தமிழக வீரர் நடராஜன் எக்காரணத்தை கொண்டும் இந்திய அணிக்குள் வந்துவிட கூடாது… BCCI உள்ளே நடக்கும் இன ரீதியான அடக்கு முறை…

0
Follow on Google News

ஐபிஎல் போட்டியில் தன்னுடைய அபாரமான விளையாட்டு மூலம் உலகம் முழுவதும் உள்ள பல கிரிக்கெட் ஜாம்பவான்களின் பாராட்டைப் பெற்ற நடராஜனை நடைபெற இருக்கும் உலக கோப்பை இந்திய அணியில் வாய்ப்பு வழங்க படாமல் புறக்கணித்துள்ளது இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வு குழு. இந்நிலையில் நடராஜனுக்கு பதிலாக இடது கை பந்து வீச்சாளராக அர்ஷ்தீப் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஆனால் அர்ஷ்தீப் சிங் ஐபிஎல் போட்டியில் விளையாடிய 14 மேட்ச் விளையாடி 19 விக்கெட் எடுத்துள்ளார் மேலும் அவருடைய எக்கனாமிக் என்பது 10க்கு மேல் உள்ளது, குறிப்பாக அதிகமாக நோபல் போடுவது மட்டுமல்லாமல், ஃபீல்டிங் செய்வதிலும் மிக சொதப்புகிற அர்ஷ்தீப் சிங் வாய்ப்பு கொடுத்துள்ளது இந்திய அணி, அவரை விட பல மடங்கு சிறப்பாக விளையாடிய தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை.

மேலும் இந்திய அணியின் டி20 உலகக்கோப்பையில் ரிசர்வ் பட்டியலில் கூட தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு கொடுக்காத BCCI கலீல் அகமது என்கின்ற ஒரு பவுலர் t20 உலக கோப்பையின் ரிசர்வ் பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதில் கலில் அகமது 14 ஐபிஎல் மேட்ச் விளையாடி வெறும் 17 விக்கெட் களை மட்டும் எடுத்துள்ள. அவர் 9.58 உள்ளனர். இருவரையும் ஒப்பிடும்பொழுது நடராஜ் பல மடங்கு சிறப்பாக விளையாடியுள்ளார்.

இந்நிலையில் எதற்காக நடராஜனை இந்திய அணியில் இடம்பெறச் செய்யவில்லை என்கிற கேள்விக்கு ஐபிஎல் பெர்பார்மன்ஸ் வைத்து எடுக்க முடியாது என விளக்கம் கொடுக்கும் பிசிசிஐ. தூபே வுக்கு ஏன் வாய்ப்பு கொடுத்தீர்கள் என்கிற கேள்விக்கு அவர் ஐபிஎல் போட்டியில் சிறப்பாக பெர்பாமன்ஸ் செய்துள்ளார் என்கின்றனர் பிசிசிஐ தரப்பு.

மேலும் நடராஜன் சில காலம் காயம் காரணமாக விளையாடவில்லை என்கின்ற காரணத்தையும் சொல்கிறார்கள், ஆனால் ரிஷப் பந்த் சில காலம் காயம் காரணமாக விளையாடாமல் இருந்தார். ஆனால் அவரை இந்திய அணிகள் இடம் பெறச் செய்துள்ளார்கள் மேலும் நடராஜ் இந்திய அணியில் விளையாடி நீண்ட நாட்கள் ஆகிவிட்டது என்கின்ற காரணத்தை சொல்வதையும் ஏற்று கொள்ள முடியாது.

காரணம் கலில் அகமது சுமார் நான்கு வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது இந்திய அணியில் விளையாடி. ஆனால் அவருக்கு வாய்ப்பு கொடுத்துள்ளது BCCI.. இந்த நிலையில் முழு திறமையும் இருந்து நடராஜனை இந்திய அணியில் எடுக்காததற்கு தெளிவான விளக்கம் கொடுக்க முடியாமல் BCCI திணறிவருவது குறித்து திட்டமிட்டே திறமை இருந்தும் தமிழக வீரர் நடராஜன் இந்திய அணியில் வாய்ப்பு கொடுக்க படாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளார் என்கிற விமர்சனம் எழுந்துள்ளது.

அதாவது இந்திய கிரிக்கெட் அணியில் ஜாதி பார்த்து, இனம் பார்த்து தான் வீரர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள் என்கின்ற ஒரு குற்றசாட்டு பல வருடங்களாக இருந்து வரும் நிலையில் தற்பொழுது தமிழக வீரர் நடராஜன் தமிழன் என்கிற ஒரே காரணத்திற்காகவும், பிற்படுத்தப்பட்ட சமூகம் என்பதற்காகவும் தான் புறக்கணிக்கப்பட்டாரா.? என்கிற சந்தேகம் தற்பொழுது பலருடைய கேள்வியாக அமைத்துள்ளது.

மேலும் நடராஜன் முழு திறமையுடன் இருந்தாலும், அவர் இந்திய அணி உள்ளே வந்தால் பின்பு அவரை வெளியேற்ற முடியாதபடி சிறப்பாக விளையாடி இந்திய அணியில் தவிர்க்க முடியாத வீரராக உருவெடுத்து விடுவார் என்பதற்காவே, நடராஜன் எக்காரணம் கொண்டு இந்திய அணி உள்ளே வந்து விட கூடாது என்பதில் BCCI யை பல வருடமாக கட்டுக்குள் வைத்திருக்கும் குறிப்பிட்ட ஒரு தரப்பினர் செய்துள்ளார்களா.? என்கிற கேள்வி தற்பொழுது எழுந்துள்ளது பற்றி உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.