கண் பார்வை, இதயத்தை சீராக்கும் இந்து உப்பு…

0
Follow on Google News

இந்து உப்பில் என்னனென்ன பயன்கள் இருக்கு. இந்து உப்பு எதற்கு பயன்படும்?? இந்து உப்பு நற்குணங்கள் மற்றும் தீய குணங்களை பற்றி இங்கு காண்போம்.

உப்பு உருவாக்கப்படும் விதம்: இந்து உப்பு என்றால் என்ன ?அதனை பற்றி முதலில் காண்போம் இதற்கு இந்து உப்பு அல்லது இமயமலை உப்பு என்று அழைக்கப்படும் .இது இந்தியாவை விட அதிகமாக பாகிஸ்தானிலிருந்து தான் இது வெட்டி எடுக்கப்படுகிறது. இவ்வகையான உப்பு பாறை உப்பை சார்ந்தது. இவை இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளில் பெரும்பாலும் வெட்டி எடுக்கப்படுகிறது. இந்த உப்பை பொருத்தவரை வெட்டி எடுத்த உடனே நம் பயன்பாட்டிற்கு வருவதில்லை. இளநீரில் பதப்படுத்தப்பட்டு அதற்குப் பின்தான் பயன்பாட்டிற்கு வரும்.

பயன்கள்:
உப்பில் உள்ள வேதியல் பொருள் சோடியம் க்ளோ ராய்டு .இது இந்து உப்பு சோடியம் குளோரைடு என்று அழைக்கப்படுகிறது. கடல் உப்பு சுத்தமாக வெள்ளை நிறத்தில் இருக்கும் .ஆனால் இந்த இந்துஉப்பு பொருத்தவரைக்கும் வெள்ளை நிறத்திலும், கொஞ்சம் பழுப்பு நிறத்திலும் கலந்து தோற்றத்தில் இருக்கும். சித்த மருத்துவம், ஆயுர்வேத மருத்துவத்தில் இந்துஉப்பு பெரிய இடம் பெற்றுள்ளது .இந்த உப்புக்கு குளிர்ச்சியூட்டும் தன்மை உண்டு. கண் பார்வை மற்றும் இதயத்தை சீராக்கும். ரத்த அழுத்தத்தை சீராக்கும். இந்து உப்பு உடலில் தேய்த்து சிறிது நேரத்திற்கு பிறகு குளித்தால் உடல் அசதி நீங்கும் ,மனமும் உடலும் புத்துணர்ச்சி தரும்.

இது இளம் சூடான நீரில் வாய் கொப்பளித்தால் வயிற்றிலுள்ள துர் நாற்றம்,பல்வலி, ஈறு வீக்க முதலியவற்றை சீராக்கும் மூலம் வயிற்றுப்புண்களை சீராகும். அதுபோல ஒரு தேக்கரண்டி உப்பு ,ஒரு தேக்கரண்டி மண்ணெண்ணெய். இது இரண்டையும் ஒரு வாலி தண்ணீரில் கலந்து கரைய வைத்து துடைத்தால் தரையில் உள்ள கறைகள் எல்லாம் நீக்கப்படும். மேலும் இந்து உப்பு பல நன்மைகள் உள்ளதால் உயர்தர உப்பாக விளங்குகிறது.