மதுரை சித்திரை திருவிழா அன்று சட்டசபை தேர்தலா? தேர்தல் ஆணையத்துக்கு பேராசிரியர் கோரிக்கை.!

0
Follow on Google News

தமிழக சட்டசபை தேர்தல் தொடர்பாக கடந்த 2 நாட்கள் அரசியல் கட்சிகள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், தற்போதைய சட்டசபையின் பதவிக்காலம் மே 24ம் தேதியுடன் முடிவடைகிறது. எப்போது போல், வரும் தேர்தலிலும் தமிழகத்தில் அதிகளவு ஓட்டு பதிவாகும் என எதிர்பார்க்கிறோம். கொரோனா காலத்தில் ஓட்டுப்போட கூடுதலாக ஒரு மணி நேரம் அவகாசம் வழங்கப்படும். சமூக இடைவெளியை பின்பற்றி ஓட்டுப்போட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

இந்நிலையில் இம்மாதம் இறுதிக்குள் அல்லது அடுத்த மாதம் தொடக்கத்தில் தமிழக சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், ஏப்ரல் மாதம் இறுதியில் மதுரை சித்திரை திருவிழா நடைபெற இருப்பதால் பாஜக மாநில பொதுச்செயலாளர் பேராசிரியர் இராம ஸ்ரீநிவாசன் சில கோரிக்கைகளை தேர்தல் ஆணையத்துக்கு முன் வைத்துள்ளார், அதில் மதுரையில் நடக்கும் சித்திரை திருவிழா தமிழகத்தில் நடக்கும் பிரமாண்ட திருவிழாவாகும்.

ஏப்ரல் 24ஆம் தேதி அன்று மீனாட்சி திருக்கல்யாணம், ஏப்ரல் 27ஆம் தேதி வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்வும் நடைபெறும், இதில் ஏப்ரல் 27ஆம் தேதி தமிழகம் முழுவதும் இருந்தும் பெருமளவில் பக்தர்கள் மதுரையில் கூடுவார்கள், கடந்த ஆண்டு ஊரடங்கு உத்தரவு காரணமாக சித்திரை திருவிழா கொண்டாட்டம் தடைபெற்ற நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கொண்டாடப்படும் மதுரை சித்திரை திருவிழாவை மக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் கொண்டாட காத்திருக்கின்றனர் என தெரிவித்த பேராசிரியர்.

தமிழகத்தில் வேறு எந்த திருவிழாவிற்கு மதுரையில் நடக்கும் திருவிழாவில் கூடும் அளவுக்கு மக்கள் கூட்டம் கூடாது, அந்த அளவுக்கு மக்கள் பெருமளவில் கூடும் சித்திரை திருவிழா நடக்கும் காலத்தில் தேர்தல் நடந்தால் சட்டம் ஒழுங்கு பாதிப்பும் ஏற்படும் என சுட்டி காட்டிய பேராசிரியர், மேலும் திருவிழா தேதியில் தேர்தல் நடந்தால் மக்கள் சிரமத்தை சந்திக்க நேரிடும், இதனால் ஓட்டு பதிவு குறையும் என்றும், ரம்ஜான், கிருஷ்மஸ் பண்டிகையின் போது தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்தாது, அதே போன்று மதுரையில் நடக்கும் சித்திரை திருவிழாவினை கருத்தில் கொண்டு திருவிழாவுக்கு முன்பு அல்லது திருவிழாவுக்கு பின்பு தேர்தலை நடத்த வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு பாஜக மாநில பொதுச்செயலாளர் பேராசிரியர் இராம ஸ்ரீநிவாசன் கோரிக்கை விடுத்தார்.