ஆக்சிஜன் முதல் உணவு வரை… சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலார்கள் மீட்க காரணமாக இருந்த தமிழ்நாடு…

0
Follow on Google News

உத்தரகாண்ட் மாநிலம் அருகே சாலை அமைக்கும் பணிக்க தோண்டப்பட்டு சுரங்கம் தோண்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த தீபாவளி அன்று இந்தியாவே பண்டிகையை கோலாகலமாக கொண்டாடி வந்த நிலையில், சுரங்க அமைக்கும் பணியில் ஈடுப்பட்டு கொண்டிருந்த 41 தொழிலாளர்கள் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவினால் சிக்கி கொண்டனர், சுரங்கத்தில் இருந்து வெளியேறும் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு அந்த வழி மூடப்பட்டதால் சிக்கி கொண்ட 41 தொழிலார்களும் வெளியே வர முடியாமல் மாட்டி கொண்டனர்.

இதனை தொடர்ந்து சிக்கி கொண்ட 41 தொழிலார்களையும் பத்திரமாக மீட்க மீட்புப் பணிக்களத்தில் தேசிய பேரிடர் மீட்பு படை, மாநில பேரிடர் மீட்பு குழுவினர் இறங்கினர். முதல் கட்டமாக சுரங்கத்தில் சிக்கிய தொழிலார்கள் சுவாசிக்க தேவையான ஆக்சிஜன் அனுப்புவதற்காக, ரிக் தொழில் நுட்பத்துடன் கூடிய கருவிகள் மூலம்தான் துளையிடப்பட்டு அது வழியாக முதலில் ஆக்சிஜன் அனுப்பப்பட்டது.

அதனை தொழிலார்கள் உடல்நிலையை கண்காணிக்க எண்டோஸ்கோபி கேமரா அனுப்பப்பட்டு கண்காணிக்க பட்டு வந்துள்ளனர். இதனை தொடர்ந்து துளை வழியாக தொழிலார்களுக்கு தேவையான உணவு அனுப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் சுரங்கத்தில் 41 தொழிலாளர்கள் சிக்கிய இடத்தில் தண்ணீர் மற்றும் மின்சார வசதி என்பது இருந்துள்ளது.

சுரங்கத்தில் நிலச்சரிவு ஏற்பட்டவுடன் குழாய் மூலம், உணவு, தண்ணீர், ஆக்சிஜன், மருந்துகள் அனுப்பப்பட்டது, மேலும் தொழிலார்களை தொடர்பு கொள்வதற்காக உள்ளே வாக்கி-டாக்கிகள்அனுப்பப்பட்டுள்ளது. மேலும் பருப்பு அரிசி, கொண்டைக்கடலை, பருப்புகள், உலர்ந்த பழங்களும் அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் தொழிலாளர்களுக்கு தேவையான பல்வேறு சமைத்த உணவுகளும் தொடர்ந்து வழங்கப்பட்டு வந்துள்ளது.

அதோடு சத்து குறைபாட்டை போக்கும் வகையில் மென்று சாப்பிடக்கூடிய வைட்டமின் சி மாத்திரைகளும் மருத்துவர்கள் ஆலோசனை படி அனுப்ப பட்டு வந்துள்ளது. இப்படி சுரங்கத்தில் உயிருக்கு போராடிய தொழிலார்களை காக்க, ஆக்சிஜன் தொடங்கி உணவு, மாத்திரை, வாக்கி டாக்கி என அனைத்து பொருட்களும் ‘பி.ஆர்.டி. – ஜிடி 5’ என்ற கருவி மூலம் துளை போட்டு உள்ளே பொருட்களை அனுப்பும் பணியை மிக சிறப்பாக செய்து வந்துள்ளது தமிழகத்தில் திருச்செங்கோட்டில் இயங்கி வரும் இரண்டு நிறுவனங்கள்.

சுரங்கத்தில் சிக்கி கொண்ட தொழிலார்களுக்கு மன ரீதியாக சஞ்சலம் அடையக் கூடாது என்பதால் மனநல மருத்துவர்கள் மூலம் தொடர்ந்து, அவர்களுக்கு நம்பிக்கை அளிக்கப்பட்டு வந்தது, மேலும் உறவினர்களிடம் பேச வைக்கப்பட்டது. வாக்கி டாக்கி மூலம் தொடர்ச்சியாக தகவல் தொடர்பில் இருந்து வந்தனர்.

இந்நிலையில் தமிழகத்தை சேர்ந்த இரன்டு நிறுவனங்கள் உதவியுடன் சுரங்கத்தில் சிக்கி கொண்ட ஊழியர்களுக்கு தேவையான உணவு, ஆக்ஜிஜன் அனுப்பட்ட பின்பு, அவர்களை மீட்பதற்காக, அமெரிக்க தயாரிப்பான ஆகர் இயந்திரம் மூலம் பக்கவாட்டில் துளையிடப்பட்டது. ஆனால், அந்த இயந்திரத்தின் பிளேடு, கம்பிகளில் சிக்கி உடைந்து சுரங்கப் பாதையில் சிக்கிக் கொண்டதால், அந்த இயந்திரத்தை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.

இதையடுத்து, பல்வேறு வியூகங்கள் வகுக்கப்பட்டு மீட்புப் பணிகள் வெற்றிகரமாக இறுதிக் கட்டத்தை எட்டியது. இறுதியாக மலைப்பகுதியில் எலிவளை போல குடைந்து சிறிய அளவிலான சுரங்கம் தோண்டுவதில் கைதேர்ந்தவர்களான எலிவளை தொழிலார்கள் டெல்லியில் இருந்து வரவழைக்கப்பட்டு சுமார் 17 நாட்கள் சுரங்கத்தில் சிக்கி கொண்ட 41 தொழிலார்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.