அட்ரா சக்கை….! மாரிதாஸ் வழக்கில் நேரில் ஆஜராகிறார் சுப்பிரமணிய சுவாமி..! வழக்கறிகர்களுடன் அவசர ஆலோசனை..

0
Follow on Google News

திமுக ஐடி பிரிவு மதுரை மாவட்ட நிர்வாகி கொடுத்த புகாரின் பெயரில் சமீபத்தில் கைது செய்யப்பட்டு தேனி சிறையில் அடைக்கப்பட்டார் மரித்தாஸ். இந்த வழக்கை விசாரித்த மதுரை உயர்நிதி மன்ற நீதிபதி வழக்கை ரத்து செய்து தீர்ப்பு வழங்கினார். ஆனால் மாரிதாஸ் மீது தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அடுத்தடுத்து வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் மாரிதாஸ். இதனிடையே மாரிதாஸ் விவகாரத்தை முழுவதுமாக கையில் எடுத்தது பாஜக.

மாரிதாஸ் மீது தொடர்ந்து பல்வேறு வழக்குகள் பதிவு செய்து அவரை குண்டாஸ் சட்டத்தில் சிறையில் அடைக்க ஆரம்ப கட்டத்தில் இருந்தே திமுக தரப்பில் இருந்து மும்முரமாக இருந்த வந்ததாக தகவல் வெளியான நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் ஒரு குழுவினர் தமிழக ஆளுநரை நேரில் சந்தித்து ஆளும் திமுக அரசு கருத்து சுதந்திரத்துக்கு எதிராக செயல்பட்டு வருவதாகவும், திமுகவுக்கு எதிராக விமர்சனம் செய்பவர்களை பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் புகார் தெரிவித்தனர்.

இதன் பின்பு பாஜக தரப்பில் அடுத்தடுத்து சட்ட நடவடிக்கைகளில் இறங்கியது, இதனை தொடர்ந்து குண்டர் சட்டத்தில் மாரிதாஸை சிறையில் அடைக்கும் நடவடிக்கையில் இருந்து ஆளும் திமுக தரப்பு சற்று பின் வாங்கியதாக கூறபடுகிறது. இந்நிலையில் மாரிதாஸ் கைது செய்த பின்பு சுமார் ஒரு வார காலத்துக்குள் 2000 கிலோ மீட்டருக்கு மேல் அவரை கவல் துறையின் டெம்போ வாகனத்தில் அலைக்கழித்து வருவதாக கூறபடுகிறது.

மேலும் தற்போது மாரிதாஸ் மீது நிலுவையில் உள்ள வழக்குகள் மற்றும் திமுக அரசின் பழிவாங்கும் நடவடிக்கை குறித்து கடந்த இரு தினங்களுக்கு முன்பு பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி கவனத்துக்கு எடுத்து கொண்டு செல்லப்பட்டுள்ளது, இதனை தொடர்ந்து மாரிதாஸ் வழக்கை நடத்தி கொண்டிருக்கும் வழக்கறிஞர்களில் ஒருவரை தொடர்பு கொண்டு வழக்கு குறித்து முழு விவரத்தையும் கேட்டு தெரிந்து கொண்டுள்ளார் சுபராமணிய சுவாமி என கூறபடுகிறது.

இந்நிலையில் இதன் பின்பு மீண்டும் மாரிதாஸ் வழக்கில் தொடர்புடைய வழக்கறிஞரை தொடர்பு கொண்டு மாரிதாஸ் விடுதலைக்கு தேவையான சட்ட ஆலோசனை வழங்கிய சுப்பிரமணி சுவாமி. முடியாத பட்சத்தில் தானே மரித்தாஸ் வழக்கில் நேரில் ஆஜராகி வாதாடுவதற்கு வருவதாக தெரிவித்துள்ளதாக கூறப்படும் நிலையில் , களத்தில் சுப்பிரமணிய சுவாமி இறங்கும் தகவல் அறிந்து திமுக தரப்பு பீதியில் மாரிதாஸ் விவகாரத்தில் பின்வாங்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.