இவன் பக்கா பிராடு.. அகோரி கலையரசன் பற்றி புட்டு புட்டு வைத்த அவருடைய சித்தப்பா..

0
Follow on Google News

கடந்த சில நாட்களாக டுபாக்கூர் அகோரி கலையரசன் அட்ராசிட்டி எல்லை மீறி சென்று கொண்டிருக்கிறது, கலையரசன் ஒரு டுபாக்கூர் என்று பலரும் தெரிந்து இருந்தாலும் கூட, பலரும் இவர் உண்மையான சாமியார் என குறி கேட்டு வருகிறார்கள், டுபாக்கூர் அகோரியான கலையரசனும் அருள் வாக்கு சொல்கிறேன் என்கிற பெயரில் வாய்க்கு வந்ததை அள்ளிவிட்டு வருகிறார். இந்நிலையில் கலையரசன் பற்றி அவருடைய சித்தப்பா பாலா பேசுகையில்,

எங்கள் குடும்பத்தினரை பொன்னையா வாத்தியார் பேரன் என்று சொன்னால் அனைவருக்கும் தெரியும், என்னுடைய அண்ணன் பையன் தான் கலையரசன், கலையரசனின் அப்பா மிக சிறந்த நாட்டுப்புற கலைஞர், அவருடைய அப்பாவிடம் இருந்து நாட்டுப்புற கலைகளை நன்கு கற்றுத் தேர்ந்தவர் கலையரசன். மேலும் நாட்டுப்புற கலைகளின் தன்னுடைய திறமையால் பலருடைய பாராட்டுகளை பெற்ற கலையரசன் அதற்காக ஒரு நாட்டுப்புற கலைஞரை பெருமை படுத்தும் விதத்தில் கலையரசனுக்கு டாக்டர் பட்டமும் கொடுக்கப்பபட்டுள்ளது என தெரிவித்த கலையரசன் சித்தப்பா பாலா.

மேலும், கலையரசன் 23 வயதில் நாட்டுப்புற கலைகளில் பல கலைகளை கற்று தேர்ந்து மிகப்பெரிய சாதனையை படைத்தது எங்கள் குடும்பத்தினர் அனைவரும் மிக பெருமையாக இருந்தது, இந்நிலையில் மனைவி மூன்று குழந்தைகள் என குடும்பமான கலையரசன், தீடிரென ஒரு வருடம் என்ன ஆனார் என்று தெரியாமல் தற்பொழுது அகோரி என்ற பெயரில் கலையரசன் செய்யும் அட்ராசிட்டிக்கு எங்கள் குடும்பத்தினர் யாருமே வெளியில் தலை காட்ட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது என வேதனை தெரிவித்த கலையரசன் சித்தப்பா பாலா.

பொன்னையா வாத்தியார் குடும்பமான எங்கள் குடும்பத்தில், வருடத்திற்கு ஒருமுறை திருவிழா நடக்கும் பொழுது எங்கள் குடும்பத்தினர் குறி சொல்வோம், ஏனென்றால் அந்த திருவிழா காலகட்டத்தில் வருடத்திற்கு ஒருமுறை எங்கள் மீது சாமி வருவது வழக்கம், அது எங்க குடும்பத்தில் நடக்கக்கூடிய ஒரு செயல், குறி வருடத்திற்கு ஒருமுறை தான் சொல்ல வேண்டும் வருடத்தில் 365 நாளும் அருள்வாக்கு சொல்வது என்பது கிடையாது.

அது சாத்தியமே இல்லை, அந்த வகையில் கலையரசன் வருமானத்திற்கு வழியில்லை என்பதற்காக இப்படி எல்லாம் செய்வது சரியில்லை என மிகவும் வேதனைப்பட்ட கலையரசனின் சித்தப்பா பாலா, மேலும் அவர் கூறுகையில் அகோரி என்பவர் பல நாட்கள் ஒருவரை குருமார்களாக ஏற்றுக் கொண்டு அவர்களுக்கு பணிவிடை செய்து அவர்களின் உத்தரவின் பேரில் தீட்சை வாங்கிக் கொண்டு அகோரியாக மாறுகின்றவர்கள் உண்டு.

ஆனால் ஒரு வருடம் கூட ஆகாத நிலையில் ஒட்டு முடியை கலையரசன் வைத்துக்கொண்டு அகோரி என்று சுத்தினால், என் அண்ணன் பையன் என்பதற்காக அவர் பண்றதெல்லாம் சரி என்று நான் சொல்ல மாட்டேன் என பளிச்சுன்னு தெரிவித்த பாலா, அவருடைய பேச்சுகள் அனைத்துமே எனக்கே மிகப்பெரிய காமெடி ஏற்பட்டது. 98 நாட்கள் செத்த பாம்புடன் இருந்தேன் என்று சொல்கிறார் கலையரசன்.

மேலும் பேப்பரில் எறும்பை சாப்பிட்டேன் என வாய்க்கு வந்ததை அவிழ்த்து விடும் கலையரசன், இப்படி எல்லாம் செய்தால் அவர் அகோரி ஆகிவிட முடியாது, எங்கள் குடும்பத்தின் மானத்தையே கெடுக்கிறார், இது முழுக்க முழுக்க பிராடுத்தனம் இனிமே அகோரி என்று கலையரசனை சொன்னால் எனக்கு கடும் கோபம் வரும் என்று தன்னுடைய பாலா தன்னுடைய ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.

மேலும் கலையரசன் ஊருக்கு வந்தால் ஆண்கள் எல்லாம் வேஷ்டியை இறக்கி விடுவார்கள். பெண்கள் தன்னை பார்க்கவே மாட்டார்கள் என்று சொல்வதெல்லாம் அபத்தமான பொய், கலையரசன் ஊருக்கு வருடத்திற்கு ஒருமுறை திருவிழாக்கு மட்டும்தான் வருவார், அதுவும் எப்பயாவது வருவாரு என தெரிவித்த பாலா அப்படி இருக்கையில் இஷ்டத்துக்கு கட்டுக் கதைகளை அவிழ்த்து விடும் கலையரசனை யாரும் நம்ப வேண்டாம் என தெரிவித்துள்ளார் கலையரசனின் சித்தப்பா பாலா.