ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற தேர்தல்… கரை சேருமா பாஜக..!

0
Follow on Google News

இந்தியா : காங்கிரசின் வீழ்ச்சிக்கு பிறகு ஜம்மு காஷ்மீர் புத்துணர்ச்சி பெற்றுள்ளது. ஏழு தசாப்தங்களாக மின்விநியோகமே இல்லாத கிராமங்களில் மின்சார வசதி, சாலை வசதி, அடிப்படை கட்டமைப்பு என ஜம்மு காஷ்மீரின் முகம் மாறிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஜம்மு காஸ்மீர் மாநிலத்தில் சட்டசபை தொகுதிகளை வரையறுப்பது தொடர்பான தேர்தல் ஆணையத்தின் இறுதி அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதனால் உற்சாகமடைந்த பிஜேபி தேர்தல் பணிகளுக்கான வியூகத்தை வகுக்க ஆரம்பித்துள்ளது அம்மாநில பிஜேபி தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது. மே 15 ஆம் தேதி ஜம்மு பூஞ்ச் நாடாளுமன்ற தொகுதியில் சக்திகேந்திரா மாநாடுகள் நடத்த பிஜேபி தயாராகி வருகிறது. அதேநேரத்தில் உதம்பூர் தோடா நாடாளுமன்ற தொகுதிக்கான சக்திகேந்திரா மாநாடு மே 22இலும் நடைபெற இருக்கிறது.

மே 29 அன்று நடைபெற உள்ள மாநில செயற்குழு கூட்டத்தில் கட்சியின் செயல்பாடுகள் குறித்து அறிக்கை கேட்கப்படும் என தெரிகிறது. இந்த கூட்டங்களில் பிஜேபி தேசிய பொதுச்செயலாளரும் ஜம்மு காஷ்மீர் தேர்தல் பொறுப்பாளருமான தருண் சுக் கலந்துகொள்கிறார் என மாநில பிஜேபி தெரிவித்துள்ளது. இந்த சந்திப்புகளில் மத்திய பிஜேபி அரசின் திட்டங்களை மக்களிடையே கொண்டு சென்று வெற்றியடைய வைப்பதும் மக்களின் நம்பிக்கையை பெறுவதுமே நோக்கமாக இருக்கும் என கூறப்படுகிறது.

அதேசமயத்தில் மூத்த தலைவர்கள் களத்தில் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் பொறுப்புகள் கொடுக்கப்படலாம் என தெரிகிறது. சட்டசபை தேர்தலை பொறுத்தவரையில் பிஜேபி களத்தில் வலுவாக உள்ளதாக மாநில தலைவர் ரவீந்திர ரெய்னா குறிப்பிட்டார். மேலும் சமீபத்தில் பிரதமர் மோடி சம்பா மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு பேரணியில் கலந்துகொண்டார்.

அந்த பேரணியில் மக்களின் ஏகோபித்த ஆதரவை காணமுடிந்ததாக மாநில பிஜேபியினர் கூறிவருகின்றனர். அடுத்த வருடம் மார்ச்சுக்குள் சட்டசபை தேர்தல் ஜம்மு காஷ்மீருக்கு நடத்தப்படலாம் என அதிகாரபூர்வமற்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.