம் தமிழர் என நான்கு முனைப் போட்டி இருப்பது உறுதியாகிவிட்டது.

இதில், திமுக கூட்டணி கட்சிகள் தொகுதி உடன்பாட்டை முடித்து, வேட்பாளர்களைக் கூட அறிவிக்க ஆரம்பித்துவிட்டனர். ஆனால், பாஜகவும் அதிமுகவும் தங்களது கூட்டணிகளை முழுமையாக இதுவரை அறிவிக்கவில்லை. இதற்கு முக்கிய காரணமாக இருப்பது பாட்டாளி மக்கள் கட்சியும், தேமுதிக-வும் தான். இந்த இரு கட்சிகளும் யாருடன் கூட்டணி என்பது தற்பொழுது இறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அதிமுக கூட்டணியில் பாமக இடம்பெறுகிறது என கிட்டத்தட்ட அறிவிக்கும் நிலைக்கு வந்த நிலையில், குறிப்பாக, அதிமுக தொண்டர்களும் முன்னணி நிர்வாகிகளும் பாமக எங்கள் கூட்டணிதான் என வெளிப்படையாகவே பேசி வந்தனர். இந்தச்சூழலில் பாமக நிறுவனர் ராமதாஸின் தைலாபுரம் தோட்டத்தில், பல மணி நேர ஆலோசனை நடைபெற்றது. ஆலோசனைக்குப் பிறகு, கூட்டணியில் திடீர் திருப்பம் ஏற்பட்டது.

அதாவது நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பாமக, பாஜக கூட்டணியில் இணைந்து போட்டியிடும் என பாமக முடிவு செய்தது, பாமக-வுக்கு 10 தொகுதிகளும் 1 ராஜ்ய சபா இடமும் ஒதுக்கப்படும் எனத் தெரிகிறது. இதற்கு பாஜக தலைமையும் சம்மதித்துவிட்டதால், தொகுதி உடன்பாட்டை பிரதமர் மோடி சேலம் கூட்டத்தில் பங்கேற்பின் மூலம் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகியோர் கலந்து கொண்டு உறுதி செய்தனர்.

அதிமுக உடன் கூட்டணி இல்லை என பாமக வெளியேறி பாஜக கூட்டணிக்கு சென்றுள்ள நிலையில், இதுவரை அதிமுக கூட்டணியில் இடம் பெறுவது குறித்து தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்த தேமுதிக நிலைப்பாட்டில் மற்றம் வரலாம் என கூறப்படுகிறது, அதே நேரத்தில் பாஜக தலைமையிலான மெகா கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கு சீட் கிட்ட தட்ட ஒதுக்கப்பட்டு இறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தேமுதிக பாஜக கூட்டணி வந்தாலும் கொடுப்பதற்கு கைவசம் சீட் இல்லை என்றே தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் ஏற்கனவே பாமக கடைசி நேரத்தில் எடப்பாடி கல்தா கொடுத்து பாஜக கூட்டணிக்கு சென்றுள்ளதால், என்ன விலை கொடுத்தாவது தேமுதிகவை தக்க வைத்து கொள்வார் எடப்பாடி பழனிச்சாமி. மேலும் அதிமுகவுடன் தான் பாமக கூட்டணி என கிட்ட தட்ட உறுதியான நிலையில் கடைசி நேரத்தில் பாமக பாஜக கூட்டணிக்கு வருவதற்கு என்ன காரணம் என்கிற தகவலும் கசிந்துள்ளது.

அதில் எடப்பாடி தலைமையிலான அதிமுக மூழ்கும் கப்பல், அப்படி மூழ்கும் கப்பலில் பயணித்தால், 2016ல் மக்கள் நல கூட்டணிக்கு என்ன நிலை ஏற்பட்டதோ அதே தான் எடப்பாடி கூட்டணியில் இடம் பெரும் கட்சிகளுக்கும் என்கிற ரிப்போர்ட்டை தனக்கு நெருக்கமான சில உளவு துறை அதிகாரிகள் மூலம் தெரிந்து கொண்ட அம்புமணி, பாஜகவுடன் கூட்டணி வைப்பது தான் தன்னுடைய அரசியல் எதிர்காலத்துக்கும் நல்லது, பாமக கட்சிக்கு நல்லது என்பதை கட்சி முத்த நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தி பாஜக கூட்டணிக்கு செல்வதை உறுதி செய்துள்ளார் அன்புமணி.

பாஜக பக்கம் பாமக செல்ல இருக்கும் தகவலை அறிந்து, அய்யோ என்ன ம்போன்னு விட்டுட்டு போயிராதீங்க என கதறும் நிலைக்கு தள்ள பட்ட எடப்பாடி பழனிச்சாமி, அதிமுக முன்னாள் அமைச்சர் சி வி சண்முகம் மூலம் பாமகவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார், ஆனால் அம்புமணி தன்னுடைய முடிவில் எந்த மாற்றமும் இல்லை என பாஜக உடன் கூட்டணியை உறுதி செய்ததாக கூறப்படுகிறது.