ஹர்திக் பாண்டியாவுக்கு இதெல்லாம் ஒரு பொழப்பா.? அனுதாபத்தை தேட மனைவியை பகடையாக்கிய ஹர்திக் பாண்டியா…

0
Follow on Google News

ஹர்திக் பாண்டியாவும் அவரது மனைவி நட்டாஷாவும் விரைவில் விவாகரத்து பெற்று பிரிய உள்ளதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ள நிலையில், இவை அனைத்தும் ஹர்திக் பாண்டியா நடத்தும் நாடகம் என்றும், நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் படுமோசமாக விளையாடி சொதப்பியதை மறைப்பதற்காகவே இப்படி செய்கிறார் என முக்கிய பிரமுகர் ரோஹித் குப்தா பகிர் தகவல்களை வெளியிட்டுள்ளார்.

ஒரு காலத்தில் திறமையான ஆல் ரவுண்டரி என்று புகழப்பட்ட ஹர்திக் பாண்டியா, நடந்து முடிந்த ஐபிஎல் போட்டிகளில் பேட்டிங் பவுலிங் இரண்டிலுமே படுமோசமாக சொதப்பினார். இதன் விளைவு, மும்பை அணி 14 போட்டிகளில் நான்கு வெற்றிகளை மட்டுமே பதிவு செய்து புள்ளி பட்டியலில் கடைசிஇடத்திலேயே பின்தங்கியது. இதைத்தொடர்ந்து ஹர்திக் பாண்டியா மீதான விமர்சனங்கள் மேலும் அதிகரித்தன.

பல்வேறு தரப்பினரும், ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சி மீது குறை கூறினர். இவ்வாறு நடப்பாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தொடங்கியதில் இருந்து முடியும் வரை, ஏராளமான கிரிக்கெட் ஆர்வலர்கள் ஹர்திக் பாண்டியா மீது வெறுப்பை கொட்டி தீர்த்தனர். மேலும் மைதானங்களில் ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்ததால், ஐபிஎல் போட்டியில் சரியாக விளையாட முடியாமல் திணறினார்.

இப்படியான நிலையில் வருகிறது ஜூன் மாதம் தொடங்க உள்ள டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணியின் துணை கேப்டனாக செயல்பட இருக்கிறார்.இந்த சமயத்தில் ரசிகர்களின் ஆதரவு மிகவும் முக்கியம். அந்த வகையில், ஏற்கனவே, ஐபிஎல் போட்டியில் சொதப்பியதைக் கண்டு வெறுப்பில் இருக்கும் ரசிகர்களிடம் அனுதாபத்தை பெறுவதற்காக பாண்டியா திட்டமிட்டு விவாகரத்து நாடகத்தை நடத்தி வருவதாக ரோஹித் குப்தா தெரிவித்துள்ளார்.

அதாவது ஹர்திக் பாண்டியாவை அவரது மனைவி நட்டாஷா ஏமாற்றிவிட்டார் என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி ரசிகர்களின் ஆதரவை பெறவே இந்த திட்டத்தை கையில் எடுத்திருக்கிறார் என்றும், இதெல்லாம் பழைய யுக்தி என்றும் ரோஹித் குப்தார் தெரிவித்துள்ளார். ஹர்திக் பாண்டியாவின் விவாகரத்து சர்ச்சை முதலில் எப்படி தொடங்கியது என்று பார்த்தாலே ரோஹித் குப்தா கூறுவது போல இது திட்டமிடப்பட்ட சர்ச்சையாக இருக்க வாய்ப்புள்ளது என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.

முதலில் ரெடிட் என்ற சமூக வலைதளத்தில் கிசுகிசு எழுதும் ஒரு பக்கத்தில் ஹர்திக் பாண்டியாவுக்கும், நடாஷாவிற்கும் கடந்த மூன்று மாதங்களாக சமூக வலைதளத்தில் எந்த பரிமாற்றங்களும் இல்லை என தெரிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து மறுநாள் ஹர்திக் பாண்டியா நடாஷா இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருப்பதாகவும், இருவரும் விவாகரத்து பெற முடிவு செய்துள்ளதாகவும் எழுதப்பட்டது.

அதுமட்டுமில்லாமல் விவாகரத்துக்கு பின்னர் ஹர்திக் பாண்டியாவின் சொத்தில் 70% நட்டாஷா ஜீவனாம்சமாக பெறுவார் என்றும் கூறப்பட்டது. ஆனால் இதுவரை இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. இவ்வாறு தினசரி ஹர்திக் பாண்டியாவின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பல்வேறு செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இதன் மூலம் விவாகரத்து என்ற இல்லாத ஒரு விஷயத்தை செய்தியாக்கி, தன் மீது ரசிகர்களை இரக்கம் கொள்ள வைக்கவும். தான் கிரிக்கெட் போட்டிகளில் ஆடும் போது தனக்கு ஆதரவு அளிக்க வேண்டியும் ஹர்திக் பாண்டியா நடத்தும் நாடகம் தானா இது? என்று அவர் மீது சந்தேகம் ஏற்படுகிறது.