அழகிரி வீட்டில் 10க்கு மேற்பட்ட திமுக எம்.எல்.ஏ, மற்றும் மா.செ.கள். விசிட் ! தகவல் அறிந்து அதிர்ச்சியில் ஸ்டாலின் .!

0
Follow on Google News

திமுக முன்னாள் மத்திய அமைச்சர் முக அழகிரி கடந்த ஜனவரி 3ம் தேதி மதுரையில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் நடத்திய ஆலோசனை கூட்டத்துக்கு பின், அவரை நேரில் 10க்கு மேற்பட்ட திமுக எம்.எல்.ஏக்கள் மற்றும் திமுக மாவட்ட செயலாளர்கள் சந்தித்து திரும்பியுள்ள தகவல் அறிந்து திமுக தலைவர் ஸ்டாலின் கடும் அதிர்ச்சியில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது, இதனை தொடர்ந்து முக அழகிரியுடன் சமாதன முயற்சியில் ஸ்டாலின் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

திமுகவில் இருந்து நீக்கப்பட்ட முக அழகிரி திமுகவில் மீண்டும் இணைய பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தார், ஆனால் அணைத்து முயற்சிகளுக்கும் முட்டுக்கட்டையாக இருந்தார் ஸ்டாலின், இந்நிலையில் கருணாநிதி மறைவுக்கு பின் தன் அதிரடி ஆட்டத்தை ஆரம்பித்த முக அழகிரி தமிழகம் முழுவதும் உள்ள தனது ஆதரவாளர்களை அழைத்து ஸ்டாலினுக்கு எதிராக பிரமாண்ட பேரணியை நடத்தினர், இதன் பின் அமைதியாக இருந்த முக அழகிரி, சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்கள் மட்டும் உள்ள நிலையில் ஸ்டாலினுக்கு எதிராக சாட்டையை சுழற்ற ஆரம்பித்துள்ளார்.

கடந்த ஜனவரி 3ம் தேதி மதுரையில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய முக அழகிரியின் பேச்சு தமிழக அரசியலில் முக்கியதுவம் பெற்றது, ஸ்டாலினி முதல்வராக முடியாது என்றும், உன்னை முதல்வராக வர விடமாட்டார்கள் எனது ஆதரவாளர்கள் என தெரிவித்திருந்தார், முக அழகிரி நடத்திய ஆலோசனை கூட்டத்துக்கு தமிழகம் முளுவதும் இருந்து பெரும் கூட்டம் வந்தது அணைத்து தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பப்பட்டது, ஸ்டாலின் முதல்வர் கனவுக்கு பெரும் இடியாக விழுந்தது.

இந்நிலையில் முக அழகிரி நடத்திய ஆலோசனை கூட்டத்துக்கு பின் திமுக சட்டமன்ற உறுப்பினர் மற்றும் திமுக மாவட்ட செயலாளர்கள் ரகசியமாக சந்தித்து வரும் செய்தி திமுக தலைவர் ஸ்டாலினுக்கு சென்றுள்ளது, தனது இல்லத்தில் நேரடியாக வரவழைத்து தென் மாவட்டத்தை சேர்ந்த 4 சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் சில மாவட்ட செயலாளர்களை சந்தித்துள்ளார் இதில் ஒரு பெண் சட்டமன்ற உறுப்பினரும் சென்றுள்ளதாக கூறப்படுகிறது, இவர்கள் அனைவரும் தங்களுடைய சொந்த வாகனங்களில் செல்லாமல் கட்சி கொடி இல்லாத வாகனங்களில் சென்று சந்தித்துள்ளனர்.

மேலும் வெளி மாவட்டத்தை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் சிலர் மற்றும் மாவட்ட செயலாளர்கள் மதுரை பசுமலையில் உள்ள தாஜ் ஹோட்டலில் முக அழகிரியை சந்தித்து பேசியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளதும், உதயநிதி ஸ்டாலின் அரசியல் வருகைக்கு பின் தாங்கள் புறக்கணிக்கப்படுவதாகவும் இம்முறை எங்களுக்கு போட்டியிட சீட் மறுக்கப்படும் என்றும் முக அழகிரியை சந்தித்த திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளதாகவும், மேலும் அண்ணன் எடுக்கும் முடிவுக்கு நாங்கள் ஆதரவாக இருப்போம் என உறுதியளித்து சென்றுள்ளனர்.

இந்நிலையில் முக அழகிரியின் நடவடிக்கைகளை அறிந்த ஸ்டாலின் தனது சகோதரி செல்வியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு முக அழகிரியிடம் சமரசம் பேச வலியுறுத்தியுள்ளார், இதனை தொடர்ந்து தொலைபேசியில் பேசிய செல்வியிடம் மைக்க பிடித்து பேசினால் பதறி அடித்துக்கொண்டு என்னிடம் பேசுகிறீர்கள், இதற்கு முன் எனக்கு அநீதி இழைக்கப்பட்ட போது நீங்க என்ன செய்திர்கள், உங்களை பேச சொன்ன ஸ்டாலினிடம் சொல்லுங்க அவர் முதல்வராக முடியாது என கோபத்துடன் பேசினாராம் முக அழகிரி.