நாங்க கூத்தாடி என்றால் நீ வாயாடியா.? மரிதாஸிடம் சரமாரியாக கேள்வி எழுப்பிய நடிகை கஸ்தூரி..

0
Follow on Google News

கொரோனா தொற்று இந்தியா முழுவதும் தீவிரமாக பரவி வரும் நிலையில், நாளுக்கு நாள் மரண எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே செல்கிறது, தமிழக முழுவதும் கொரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டுவர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், மருத்துவமனையில் படுக்கைகள் நிரம்பி வருவதால் ஆம்புலன்ஸ் வாகனத்தில் வைத்தே நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பரிதாப நிலையில் பல இடங்களில் கட்சி அளிக்கின்றது.

இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யானத்தை பொய் பேசினால் அறை விழும் என கருத்து தெரிவித்து பெரும் சர்ச்சையில் சிக்கினார்நடிகர் சித்தார்த், இதன் பின்பு பாஜகவினர் தன்னை தொலைபேசியில் மிரட்டுவதாக புகார் தெரிவித்திருந்தார், மேலும் ஆபாசமாக பேசுவதாகவும் தெரிவித்திருந்தார், இதனால் பாஜக மற்றும் நடிகர் சித்தார்த் இடையில் சமூக வலைதளத்தில் கடுமையான சண்டை நடைபெற்று வந்தது.

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் இவ்வேலையில், பிரபல எழுத்தாளர் மரித்தாஸ் தனது டிவீட்டர் பக்கத்தில், டேய் விடியல் எங்கடா? டேய் பெட் எங்கடா? டேய் பிணம் எரிக்க இடம் எங்கடா? டேய் கூத்தாடி சித்தார்த். உன்ன தாண்டா டேய். மக்கள் வருமானம் இல்லாமல் இருக்கும் போது மின்கட்டணம் கட்ட சொல்கிறது திமுக விடியல் அரசு. இப்போ வாயை திறடா சித்தார்த். வாய்க் கொழுப்பு பேசி திரிந்த! இப்போ பேசு டேய்.என பதிவு செய்திருந்தார்.

இதற்கு நடிகை கஸ்தூரி பதில் ட்வீட் செய்துள்ளார், அதில், எதிரிகளையும் மதிப்பதுதான் தமிழர் நாகரிகம். அதை மறக்க வேண்டாம். எதற்காக நீங்கள் நடிகர் சித்தார்த் தொழிலை குறித்து விமர்சனம் செய்ய வேண்டும், நீங்கள் வணங்கும் ஈசனும் கூத்தபிரான் தான். நடிகர்கள் கூத்தாடி என்றால் உங்கள் தொழில் வாயாடி. சரியா ? சித்தார்த்தை திட்டுவதாக நினைத்து எத்தனையோ கலைஞர்கள் வணங்கும் கலைத்தொழிலை கேவலப்படுத்த யாருக்கும் உரிமையில்லை.

மேலும் சித்தார்த் நடிகர்கள் அனைவரின் பிரதிநிதியும் இல்லை. ரஜினி கங்கனா,குஷ்பு, காயத்ரி ரகுராம், மிதுன் சக்ரவர்த்தி அக்ஷய் குமார் இவங்களுக்கு பிஜேபி ல என்ன பேரு? நீங்க ஒருவரை அசிங்க படுத்த வேண்டும் என்றால் அது உங்கள் விருப்பம், ஆனால் அவர்களின் நடிப்பு தொழிலை அவமரியாதை செய்ய வேண்டாம் என நடிகை கஸ்தூரி பதிலளித்துள்ளார்.