என் மகளை காப்பாற்றுங்கள்… நீதிமன்றம் சென்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி … மகளின் வாக்குமூலம் என்ன தெரியுமா.?

0
Follow on Google News

உத்திரபிரதேசம் : மாநில மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர் லவ் ஜிஹாத் மூலம் தனது மகளை திருமணம் செய்துகொண்டதாக ஹாஜியாபாத் காவல்நிலையத்தில் எப்.ஐ.ஆர் பதிந்துள்ளார். இதனால் பரபரப்பு தொற்றியுள்ளது. தான் முழு விருப்பத்துடனேயே திருமணம் செய்திருப்பதாக அதிகாரியின் மகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

“மீரட்டில் உள்ள மவானாவில் வசிக்கும் அப்துல் ரகுமான் எனும் நபர் எனது மகள் டாக்டர் ஹர்ஷ் பார்தி சாரங்கியை 2017ல் சூழ்ச்சி செய்து அதன் ஒருபகுதியாக தற்போது மோசடியாக திருமணம் செய்துள்ளார்” என ஐ.ஏ.எஸ் அதிகாரி சாரங்கி காசியாபாத் காவலநிலையத்தில் புகாரளித்தார். அதிகாரி சாரங்கி தற்போது டெல்லியில் பணிபுரிகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த பெண்ணின் தந்தை சாரங்கி அளித்த புகாரின் அடிப்படையில் ஐபிசி 420 சட்டப்பிரிவின் கீழ் அப்துல் ரகுமானுக்கு எதிராக வழக்கு பதியப்பட்டு எப்.ஐ.ஆர் போடப்பட்டதை காசியாபாத் எஸ்பி முனிராஜ் உறுதிப்படுத்தினார். இருந்தபோதிலும் அந்த பெண்ணும் ரகுமானும் 2018 முதல் ஒன்றாக வாழ்ந்துவருவதாக தெரிவித்துள்ளார்.

உத்திரபிரதேச யோகி அரசு தனது முதல் ஆட்சியிலேயே திருமணத்திற்கு பிறகு கட்டாயமாதமாற்றத்திற்கு எதிராக சட்டம் ஒன்றை இயற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் ஐ.ஏ.எஸ் அதிகாரி அளித்துள்ள புகாரில் தனது மகளை கட்டாய மதமாற்றம் செய்ய வற்புறுத்துவதாக குறிப்பிட்டிருந்தார். கட்டாய மதமாற்றத்திற்கு எதிராக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் இருக்க தனது மகள் ஹர்ஷ் பார்தியை ரகுமான் ஆர்யசமாஜ் கோவிலில் வைத்து திருமணம் செய்ததாகவும்,

பின்னர் அந்த கோவிலிலேயே திருமண சான்றிதழை பெற்றதாகவும் குறிப்பிட்டிருந்தார். இவரது புகாரால் ரகுமான் , ஹிந்து வேதிக் சபா மற்றும் ஆர்ய சமாஜ் மந்திர் அறக்கட்டளையின் காசியாபாத் அலுவலகப்பணியாளர்கள் மீதும் வழக்கு பதியப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதிகாரியின் மகள் கூறுகையில் தனது பெற்றோர் மனரீதியாக தங்களை துன்புறுத்துவதாகவும் கணவர் அப்துல் ரகுமான் மற்றும் தனது குழந்தைகளுடன் வாழ விரும்புவதாகவும் கூறினார்.

மேலும் 2017ல் அப்துலை சந்தித்ததாகவும் சமயலறையில் தீப்பிடித்து தான் சிக்கிக்கொண்டபோது அவர்தான் தன உயிரை காப்பற்றினார் என்றும் தெரிவித்தார். மேலும் ஹிந்து முறைப்படி திருமணம் பதிவுசெய்யப்பட்டுள்ளது. அதனால் ஆதாரத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பேன் என கூறியுள்ளார். அதையடுத்து காசியாபாத்தில் பதியப்பட்ட வழக்குகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது.