அரசியல் களத்தில் 30க்கும் மேற்பட்ட ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரிகள்.. அதிரடி அரசியல் ரிப்போர்ட் அண்ணாமலை கையில்…

0
Follow on Google News

கரூர் மாவட்டம், அறவன்குறிச்சி அருகே விவசாய குடும்பத்தில் பிறந்த அண்ணாமலை குப்புசாமி கர்நாடக மாநிலத்தில் IPS அதிகாரியாக பணியாற்றிய போது, அவரது, நேர்மை,துணிச்சல் போன்ற செயல்களால் அந்த மாநில மக்களின் ஹீரோவாக பார்க்கப்பட்டு சிங்கம் அண்ணாமலை என அழைக்கப்பட்டார், மக்களால் கொண்டாடப்பட்ட ஒரு உயர் அதிகாரி அண்ணாமலையின் திடீர் ராஜினாமா, அடுத்து தற்சார்பு கொள்கையின் கீழ் விவசாயத்தில் ஈடுபட்டவர் அரசியல் பிரவேசம் எடுத்தார்.

டெல்லியில் ஜெபி நட்டா தலைமையில் பாஜகவில் இணைந்த அண்ணாமலை பாஜக துணை தலைவரானர், அடுத்த ஒரு வருடத்துக்குள் தமிழக பாஜக தலைவரானார், அண்ணாமலையில் அரசியல் வருகை முதல் பாஜகவின் தலைவர் வரை நிகழ்ந்த அடுத்தடுத்து அதிரடி மாற்றங்கள் அனைத்தும் தமிழக அரசியலில் குறிப்பாக பாஜகவினர் மத்தியில் கூட யாரும் எதிர் பார்க்காத அதிரடி மாற்றங்களாக நிகழ்ந்து பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்.

இந்நிலையில் பாஜக டெல்லி தலைமை அண்ணாமலையை நேரில் அழைத்து அவரை மாநில தலைவராக நியமிக்கும் போது, தமிழகத்தில் கட்சியை வளர்க்க சில ஆபரேஷன் நடத்துவது பற்றி பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது, அதில் முக்கியமான ஓன்று செயல்படாத நிர்வாகிகள், கட்சியின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் நிர்வாகிகள் ஆகியோரை நீக்கிவிட்டு புதிய நிர்வாகிகளை நியமித்து கட்சியை வளர்ச்சி பாதைக்கு அழைத்து செல்வது போன்ற சில முக்கிய அதிரடி மாற்றங்களை நிகழ்த்த வேண்டும் என்பது அண்ணாமலைக்கு டெல்லி கொடுத்த அசைன்மென்ட் என கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து தமிழகம் முளுவதும் உள்ள மாவட்ட நிர்வாகங்களில் சரி வர வேலை செய்யாத நிர்வாகிகளை நீக்கிவிட்டு புதிய நிர்வாகிகளை நியமிக்க அண்ணாமலை உத்தரவிட்டதை தொடர்ந்து மாவட்டம் தோறும் சில மாற்றங்கள் நடைபெற்று வருகிறது, இதில் சில மாவட்டங்களில் அண்ணாமலையின் உத்தரவை தவறாக பயன்படுத்தி தங்களுக்கு பிடிக்காத நிர்வாகிகளை நீக்கிவிட்டு, தனக்கு ஜால்ரா போடும் நபர்களுக்கு பொறுப்புகளை மாவட்ட நிர்வாகம் வழங்கி வருவதாக கூறப்படுகிறது.

ஆனால் அண்ணாமலை தமிழக பாஜக தலைவராக பொறுப்புக்கு வந்த பின்பு, ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரிகள் 30க்கு மேற்பட்டவர்கள் அடங்கிய ஒரு குழுவை அமைத்து தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட தலைமையின் செய்லபாடுகளை தீவிரமாக கண்காணித்து ரிப்போர்ட் சமர்ப்பிக்க கேட்டுக்கொண்டதை தொடர்ந்து கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாக தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஆய்வின் ரிப்போர்ட் தற்போது அண்ணாமலை கையில் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் விரைவில் பல மாவட்ட தலைவர்களுக்கு சில டம்மியான பதவிகளை கொடுத்து வீட்டில் ஓய்வு கொடுக்கப்பட்டு, புதியாக தலைவர்கள் நியமிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது, மேலும் சில மாவட்ட நிர்வாகம் கூண்டோடு கலைக்கப்பட்டு புதிய நிர்வாகிகள் நியமிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படும் நிலையில், அண்ணாமலையின் இந்த ஆப்ரேசன் பற்றி தெரியாமல் மிதப்பில் இருந்த நிர்வாகிகள் மற்றும் காக்க பிடித்து, ஜால்ரா அடித்து பதவியை தற்காத்து வருகின்றவர்களுக்கு இந்த தகவல் அறிந்து பீதியில் இருப்பதாக கூறப்படுகிறது.