தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவராக அண்ணாமலை ஐபிஎஸ் தேர்வு செய்யப்பட்டது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக எல்.முருகன் தேர்வு செய்யப்பட்டார். எல்.முருகன் தலைவராக பொறுப்பேற்ற பிறகு தமிழக பாரதிய ஜனதா கட்சியின் புதிய மாநில, மாவட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்த வேலையில் தான் கர்நாடகா மாநிலத்தில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை தமிழக பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். கட்சியில் இணைந்த அவருக்கு தமிழ பாஜக துணை தலைவராக முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டது. இதான் பிறகு தான் அண்ணாமலை பின்னால் இளைஞர் சக்திகள் ஒன்று திரளா ஆரம்பித்தது. மேலும் இந்தாண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் கரூர் மாவட்டத்தில் உள்ள அவரக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டார். அங்கு இஸ்லாமியர்களின் ஓட்டு எண்ணிக்கை ஓரளவு கணிசமாக கைப்பற்றினர்.
சில இஸ்லாமியர்கள் ஒரு சில பகுதிகளில் அண்ணாமலையை பிரச்சாரத்துக்கு அனுமதிக்காமல் பிரச்சனைய செய்தனர், அதையும் சட்டரீதியாக எதிர்கொண்டு வெற்றி கண்டவர் அண்ணாமலை. சமூக வலைத்தளங்களில் திமுக எம்பி ஒருவர் அண்ணாமலையிடம் வம்பு செய்து முக்குடைபட்டார்,. இதனால் அப்போது எதிர் கட்சியாக இருந்த திமுக தலைமை அண்ணாமலையிடம் வம்பு வைத்து கொள்ள வேண்டாம் என்று தங்கள் கட்சிக்கு எச்சரிக்கை வழங்கியது.
தமிழக பாஜகவில் சீனியர்கள் அதிகமிருந்தாலும் ஜூனியராக வந்த அண்ணாமலையின் வேகம் பாஜகவை தமிழகத்தில் தலைதூக்க உதவியாக இருந்தது. இந்த நிலையில் நேற்று பிரதமர் மோடி தலைமையில் புதிதாக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. அதில் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் எல்.முருகன் மத்திய அமைச்சரவையில் இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இதனால் தமிழக பாரதிய ஜனதா தலைவரின் பதவி காலியானது இதற்கு சீனியர்கள் பெயர்கள் அடிபட்டன.
ஆனால் அண்ணாமலை தான் தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவராக வேண்டும் என்று பாஜக தொண்டர்களின் ஆசையை நிறைவேற்றியது தலைமை. தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவராக அண்ணாமலை ஐபிஎஸ் தேர்வு செய்யப்பட்டார். இன்று தமிழக பாரதிய ஜனதா கட்சியின் புதிய தலைவர் அண்ணாமலை ஐபிஎஸ் அவர்களை சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்கள் மழை குவிகிறது. திமுக தற்போது ஆளும் கட்சியாக இருந்தாலும் தமிழக பாஜகவில் அண்ணாமலையை தலைவர் ஆக்கியது திமுகவுக்கு ஒருவித அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.