காங்கிரசை வெளியேற்றிவிட்டு கமல்ஹாசனை கூட்டணியில் இணைக்க திமுக திட்டம்.! கமல்ஹாசன் உடன் பேரம் தொடங்கியதா.?

0
Follow on Google News

வருகின்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சியை வெளியேற்றிவிட்டு கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சியை திமுக கூட்டணியில் இணைக்க அரசியல் பேரம் நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது, திமுக-காங்கிரஸ் இடையே நீண்ட நாட்களாக உரசல் இருந்து வருவது குறிப்பிடதக்கது, நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரி இரண்டு மாவட்டத்தை தவிர்த்து காங்கிரஸ் கட்சிக்கு வேறு எந்த மாவட்டத்திலும் அக்கட்சிக்கு என்று ஒரு வாக்கு வாங்கி கிடையாது. அதுவும் நாகர்கோவில் கன்னியாகுமரி மாவட்டத்தில் கூட கூட்டணி பலத்துடன் தான் காங்கிரஸ் கட்சி இதற்கு முன் வெற்றி பெற்று வந்துள்ளது.

கடந்த சட்டமன்ற தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தலின் போது காங்கிரஸ் போட்டியிட்ட தொகுதிகளில் திமுகவினர் வேலை செய்து தான் காங்கிரஸ் வேட்பாளர்களை வெற்றி பெற செய்தனர், இது திமுக தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் கூட கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது, தமிழக காங்கிரஸ் கட்சியில் மாவட்டத்துக்கு சொற்ப எண்ணிக்கையில் தொண்டர்களை வைத்து கொண்டுள்ள கட்சியை நாம் ஏன் தலையில் தூக்கி சுமக்க வேண்டும் என நேரடியாக திமுக தலைமையிடமே தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்கள் திமுகவினர்.

இந்நிலையில் தற்போது நடிகர் ரஜினிகாந்த் புதிய கட்சி தொடக்கம் திமுகவுக்கு மிக பெரிய சவாலாக அமைந்துள்ளது, ரஜினி அரசியல் அறிவிப்பு வெளியானதில் இருந்து திமுக மற்றும் ரஜினி மக்கள் மன்றம் இடையே தொடர்ந்து கருத்து மோதல் இருந்து வருகிறது, மேலும் திமுக ஆதரவு ஊடகங்களும் ரஜினிக்கு எதிராகவே செய்திகளை பதிவு செய்து வருகின்றனர், மேலும் ரஜினி புதிய கட்சியில் முக்கிய பதவி வழங்கப்பட்டுள்ள தமிழருவி மணியன் தொடர்ந்து திமுகவை மிக கடுமையாக விமர்சனம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதனை தொடர்ந்து ரஜினிகாந்த் புதிய கட்சியை எதிர்கொள்ள நடிகர் கமல்ஹாசனை திமுக கூட்டணியில் இணைக்க முடிவு செய்துள்ள திமுக அதற்கான முயற்சிகளிலும் இறங்கியுள்ளது, மேலும் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் முழுவதும் போட்டியிட்டு சுமார் 4% சதவிகிதம் வரை வாக்கு வாங்கிய கமல்ஹாசனை கூட்டணியில் இணைத்து கொண்டு. தமிழகம் முழுவதும் தொண்டர்கள் இல்லாத தலைவர்களை மட்டும் வைத்துள்ள காங்கிரஸ் கட்சியை இதுவரை தலையில் சுமந்தது போதும் என முடிவெடுத்து கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சியை கழட்டி விடும் முடிவில் உள்ளது திமுக.

இந்நிலையில் கமல்ஹாசன் உடன் அரசியல் பேரத்தை திமுக தொடங்கியுள்ளதாக கூறப்படும் நிலையில், கமல்ஹாசன் தரப்பில் இருந்து எந்த ஒரு பதிலும் தெரிவிக்காமல் அமைதியாக இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது, இதனை தொடர்ந்து திமுகவிடம் இருந்து கமல்ஹாசன் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்க கூடும் என்றும், அவருடைய எதிர்பார்ப்பை திமுக பூர்த்தி செய்தல் திமுகவுடன் கமல்ஹாசன் கூட்டணி அமைக்க வாய்ப்புகள் இருப்பதாக அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருவது குறிப்பிடதக்கது.