டி 20 உலகக் கோப்பையை இந்தியா நிச்சயம் வெல்லும்… பின்னணி காரணத்தைச் சொன்ன பாகிஸ்தான் வீரர்…

0
Follow on Google News

2024 டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் எதிர்வரும் ஜூன் மாதம் தொடங்கவிருக்கும் நிலையில், பாகிஸ்தான்- இந்தியாவுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தான் நிச்சயம் வெற்றி பெறும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஒருவர் கூறியிருப்பது ஒட்டு மொத்த கிரிக்கெட் ஆர்வலர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. யார் அந்த பாகிஸ்தான் அணி வீரர், இந்திய அணி குறித்து அவர் என்ன கூறியிருக்கிறார் என்பது பற்றி இங்கே விரிவாக பார்க்கலாம்.

ஜூன் மாதம் தொடங்கவிருக்கும் டி20 உலக கோப்பை தொடரில் விளையாட இருக்கும் இந்திய அணி வீரர்களின் பட்டியலை பிசிசிஐ தேர்வு குழு சமீபத்தில் உறுதிப்படுத்தியது. இதைத் தொடர்ந்து ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்காக தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறது.

அதேபோல், உலக கோப்பையில் பங்கேற்கும் மற்ற அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. சுமார் 20 அணிகள் பங்கேற்கும் இந்த உலகக் கோப்பை தொடரில், மிகவும் முக்கியமான போட்டியாக பார்க்கப்படுவது இந்தியா பாகிஸ்தான் அணி இடையேயான ஆட்டம் தான். இந்த இரண்டு அணிகளுக்கு இடையேயான போட்டி என்றாலே பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சம் இருக்காது என்பதால் இந்தியா பாகிஸ்தான் அணி இடையேயான போட்டியை காண்பதற்காக கோடிக்கணக்கான ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இப்படி ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்தியா பாகிஸ்தான் அணி இடையேயான உலகக்கோப்பை போட்டி வருகிற ஜூன் ஒன்பதாம் தேதி நடைபெற உள்ளது. இதனால் இரு அணி ரசிகர்களும் தங்களுடைய அணி தான் வெற்றி பெற வேண்டும் என்று பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
டி 20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை பொருத்தவரை, இந்திய அணி 2007 ஆம் ஆண்டிலும், பாகிஸ்தான் அணி 2009 ஆம் ஆண்டிலும் சாம்பியன் கோப்பையை வென்றது.

அதன் பிறகு நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியில் இரண்டு அணிகளுமே வெற்றி பெறவில்லை. இந்த இரண்டு அணிகளுக்கு இடையேயான போட்டியும் ரசிகர்களிடையே மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஏனெனில், டி20 உலக கோப்பை தொடர் போன்ற சர்வதேச தொடர்களில் மட்டுமே இந்த இரண்டு அணிகளும் மோதிக் கொள்கின்றன. எனவே இந்த இரண்டு நாட்டு ரசிகர்களின் மத்தியில் இந்தப் போட்டி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

அதிலும் கடந்த 2022 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் மெல்போன் நகரத்தில் நடைபெற்ற இந்தியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டி 20 போட்டியை அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. அந்தப் போட்டியை வரலாற்று சிறப்பு வாய்ந்த போட்டியாகவே கருதலாம். அந்த அளவிற்கு அந்தப் போட்டி மிகவும் விறுவிறுப்பாக சென்றது. அந்த சமயத்தில் இரண்டு அணி ரசிகர்களும் உச்ச கட்ட டென்ஷனுடன் போட்டியைப் பார்த்தனர்.

இப்படியான நிலையில், பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான கம்ரான் அக்மல், இந்தியா பாகிஸ்தான் இடையேயான போட்டியில் இந்தியா தான் நிச்சயம் வெற்றி பெறும் என்று வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளார். சமீபத்தில், கம்ரான் அக்மலிடம் நடத்தப்பட்ட இன்ஸ்டாகிராம் கேள்வி பதில் உரையாடலின் போது, t20 போட்டியில் இந்தியா பாகிஸ்தான் அணிகளில் எந்த அணி வெற்றி பெறும் என்று கேட்கப்பட்டது.

அதற்கு பதில் அளித்த அக்மல், “நிச்சயமாக இந்தியா தான் வெற்றி பெறும்” என்று கூறியிருக்கிறார். முதல்முறையாக ஒரு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரே இந்திய அணி தான் வெற்றி பெறும் என்று கூறி இருப்பது பாகிஸ்தான் அணி ரசிகர்களை மட்டுமின்றி இந்தியர்களையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இவரது இந்த வீடியோவை தற்போது கிரிக்கெட் ரசிகர்கள் சோசியல் மீடியாவில் அதிகம் ஷேர் செய்து வருகின்றனர். இந்தியா பாகிஸ்தான் அணி இடையேயான போட்டி வருகிற ஜூன் ஒன்பதாம் தேதி நியூயார்க்கில் உள்ள நாசாகவுண்டி ஸ்டேடியத்தில் 35 ஆயிரம் ரசிகர்கள் முன்னிலையில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.