பொதுமக்கள் சுமையை குறைக்கும் அதிமுகவின் அதிரடி வாக்குறுதிகள். பட்டைய கிளப்பும் எடப்பாடி…!

0

சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 7தமிழகத்தில் பிரச்சாரம் களைகட்டி வருகிறது. இதில் திமுகவும் அதிமுகவும் போட்டி போட்டு பிரச்சாரம் செய்து வருகிறார்கள். தமிழகமே திருவிழா கோலமாக காட்சியளிக்கிறது. நேற்று காலை சென்னை மயிலாப்பூர் பகுதியைச் சேர்ந்த அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதல்வர் எடப்பாடி பிரச்சாரம் செய்து வந்தார்.

அப்போது மயிலாப்பூர் மாங்கொல்லையில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரை ஆதரித்து பிரச்சார வாகனத்தில் நின்று கொண்டே பேசிக் கொண்டிருந்தார் முதல்வர் எடப்பாடி. முதல்வரின் பிரச்சாரத்தை பார்க்க மக்கள் திரண்டு வந்தனர். நாளுக்கு நாள் எடப்பாடியும் செல்வாக்கு அதிகரித்து கொண்டேதான் இருக்கிறது.

அப்போது எடப்பாடி அதிமுக செய்த சாதனைகளையும், தமிழகத்தின் வளர்ச்சியையும் மக்களுக்கு விளக்கி கொண்டு இருந்தார். பிறகு அதிமுக அரசு இந்தத் தேர்தலில் வெற்றி பெற்றால் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவசமாக வாஷிங் மிஷின், வருடத்திற்கு ஆறு சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும் என்று உறுதி அளித்தார்.

இதில் முதல்வர் எடப்பாடி மக்களை கவரும் விதமாக அறிவித்த ஒரு அறிவிப்பு தான் தற்போது தமிழகம் முழுவதும் உள்ள மக்களிடம் கொண்டு போய் சேர்த்துள்ளது. அது என்னன்னா நீங்க ரேஷன் கடையை தேடி அலைந்து, வரிசையில் நின்று வாங்க வேண்டிய அவசியமே இல்லை. என்னா ரேஷன் பொருட்கள் உங்கள் வீடு தேடி வரும் அதிமுக அரசு ஆட்சிக்கு வந்தால் என்று எடப்பாடி உறுதி கூறினார். இப்படி மக்களுக்கு நலம் தரக்கூடிய திட்டங்களை அடுக்கிக் கொண்டே போகும் எடப்பாடியார் நாளுக்கு நாள் செல்வாக்கு அதிகரித்து வருகிறது.