மத்திய அமைச்சரை திக்குமுக்காட செய்த ஐ.ஏ.எஸ் அதிகாரி… என்ன நடந்தது தெரியுமா.?

0
Follow on Google News

புதுதில்லி : மத்திய அரசு நாட்டின் உட்கட்டமைப்பு மற்றும் எல்லை பாதுகாப்பு பகுதிகளின் கட்டமைப்பு குறிப்பாக சாலைகள் மேம்படுத்தல் மற்றும் புதிய சாலைகள் அமைப்பதில் அதிக முனைப்பு காட்டிவருகிறது. அதிலும் மத்திய போக்குவரத்துத்துறையில் நிதின் கட்கரி பொறுப்பேற்ற பின்னர் கட்டமைப்பு பணிகளில் அமைச்சகம் தீவிரமாக இறங்கியுள்ளது.

இந்நிலையில் பிஹார் மாநிலத்தில் கட்டப்பட்டுவரும் ஒரு பாலம் இடிந்துவிழுந்ததற்கு ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர் கூறிய காரணம் மத்திய அமைச்சர் நிதின்கட்கரியை திடுக்கிடவைத்துள்ளதாக கூறப்படுகிறது. பிஹார் மாநிலம் சுல்தாங்கஞ்ச் எனும் இடத்தில் கங்கையாற்றின் மேல் ஒரு பாலம் கட்டப்பட்டு வருகிறது. இந்த ஆற்றில் கட்டப்படும் பாலத்தின் ஒருபகுதி ஏப்ரல் 29 அன்று பெய்த கனமழையின்போது இடிந்து விழுந்தது.

இதுகுறித்து ஐ.ஏ.எஸ் அதிகாரி கொடுத்த பேட்டியில் ” சுல்தாங்கஞ்ச் ஆற்றில் கட்டப்பட்டு வரும் பாலம் பலத்த காற்றின் காரணமாக இடிந்து விழுந்துள்ளது” என கூறினார். இதைத்தொடர்ந்து பிஹாரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின்கட்கரி உரையாற்றும்போது பாலம் இடிந்துவிழுந்த சம்பவம் குறித்து பேசினார்.

நிதின் கட்கரி பேசுகையில் ” ஏப்ரல் 29 அன்று பாலம் இடிந்து விழுந்துள்ளது. அதற்கான காரணம் என்ன என்பதை எனது செயலாளரிடம் விசாரித்தேன். எனது செயலாளர் பலத்த காற்று காரணமாக இடிந்துவிட்டதாக கூறினார். இந்த பதில் என்னை திக்குமுக்காட வைத்துவிட்டது. ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி இப்படிப்பட்ட ஒரு விளக்கத்தை எப்படி நம்பினார் என்பது எனக்கு திகைப்பாகவும் வியப்பாகவும் உள்ளது.

பலத்த காற்றினால் ஒரு பாலம் எப்படி இடிந்துவிழும் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. நிச்சயமாக வேறு ஏதாவது தவறுகள் நிகழ்ந்திருக்க வேண்டும். தரத்தில் சமரசம் செய்யாமல் பாலம் அமைப்பதற்கான கட்டுமான செலவை குறைப்பதன் அவசியத்தை நாம் உணரவேண்டும்” என மத்திய அமைச்சர் கட்கரி கூறினார்.

மேலும் நிதின்கட்கரி வெளிப்படையாக பேசும் குணம்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. சுல்தாங் கஞ்ச் மற்றும் அகுவானி இடையிலேயான இந்த பாலம் காட்டும் பணி 2014ல் தொடக்கி 2019ல் முடிக்கப்பட இருந்தது. ஆனாலும் அதன்பணிகள் இன்னும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 3116 மீட்டர் நீளம் கொண்ட இந்த பாலத்தின் பணி இந்த வருட இறுதியில் முடியும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்த பாலம் இடிந்து விழுந்தது தொடர்பாக மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பதாக சுல்தான்கஞ்ச் எம்.எல்.ஏ நாராயண் மண்டல் தெரிவித்துள்ளார். இந்தப்பாலத்தின் கட்டுமானப்பணிக்கான செலவு 1,1710 கோடிகள் என்பது குறிப்பிடத்தக்கது.