இந்து கடவுள்களை இழிவாக பேசிய விக்ரமன்.! ஜாதியை ஒழிக்க திருமாவளவன் கட்சியில் இணைந்தாரம்.!

0
Follow on Google News

கலாட்டா புகழ் பத்திரிகையாளர் விக்ரமன், இவர் திராவிட கழக மேடையில் இந்து கடவுள் குறித்து இழிவாக பேசி பெரும் சர்ச்சையில் சிக்கினார், இதனால் இந்துக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து, அந்த எதிர்ப்பின் காரணமாக பிரபலம் அடைந்தார், இந்துக்கள் வழிபட கூடிய சிவன், விஷ்ணு, பிரம்மன் ஆகிய கடவுள்களை ஒருமையில் பேசியும் கீழ்த்தரமாக விமர்சனம் செய்து புராணங்களில் இல்லாத ஒன்றை இந்துக்கள் மனம் புண்படும்படி பேசி விக்ரமன் சர்ச்சையில் சிக்கினார்.

இதன் பின் இந்துக்களின் எதிர்ப்பின் காரணமாக பிரபலம் அடைந்த விக்ரமன் தொடர்ந்து தன்னை நடுநிலை பத்திரிகையாளராக கூறி கொண்டு குறிப்பிட்ட பாஜக மற்றும் அதிமுக போன்ற காட்சிகளை விமர்சனம் செய்து திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவித்து வந்தார், இருந்தும் விக்ரம் ஒரு தலைப்பட்சமாக செயல்பட்டு வந்தது அவரின் நடுநிலை தன்மை பெரும் கேள்வி குறியாகவே இருந்து வந்தது. மேலும் பத்திரிகையாளர் என்கின்ற போர்வையில் திமுக கூட்டணிக்கு ஆதரவாக செயல்படுவதாக விக்ரம் மீது குற்றசாட்டு இருந்து வந்தது.

இந்நிலையில் அம்பேத்கார் நினைவு நாளான இன்று விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவனை சந்தித்து விடுதலை சிறுத்தை கட்சியில் தன்னை இணைத்து கொண்டார் விக்ரமன், இது குறித்து அவர் தனது டிவீட்டர் பக்கத்தில் கூறுகையில், அண்ணல் அம்பேத்காரின் பிள்ளையாய்,பெரியாரின் பேரனாய், அண்ணன் எழுச்சித்தமிழரின் தம்பியாய் ஜாதியை ஒழிக்க,சமூகநீதியை காக்க,பெண்ணுரிமையை மீட்க,சனாதனத்தை வேரறுக்க,பாசிசத்தை வீழ்த்த புரட்சியாளர் அம்பேத்கரின் நினைவுநாளில் விடுதலைச் சிறுத்தையாய் களமிறங்குகிறேன்.அறம் வெல்லும் என தெரிவித்துள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சமூக வலைதளவாசிகள், நீதிபதிகள் அரசியல்வாதி ஆனா அவங்க குடுத்த தீர்ப்பு எல்லாம் சந்தேகத்துக்குக்கு உள்ளாகும், அது போன்று தான் பத்திரிகையாளர்களும், திருமாவளவன் முன்னெடுத்து நடத்துவது சாதி அரசியல் அப்படியிருக்கையில் அவருடைய கட்சியில் இணைந்து சாதியை ஒழிப்பேன் என்பது நகைப்புக்குரியது என கருத்துக்கள் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.