அண்ணாமலை வீட்டின் கதவை தட்டிய சர்வ கட்சி சரவணன்… கதவை திறந்தாரா அண்ணாமலை.?

0
Follow on Google News

மதிமுக, பாஜக, திமுக மீண்டும் பாஜக என தமிழகத்தில் உள்ள பல அரசியல் கட்சிகளில் ஒரு ரவுண்டு வந்த சர்வ கட்சி சரவணன் என அரசியல் வட்டாரங்களில் அழைக்கப்படும் மதுரை டாக்டர் சரவணன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாஜகவில் இருந்து விலகினார். பாஜகவில் இருந்து விலகிய பின்பு மதுரை மாவட்டத்தில் பல பகுதிகளில் நிதியமைச்சர் பி டி ஆர் புகைப்படத்துடன் போஸ்டர் அடித்து தன்னை பி டி ஆரின் ஆதரவாளர் என காட்டிக்கொண்ட சரவணன் விரைவில் திமுகவில் இணைவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் திமுகவில் சீட் கிடைக்கவில்லை என்பதற்காக பாஜகவில் இணைந்த சரவணன் மீண்டும் திமுகவில் இணைவதற்கு அக்கட்சியின் சீனியர் லீடர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பலமுறை அறிவாலயம் சென்று முதல்வர் மு க ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்திக்க முயற்சி செய்தும் கூட, சரவணனுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் திமுகவில் முக்கிய பொறுப்பு கிடைக்கும் என பாஜகவில் இருந்து விலகி வந்த சரவணனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

இன்றைய தமிழக அரசியல் களம் திமுக – பாஜக என மாறியுள்ளதை அறிந்த சரவணன், அவசரப்பட்டு பாஜகவில் இருந்து வெளியே வந்து விட்டமோ என மிக பெரிய குழப்பத்தில் இருந்தவர், வடிவேலு படத்தில் வரும் காமெடி போன்று கட்சி விட்டு கட்சி தாவுவது தனக்கு ஓன்று புதியது கிடையாது என்பது போல், மீண்டும் பாஜக பக்கம் செல்ல தூது விட்டுள்ளார் சரவணன்.

ஆனால் பாஜகவில் இருந்து எந்த தகவலும் வரவில்லை, இருந்தாலும் அண்ணாமலையை நேரில் சந்தித்து அவரை சமாதனம் செய்து தனது விருப்பத்தை தெரிவித்து பாஜகவில் இணைந்து விடலாம் என பாஜக தலைவர் அண்ணாமலை வீட்டின் கதவை தட்டி உள்ளார் சரவணன். அங்கே நடந்த சந்திப்பில் மீண்டும் பாஜகவில் இணைவது குறித்து சரவணன் விருப்பம் தெரிவிக்க, அதற்கு அண்ணாமலை, கட்சி நிர்வாகிகள் உங்களுக்கு மீண்டும் எப்படி நம்பிக்கையுடன் இணக்கமாக வேலை செய்ய முடியும் என கேட்டுள்ளார்.

மேலும், ஒரு கட்சி தலைவராக எனக்கும் உங்களை மீண்டும் கட்சியில் இணைக்க விருப்பம் இல்லை என தெரிவித்த அண்ணாமலை, கட்சியில் இருக்கும் மூத்த தலைவர்களிடம் இது குறித்து ஆலோசனை செய்து உங்களுக்கு தகவல் சொல்கிறேன் என தெரிவித்துளளார் அண்ணாமலை. இதனை தொடர்ந்து பாஜக மூத்த தலைவர்களிடன் சரவணன் கட்சியில் மீண்டும் இணைவது குறித்து ஆலோசனை நடத்தியுள்ளார் அண்ணாமலை.

ஆனால் கட்சி மூத்த தலைவர்கள் மீண்டும் சரவணன் பாஜகவில் இணைவதை விரும்பவில்லை என தகவல் தெரிவிக்கிறது. இந்நிலையில் அடுத்த சில நாட்கள் காத்திருந்த சரவணனுக்கு அண்ணாமலை தரப்பில் இருந்து எந்த ஒரு தகவலும் வராததால் மீண்டும் அண்ணாமலையை நேரில் சந்திக்கலாம் என அண்ணாமலை வீட்டின் கதவை தட்டியுள்ளார் சரவணன்.

சார் உங்க தகவலுக்காக தான் இத்தனை நாட்களாக காத்திருந்தேன் என சரவணன் கேட்க, அதற்கு, கட்சியின் மூத்த தலைவர்கள் உங்களை மீண்டும் கட்சியில் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்கள். மேலும் எனக்குமே விருப்பமில்லை என அண்ணாமலை கை விரித்து விட்டார். இந்நிலையில் மீண்டும் பாஜகவில் இணைந்து விடலாம் என அடிக்கடி அண்ணாமலை வீட்டின் கதவை தட்டிய சரவணனுக்கு இறுதியில் ஏமாற்றமே மிஞ்சியது.

இதனை தொடர்ந்து திமுகவும் வேண்டாம் என தன்னை புறக்கணித்து விட்டது, பாஜகவில் மீண்டும் உள்ளே செல்ல தனக்கான கதவை திறக்கவில்லை என்பதால், தற்பொழுது இரண்டு பிரிவுகளாக பிரிந்து கிடக்கும் அதிமுகவின் எடப்பாடி அணியில் தன்னை இணைந்து கொண்டார் சரவணன். மேலும் சர்வகட்சி சரவணன் என அழைக்கப்படும் சரவணன் இது வரை செல்லாத கட்சி அதிமுக என்பது குறிப்பிடத்தக்கது.

இடுப்பை கிள்ளியதை கேட்டிங்களா.? அண்ணாமலை பத்திரிகையாளர்கள் இடையே கடும் மோதல்…