இன்றைய ராசி பலன் ( 15-05-2021)

0
Follow on Google News

மேஷம் : மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் முன் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. தொழில் மற்றும் வியாபார ரீதியான போக்குவரத்து விஷயங்களில் எச்சரிக்கை தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலை பளு அதிகரித்து டென்சனுடன் காணப்படுவார்கள். பெண்களுக்கு மன இறுக்கம் நீங்கும். ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
அஸ்வினி : வாய்ப்புகள் உண்டாகும்.
பரணி : வெற்றிகரமான நாள்.
கிருத்திகை : திறமைகள் வெளிப்படும்.

ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கணவன் மனைவிக்கு இடையே இருந்த நெருக்கம் குறையும். தொழில் மற்றும் வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கல் சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் தடையில்லாமல் நடக்கும். பெண்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் வரலாம். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
கிருத்திகை : ஆதரவு கிடைக்கும்.
ரோகிணி : மேன்மை உண்டாகும்.
மிருகசீரிஷம் : பாராட்டப்படுவீர்கள்.

மிதுனம் : மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் எச்சரிக்கை தேவை. பண ரீதியான விஷயங்களில் மூன்றாம் மனிதர்களை நம்புவதை தவிர்ப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகளின் தொந்தரவை சமாளிப்பீர்கள். பெண்களுக்கு நினைத்தது நடக்கும். ஆரோக்கியம் சீராக இருந்தாலும் உணவு கட்டுப்பாடு மேற்கொள்வது நல்லது.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மிருகசீரிஷம் : தெளிவான நாள்.
திருவாதிரை : தனவரவுகள் கிடைக்கும்.
புனர்பூசம் : லாபகரமான நாள்.

கடகம் : கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருப்பது நல்லது. தேவையில்லாத பிரச்சனைகளில் மூக்கை நுழைத்தால் வீண் வம்புகள் ஏற்படலாம். வழக்கு தொடர்பான விஷயங்களில் பாதக பலன்கள் உண்டாகும் என்பதால் கவனம் தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்த நிலை நீடிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சோர்வு இருக்கும். பெண்கள் புதிய விஷயங்களை தைரியமாக மேற்கொள்வார்கள். வெளியிட பயணங்களில் கவனமுடனிருப்பது நல்லது.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
புனர்பூசம் : சிந்தனைகள் தோன்றும்.
பூசம் : முன்னேற்றம் ஏற்படும்.
ஆயில்யம் : புத்துணர்ச்சி உண்டாகும்.

சிம்மம்: சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மனக்குறை நீங்கி உற்சாகத்துடன் இருப்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வந்த மந்தநிலை மாறி புதிய விஷயங்களை மேற்கொள்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக பணியாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. பெண்களுக்கு குடும்ப பொறுப்புகள் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
மகம் : செல்வாக்கு அதிகரிக்கும்.
பூரம் : வாய்ப்புகள் உண்டாகும்.
உத்திரம் : மகிழ்ச்சியான நாள்.

கன்னி : கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பாராத மாற்றங்கள் நிகழ வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்களை தவிர்ப்பது நல்லது. புதிய தொழில் துவங்க நினைப்பவர்கள் சற்று தள்ளிப் போடுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்களின் மூலம் ஆதாயம் காண்பீர்கள். பெண்களுக்கு மனோதிடம் அதிகரிக்கும். ஆரோக்கியத்தின் மீது அக்கறை கொள்வது நல்லது.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
உத்திரம் : உதவிகள் கிடைக்கும்.
அஸ்தம் : கலகலப்பான நாள்.
சித்திரை : தடைகள் அகலும்.

துலாம்: துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் யோகம் உண்டாகும். தொட்டதெல்லாம் துலங்க கூடிய அற்புத நாளாக அமைய இருப்பதால் மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். குடும்பத்தினர் உங்களைப் புரிந்து கொள்ளாதவர்கள் புரிந்துகொள்வதற்கு வாய்ப்புகள் அமையும். சகோதர சகோதரிகளின் ஒற்றுமையில் மற்றவர்களுடைய தலையீடு இருக்கும். பெண்களுக்கு மன உளைச்சல் ஏற்படலாம். ஆரோக்கியம் சீராக இருந்தாலும் எச்சரிக்கை தேவை.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு
சித்திரை : தீர்வு கிடைக்கும்.
சுவாதி : சாதகமான நாள்.
விசாகம் : முன்னேற்றம் ஏற்படும்.

விருச்சிகம் : விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செயல்படாமல் நிறுத்தி நிதானத்துடன் செயலாற்றுவது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் உங்களை சுற்றி இருப்பவர்களை உங்களுக்கு எதிரியாக மாறுவார்கள். உத்தியோகத்தில் மன அமைதி காண பொறுமையை கடைபிடிப்பது நல்லது. பெண்களுக்கு நினைத்த பொருள் ஒன்று கிடைக்கும். சுவாசம் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படலாம்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
விசாகம் : சிந்தித்து செயல்படவும்.
அனுஷம் : அலைச்சல்கள் உண்டாகும்.
கேட்டை : குழப்பமான நாள்.

தனுசு : தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவிக்கு இடையே வாக்குவாதங்களை தவிர்த்து கொள்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் மன உளைச்சலில் இருப்பார்கள். தியானம், யோகா போன்றவற்றில் மேற்கொள்வதன் மூலம் நிம்மதி காணலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் முன்னெச்சரிக்கை தேவை. பெண்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும் என்பதால் தங்களை மேலும் மெருகேற்றிக் கொள்வது நல்லது. ஆரோக்கியம் சீராகும்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
மூலம் : வெற்றி கிடைக்கும்.
பூராடம் : பொருள் வரவு உண்டாகும்.
உத்திராடம் : ஆதரவு கிடைக்கும்.

மகரம் : மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் நினைத்த ஒரு விஷயத்தை சாதிக்கக் கூடிய நாளாக இருக்கும். தொழில் மற்றும் வியாபார ரீதியான பிரச்சினைகள் முடிவுக்கு வரலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திட்டமிட்ட காரியங்களை சரியாக செய்து முடிப்பீர்கள். பெண்களுக்கு தேவையில்லாத அலைச்சல் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. வெளியிட பயணங்களின் போது எச்சரிக்கை தேவை. ஆரோக்கியத்தில் கவனமுடனிருப்பது நல்லது.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
உத்திராடம் : உதவிகள் கிடைக்கும்.
திருவோணம் : கற்பனைத்திறன் அதிகரிக்கும்.
அவிட்டம் : அனுசரித்து செல்லவும்.

கும்பம் கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்ப விஷயங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் சில இழப்புகளை சந்திக்க நேரலாம் என்பதால் கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் மற்றவர்களின் உதவியை வேண்டிய நேரத்தில் பெறுவீர்கள். பெண்களுக்கு மனதுக்கு பிடித்தவர்கள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கப் பெறும். பெற்றோர்களின் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
அவிட்டம் : முன்னேற்றமான நாள்.
சதயம் : இடமாற்றம் உண்டாகும்.
பூரட்டாதி : கலகலப்பான நாள்.

மீனம்: மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் மற்றவர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற போராடுவீர்கள். தொழில் மற்றும் வியாபார ரீதியான விஷயங்களை யாரிடமும் கலந்து ஆலோசிக்காமல் முடிவெடுப்பது நல்லதல்ல. உத்தியோகத்தில் இருப்பவர்கள் சில மாற்றங்கள் சந்திக்க நேரலாம். பெண்கள் சில புதிய விஷயங்களை கற்றுக் கொண்டு பாராட்டுக்களைப் பெறுவீர்கள். ஆரோக்கியத்தில் எச்சரிக்கை தேவை.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
பூரட்டாதி : அனுசரித்து செல்லவும்.
உத்திரட்டாதி : எதிர்ப்புகள் மறையும்.
ரேவதி : சாதகமான நாள்.