நீட்டா அம்பானி குடிக்கும் தண்ணீர் பாட்டில் 49 லட்சமா.? அப்படி என்ன அந்த தண்ணீர் பாட்டிலில் உள்ள சிறப்பு..

0
Follow on Google News

முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்டின் திருமணம் வரும் ஜூலை மாதம் 12 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த திருமணத்தின் முந்தைய கொண்டாட்ட விழா, 3 நாட்கள் குஜராத்தின் ஜாம்நகரில் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் முகேஷ் அம்பானியின் மனைவியான நீடா அம்பானி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

காரணம் கையால் நெய்யப்பட்ட காஞ்சிபுர பட்டுப்புடவையும், மரகத கற்களால் ஆன ரூ.500 கோடி மதிப்பிலான நெக்லஸும் அணிந்திருந்தார். இந்த ரூ.500 கோடி மதிப்பிலான நெக்லஸ் அப்போது பெரும் பேசுபொருளானது. மேலும் அம்பானி குடும்பத்தின் மருமகள் ராதிகா மெர்ச்சண்டின்க்கு, நீடா அம்பானி விலையுயர்ந்த சொகுசு வில்லா ஒன்றை பரிசளித்துள்ளார்.

துபாயில் உள்ள இந்த வில்லாவின் மதிப்பு மட்டும் ரூ. 640 கோடி என்று வாய்பிளக்க வைத்துள்ளது. இந்த வில்லாவில் 10 ஆடம்பர படுக்கையறைகள் இருக்கிறது. வில்லாவிற்கு வெளியே சுமார் 70 மீட்டர் தூரத்திற்கு பிரைவேட் கடற்கடையும் உள்ளது. வில்லாவின் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால் இத்தாலிய பளிங்கு கற்களுடன் பிரமிக்க வைக்கும் அதன் உட்புற வேலைப்பாடுகள்.

விடுமுறை காலங்களில் பொழுதைக் கழிக்கவும், பெரியளவிலான பார்ட்டிகளை நடத்தவும் இந்த வில்லா ஏற்றதாக இருக்கும் என்பதால், வர இருக்கும் மருமகளுக்காக அம்பானி குடும்பம் பார்த்து பார்த்து இந்த வில்லாவை வாங்கி பரிசளித்துள்ளனர். இந்நிலையில் இப்போது, ​​நிதா அம்பானி குடிக்கும் தண்ணீர் ட்ரெண்ட் ஆகியுள்ளது. நீடா அம்பானி குடிப்பது தான் உலகின் மிக விலையுயர்ந்த தண்ணீர் என்று கூறப்படுகின்றது.

மேலும் குடிநீருக்காக தனித்துவமாக வடிவமைக்கப்பட்ட தண்ணீர் பாட்டிலை அவர் பயன்படுத்துவதும் கூறப்படுகிறது. இந்த பாட்டிலின் மதிப்பு ரூ. 49 லட்சம் என்று சொல்லப்படுகிறது. மெக்சிகன் வடிவமைப்பாளரான பெர்னாண்டோ அல்டமிரானோ வடிவமைத்த இந்த பாட்டில் தங்கத்தால் வடிவமைக்கப்பட்டது. அக்வா டி கிறிஸ்டல்லோ ட்ரிப்யூடோ ஏ மோடிக்லியானி எனப் பெயரிடப்பட்ட உலகின் விலையுயர்ந்த நீர் இந்த பாட்டிலில் உள்ளது.

இந்த நீரில் 24-காரட் தங்கத் துகள்கள் கலந்திருக்குமாம். பிஜி மற்றும் பிரான்சில் இருந்து வரும் இயற்கை நீரூற்று நீர், ஐஸ்லாந்தின் பனிப்பாறை நீர் தான் இந்த பிராண்டில் விற்கப்படுகிறது. குறிப்பாக, நீடா அம்பானி அருந்தும் நீரில் 24-காரட் தங்க தூசியும் சேர்க்கப்பட்டிருக்கிறது என்றும், அது தண்ணீருக்கு காரத்தன்மையைக் கூட்டி, உலகில் உள்ள மற்ற பானங்களை விட அதிக ஆற்றலை அளிக்கிறது.

இதைக் குடிப்பதன் மூலம், ஒருவரின் சருமத்தை எப்போதும் புதுப்பொலிவுடன் வைத்திருக்க முடியுமாம். இந்தத் தண்ணீர் பாட்டில் ஒரு ஏலத்தில் 60,000 அமெரிக்க டாலர்களுக்கு வாங்கப்பட்டது என்றும் இதன் இந்திய மதிப்பு 49 லட்சம் என 2015 ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் நீதா அம்பானியின் பழைய புகைப்படம் மார்பிங் செய்யப்பட்டு அவர் மிகவும் விலையுயர்ந்த தண்ணீரை குடிப்பது போன்ற ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது.

ஆனால் இந்த புகைப்படம் படம் போட்டோஷாப் செய்யப்பட்டது என்பது இப்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. உண்மையில் நீட்டா அம்பானி பிளாஸ்டிக் பாட்டில் குடிநீரையே குடிக்கிறார். ஆனால் விலை உயர்ந்த தண்ணீரை நீட்டா அம்பானி குடிப்பது போன்ற போட்டோ சாப் செய்யப்பட்டு வைரல் செய்யப்பட்டுள்ளது என்பது தெரியவந்துள்ளது.