ஊரடங்குக்கு முற்றுப்புள்ளியா? முதல்வர் அறிக்கை…

0
Follow on Google News

கொரோனா இரண்டாவது அலையின் தாக்கத்தை கட்டுப்படுத்த தமிழக அரசு ஊரடங்கை அமல் படுத்தியது. ஆனால் தமிழக மக்கள் ஊரடங்கை முழுமையாகக் கடைப் பிடிக்கவில்லை. இதற்காக ஊரடங்கை தொடர்ந்து கொண்டு செல்ல முடியாது என்பதால் ஊரடங்குக்கு விரைவில் முற்று புள்ளி வைக்க உள்ளதாக தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை கூறியுள்ளார். கொரோனா சங்கிலித் தொடர்பு மற்றொருவரிடம் இருந்து உங்களுக்கு பரவாமலும் உங்களிடம் இருந்து மற்றவர்களுக்கும் பரவாமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். கொரோனா தொற்று ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு சங்கிலித் தொடர்பு மூலம் பரவுவதை கட்டுக்குள் கொண்டுவர முடியும். கடந்த மே 14 முதல் மே24 வரை ஊரடங்கு அமலுக்கு வந்தது.

மேலும் இந்த ஊரடங்கை அமல் படுத்தியது மூலம் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. விரைவில் கொரோனா முழுமையாக குறைந்து விடும். கொரோனா உண்மையாக குறைப்பதற்கு முழு ஊரடங்கி சரியானது. முழு உடன்பாடு மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதால் அரசு 2000 ரூபாய் ஒவ்வொரு ரேஷன் கார்டுக்கும் வழங்கப்பட்டுள்ளது, மளிகை பொருட்கள் காய்கறிகளை தங்கள் வசிக்கும் இருப்பிடத்திற்கு கொண்டு வர ஏற்பாடுகளும் செய்து வருகிறது.ரேஷன் கடைகளில் 13 அத்தியாவசியப் பொருட்களை வழங்கி வருகிறது.

மேலும் பலரின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டிருக்கும் இதிலிருந்து மீண்டும் வர வேண்டுமென்றால் சங்கிலித் தொடர்பை குரல் உணவைக் கட்டுக்குள் கொண்டுவர முடியும். ஊரடங்கை நீடித்துக் கொண்டே செல்லவும் முடியாது விரைவில் மக்கள் கட்டுப்பாடுகளை சரியாக கடைபிடித்தால் ஊரடங்குக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று அறிக்கையில் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.