பகத் பாசில் மூளையை தாக்கிய கொடிய நோய்… உயிருக்கு ஆபத்தா? என்னாச்சு மாமன்னன் ரத்தினவேலுக்கு…

0
Follow on Google News

மலையாளத்தின் முன்னணி கதாநாயகனாக இருக்கும் பகத் பாசில் சமீபத்தில் விக்ரம், மாமன்னன் என பல தமிழ் படங்களில் நடித்து, தனது நடிப்பு திறமையால் தமிழ் திரையுலகிலும் தற்போதைய முன்னணி கதாநாயகனாக வலம் வருகிறார். மேலும் இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உருவாகி இருப்பதும் கவனிக்கத்தக்கது. சமீபத்தில் வெளியான ஆவேசம் படத்தில் கூட பகத் பாசிலை மறந்து, ரசிகர்கள் ரங்கன் சேட்டனை கொண்டாடும் அளவிற்கு அந்த கதாபாத்திரத்தில் கலக்கியிருந்தார். 

இந்த நிலையில் காமெடி, காதல், வில்லன் என அனைத்து கதாபாத்திரத்திலும் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த பகத் பாசில், ஒரு அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவரே வெளிப்படையாக பேசியிருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் நடிகை நஸ்ரியாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட பகத் பாசிலுக்கு இதுவரை குழந்தை பிறக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில் அவருக்கு அரிதான மூளை பாதிப்பு நோய் ஏற்பட்டுள்ளதாக அவரை கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை எர்ணாகுளம் மாவட்டம் கொத்தமங்கலத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் பயிலும் பள்ளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பகத் பாசில் தனக்கு ADHD எனப்படும் Attention Deficit Hyperactivity Disorder எனப்படும் மூளை தொடர்பான நரம்பியல் பிரச்சனை உள்ளதாக தெரிவித்துள்ளார். 

மேலும் இது போன்ற அரிய வகை நோய் குழந்தைகளையே பாதிக்கும் என்றும், அதனை குழந்தை பருவத்திலேயே சரி செய்து விடலாம் என மருத்துவர்கள் தெரிவித்திருப்பதாகவும், ஆனால் தனக்கு 41 வயது ஆன பிறகு தான் இந்த பாதிப்பு இருப்பது தெரிய வந்ததால் இதனை சரி செய்ய முடியாதா என்று மருத்துவரிடம் கேட்டதாகவும் பகத் பாசில் கூறியுள்ளார். 

இந்த நரம்பியல் தொடர்பான குறைபாடு இருக்கும் ஒருவர் அதிக மறதி கொண்டவர்களாகவும், ஒழுங்காக இருக்க வேண்டும் என்பதை பெரிதாக கருதாதவர்களாகவும் இருப்பார்கள் என்றும் கூறுகின்றனர். இந்த பாதிப்பானது 12 வயதுக்குட்பட்டவர்களுக்கு ஏற்படுவது வழக்கம் தான் என்றும், ஆனால் சிறு வயதில் அதற்கான அறிகுறிகள் தெரியாத போது இளம் வயதில் அதுவே முற்றிவிடும் என்றும் மருத்துவர்கள் கூறியிருக்கின்றனர். 

மேலும் இந்த நோய் மூதாதையர்களுக்கு இருந்தால் மரபணு வழியாக சந்ததியினருக்கும் வரக்கூடும் என்றும்ஃ மேலும் குறை பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கும் இந்த பாதிப்பு வரக்கூடும் என மருத்துவர்கள் கூறுயிருக்கின்றனர். அதேபோல் சிலருக்கு மூளையின் அளவு சிறியதாக இருந்தாலும் இந்த மாதிரியான பாதிப்பு ஏற்படும் என்றும் ஆய்வுகள் கூறுகின்றன. 

கடுமையான மறதி, அமைதியின்மை, படபடப்பு, அதிவேகத்தன்மை, கவனம் செலுத்துவதில் சிதறல், நிலைமையை புரிந்து கொள்வதில் கடினம் ஆகியவைதான் இந்த நோய்க்கான அறிகுறிகளாகவும் இருக்கிறது. இந்த நோயை குணப்படுத்த ஒரே வழி இதுதான் என யோகா மற்றும் உடற்பயிற்சி செய்தல், மனநல மருத்துவரை சந்தித்து சிகிச்சை மேற்கொள்ளுதல் தான் என்றும் மருத்துவர்கள் கூறி இருக்கின்றனர். 

இந்த நிலையில் திரையுலக மார்க்கெட்டில் நம்பர்.1 கதாநாயகரில் ஒருவராக இருந்து வரும் பகத் பாசிலுக்கு இந்த நோயால் பட வாய்ப்பு குறைய வாய்ப்புள்ளதாகவும் பலரும் கூறி வருகின்றனர் . மேலும் இதே போல் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தாவும் கடந்த வருடம் மையோசிடிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறியிருந்ததும் கவனிக்கத்தக்கது.