மதுரை பாஜக தமிழ் வளர்ச்சி பிரிவு சார்பில் முதியோர் இல்லத்தில் தீபாவளி கொண்டாட்டம்!

0
Follow on Google News

மதுரை புறநகர் மாவட்ட பாஜக தமிழ் வளர்ச்சி பிரிவின் சார்பாக தீபாவளி கொண்டாட்டம் உத்தங்குடி
ரோஜாவனம் ஆதரவற்ற முதியோர் இல்லத்தில் மிக சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை பாஜக புறநகர் மாவட்ட தமிழ் வளர்ச்சி பிரிவு தலைவர் ராஜசேகரன் செய்திருந்தார். மாவட்ட தலைவர் மகா சுசீந்தரன் தலைமை வகித்தார். மாநில செயலாளர் சிவரத்தினம் முன்னிலை வகித்தார்.

விழாவில் மாவட்ட தலைவர் மகா சுசீந்திரன் தீபாவளி திருநாளை முன்னிட்டு ரோஜாவனம் முதியோர் இல்லத்தில் வசிக்கும் சுமார் நூறு முதியோர்கள் மற்றும் மாற்று திறனாளிகளுக்கு இனிப்புகள் வழங்கி
நிகழ்ச்சியை சிறப்பித்தார். இதனை தொடர்ந்து நடைப்பெற்ற நிகழ்ச்சியில் பாஜக புறநகர் மாவட்ட
தமிழ் வளர்ச்சி பரிவு தலைவர் ராஜசேகரன் முதியோர் இல்லத்தில் வசிக்கும் அனைவருக்கும் அருஞ்சுவை உணவு வழங்கினார்.

இந் நிகழ்ச்சியில் மதுரை மாவட்ட இளைஞரணி தலைவர் ராஜா, தமிழ் வளர்ச்சி பிரிவு துணை தலைவர் ராஜேஷ், சரிதா, மாவட்ட செயலாளர்கள் ராஜாராம், கருத்தபாண்டி, அருச்செல்வன், தனுசுராம், சாந்தாராம், ராமகிருஷ்ணன், ராமானுஜம் மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் முத்துராக்கு, மீனா கலந்து கொண்டனர்.