நில அபகரிப்பு செய்தே பழக்கப்பட்ட திமுக, தான் திருடி ஊரில் எல்லாரும் திருடி என்று பிரச்சாரம் செய்வதா.? பேராசிரியர் பதிலடி..

0
Follow on Google News

தான் திருடி ஊரில் எல்லாரும் திருடி என்று சொல்வதுபோல் கார்ப்பரேட் நிறுவனம் விவசாயிகளின் நிலத்தை அபகரித்துக் கொள்ளும் என்று நில அபகரிப்பில் பழக்கப்பட்ட திமுக பொய் பிரச்சாரம் செய்து வருவதாக பாஜக மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் இராம.ஸ்ரீநிவாசன் நேற்று திருச்சியில் நடந்த வேளாண் சட்டம் குறித்து நடந்த செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார், மேலும் அவர் அளித்த பேட்டியில், விவசாயிகள் தங்கள் பொருட்களை விற்பதற்கு முழு உரிமையை மீட்டெடுத்து இந்த அரசாங்கம் வேளாண் சட்டத்தின் மூலம் கொடுத்துள்ளது.

இதற்கு முன் உள்ள அரசாங்கம் விவசாயிகளின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்றுதான் கூறியிருக்கிறார்கள், ஆனால் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க அதிகரிக்க வேண்டும் என்று பேசிய முதல் பிரதமர் மோடி என குறிப்பிட்ட பேராசிரியர், இன்று ஒரு தென்னை மரத்துக்கு மூன்று ரூபாய் 50 பைசா இன்சுரன்ஸ் செய்தால், அந்த தென்னை மரம் பேரிடர் காலத்தில் சாய்ந்துவிட்டால் 2500 ரூபாய் பெற முடியும் என விவசாயிகள் நலன் காக்க போன்ற சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த வருடம் 30 ரூபாய் கொள்முதல் செய்யப்பட்ட துவரம்பருப்பு தற்போது 90 ரூபாய்க்கு அரசாங்கம் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது, விவசாயி என்கின்ற போர்வையில் போராடும் பஞ்சாப் மாநிலத்தில் கூட அதிக விவசாய பொருட்களை மத்திய அரசாங்கம் கொள்முதல் செய்து வருகிறது, விவசாயிகளுக்கு வேளாண் சட்டத்தின் மூலம் அச்சம் ஏற்படவில்லை, எதிர்க்கட்சிகளின் பொய் பிரச்சாரத்தின் மூலம் அச்சம் விவசாயிகள் மத்தியில் ஏற்படுத்தப்பட்டுள்ளது என தெரிவித்த பேராசிரியர்.

வேளாண் சட்டத்தால் விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் கிடையாது இந்த சட்டத்தால் அவர்களுக்கு வருமானம் தான் அதிகம் ஆகும், கார்ப்பரேட் நிறுவனங்கள் விவசாயி நிலத்தை அபகரித்து விடுவார்கள் என பொய் பிரச்சாரதை திமுக போன்ற எதிர்க்கட்சிகள் செய்து வருகின்றனர், திமுக நில அபகரிப்பு செய்தே பழக்கப்பட்ட கட்சி, திமுக கட்சியினர் மீது தான் நில அபகரிப்பு வழக்கு தமிழகத்தில் அதிகம் உள்ளது, ஒரு பழமொழி உண்டு, ஊரில் தான் திருடி ஊரில் எல்லாரும் திருடி என்று சொல்வது போல், கார்ப்பரேட் நிறுவனம் விவசாயிகளின் நிலத்தை அபகரித்துக் கொள்ளும் என்று திமுக பொய் பிரச்சாரம் செய்து வருகிறது.

ஆனால் இந்த சட்டம் விவசாயிகளின் உற்பத்திக்கான விலை தான் தவிர விவசாயிகளின் நிலத்திற்கும் இந்த சட்டத்திற்கும் எந்த தொடர்பும் கிடையாது. விவசாயிகளின் நலன் காக்கும் வகையில் அமைந்துள்ள வேளாண் சட்டம் விவசாயிகளுக்கு எதிரான சட்டம் என்று பொய்ப் பிரச்சாரம் செய்து பாஜக மற்றும் மோடிக்கு எதிராக பிரச்சாரம் செய்து வரும் எதிர்க்கட்சிகளின் பிரசாரம் வெற்றி பெறாது என குறிப்பிட்ட பேராசிரியர், நேற்றைய முந்தைய தினம் எதிர்க்கட்சிகள் அறிவித்த பந்த் படுதோல்வி அடைந்தில் இருந்தே தமிழக விவசாயிகள் நரேந்திர மோடியின் பக்கம் உள்ளார்கள் என்பது தெரிகிறது.

விவசாயிகள் பாதிக்கப்பட்டு இருந்தால் கண்டிப்பாக போராட்டத்திற்கு வந்து இருப்பார்கள், ஆனால் விவசாயிகளுக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லாததால் அவர்கள் இந்த போராட்டத்தை புறக்கணித்துள்ளார், இதை மக்களிடமும் விவசாயிகளிடம் எடுத்துச் சொல்லவும் விவசாயிகளின் நண்பன் மோடி என்ற பெயரில் பாஜக சார்பில் இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது என பாஜக மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் இராம.ஸ்ரீநிவாசன் தெரிவித்தார்.