கையில் மை அழிவதற்குள் விடுதலை கோரிக்கை நியாமா.? கொந்தளித்த காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர்..

0
Follow on Google News

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் சிறையில் இருக்கும் 7 பேரை விடுதலை செய்வது குறித்து குடியரசு தலைவருக்கு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் கடிதம் எழுகியுள்ளார், அந்த கடிதத்தை திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் நேரில் அளித்துள்ளார். இந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டு சுமார் 30 ஆண்டுகளாக சிறை வாசம் அனுபவித்து வருகின்றனர்.

அவர்களை விடுவிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனிடையே, அவர்களது விடுதலையில் தமிழக அரசே முடிவெடுத்துக் கொள்ளலாம் என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவையடுத்து, சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. ஆனால், அதன் மீது இரண்டு ஆண்டுகளாக முடிவெடுக்காமல் காலம் தாழ்த்தி வந்த தமிழக ஆளுநர், எழுவரை விடுவிக்க குடியரசுத் தலைவருக்கே அதிகாரம் உள்ளது என்று உச்ச நீதிமன்றத்தில் உள்துறை மூலம் இறுதியாக அறிக்கை அளித்தார்.

இதனால் அவர்கள் விடுதலையில் இன்றளவும் இழுபறியே நிலவி வருகிறது. இந்த நிலையில், தமிழக அரசின் தீர்மானத்தின் மீது முடிவெடுக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்குதான் உள்ளது என்று அதனை ஆளுநர் அவருக்கு அனுப்பி வைத்ததை சுட்டிக் காட்டி, 2018 இல் அமைச்சரவையில் நிறைவேற்றிய அந்த தீர்மானத்தின்படி 7 பேரை விடுவிக்க ஆணை பிறப்பிக்க வேண்டும் என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் இருக்கும் பேரறிவாளனுக்கு 30 நாட்கள் சாதாரண விடுப்பு வழங்கி முதல்வர் முக ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார், இதனை தொடர்ந்து இன்று படுகொலை செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு தினம் நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருவதால், விருதுநகர் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் அவருடைய டீவீடீர் பக்கத்தில் 7 பேர் விடுதலை குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

அதில், கொலைகார்கள் காத்து நிற்கிறார்கள் …. என் அன்புதலைவன் ரத்தம் தமிழ்மண்ணில் …..இவர்களுக்கு உதவியவர்களை விடுதலை செய்ய கோரிக்கை இந்திய குடியரசு தலைவரிடம், இவை எல்லாம் நம் கையில் மை அழிவதற்குள் ….நியாமா? என கேள்வி எழுப்பியவர் மேலும் என் தலைவனின் காலில் வீழூந்து தான் அவரை வீழ்த்த முடிந்தது துரோகத்தால். ….என்று வேதனையுடன் பதிவு செய்துள்ளார் காங்கிரஸ் எம்பி. இந்நிலையில் 7 பேர் விடுதலை தொடர்பாக குடியரசு தலைவருக்கு முதல்வர் கடிதம் எழுதியுள்ள இந்த நேரத்தில், காங்கிரஸ் எம்பியின் இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.