வாயை பொத்திட்டு இரு… இல்லை காணாமல் போயிடுவ… விராட் கோலியை வெச்சு செஞ்ச ஸ்ரீகாந்த்…

0
Follow on Google News

கடந்த மே 22 ஆம் தேதி அன்று குஜராத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய அணிகள் மோதின. ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் டாஸ் வென்று முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார். அதன்படி, முதலில் பேட்டிங் செய்ய களம் இறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் எட்டு விக்கெட்டுகளை பறிகொடுத்து 172 ரன்கள் எடுத்திருந்தது.

அதன் பிறகு, 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 19 ஓவர்லேயே 174 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தியது. இதனால் வழக்கம் போல இந்த முறையும் ஐபிஎல் கோப்பையை வெல்லும் கனவை ஆர் சி பி அணி நழுவ விட்டது. 17 வது முறையாக ஆர் சி பி அணி சாம்பியன் பட்டத்தை வெல்ல முடியாமல் வெறுங்கையோடு சென்றுவிட்டது.

இது பெங்களூரு அணி வீரர்களை மட்டும் இன்றி அந்த அணியின் ரசிகர்களையும் விரக்தி அடையச் செய்தது.
தற்பொழுது, சோசியல் மீடியா முழுவதும் விராட் கோலியையும் பெங்களூரு அணி ரசிகர்களையும் சரமாரியாக ரோஸ்ட் செய்து வருகின்றனர். குறிப்பாக, லீக் சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்திவிட்டு ஏதோ ஐபிஎல் கோப்பையை வென்றது போல ஆர் சி பி அணி வீரர்களும் ரசிகர்களும் செய்த அலப்பறைகள் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

மேலும், சென்னை அணியை வீழ்த்தியதும் மைதானத்தில் கூச்சலிட்டு விராட் கோலி செய்த திமிரான சைகைகள் சென்னை அணி ரசிகர்களை வெறுப்படையச் செய்தது. இப்படியான நிலையில், பெங்களூரு அணி அடுத்த போட்டியில் ராஜஸ்தான் அணியிடம் தோல்வியுற்று ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறியது குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் வெளிப்படையாக அவரது கருத்தை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஸ்ரீகாந்த் கூறியிருப்பதாவது: “கிரிக்கெட் விளையாடும் போது வாயை பொத்திக்கொண்டு இருக்க வேண்டும். இல்லையெனில் இப்படித்தான் நடக்கும். கடவுள் என்பவன் நிச்சயமாக மேலே இருக்கிறான்” என்று விராட் கோலியின் அடாவடித்தனம் குறித்து மறைமுகமாக பேசியுள்ளார்.

மேலும் தொடர்ந்து பேசுகையில், “பெங்களூரு அணி தோற்றதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று, அவர்கள் ட்ரெஸ்ஸிங் ரூமில் நடக்கும் சம்பவங்களை எல்லாம் தினமும் வீடியோவாக எடுத்து வெளியிடுவது தான் என்றும், இவ்வாறு கிரிக்கெட்டில் ட்ரெஸ்ஸிங் ரூமில் என்ன நடக்கிறது என்பதை வீடியோவாக போட்டால் நிச்சயமாக காலி ஆகி விடுவீர்கள் என்றும்” ஸ்ரீகாந்த் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தொடர்ந்து ஸ்ரீகாந்த் பேசும்போது, “வாழ்க்கையில் நீங்கள் ஏதேனும் செய்கிறீர்கள் என்றால் தயவு செய்து வாயை மூடிக்கொண்டு வேலையில் மட்டும் கவனம் செலுத்துங்கள். பெங்களூரு அணி வீரர்கள் வாயை மூடிக்கொண்டு விளையாட்டில் கவனம் செலுத்தி இருந்தால் இந்நேரம் வெற்றி பெற்றிருப்பார்கள். ஆனால் அவர்கள் லீக் போட்டியில் சென்னை அணியை வீழ்த்தி விட்டு ரகளை செய்தனர். அவர்களுக்கு அஸ்வின் தக்க பதிலடி கொடுத்திருக்கிறார் ” என்று கூறினார்.

அது மட்டும் இல்லாமல், பெங்களூரு அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றதையே மிகப்பெரிய சாதனையாக கருதிக் கொண்டது. சென்னை அணியை வீழ்த்தி விட்டு குதித்துக் கொண்டாடியது தவறு. 17 வருடங்களாக ஈ சாலா கப் நமதே என்று கத்தி கூச்சலிடுகிறார்கள் தவிர ஒருமுறை கூட ஐபிஎல் கோப்பையை வென்றதில்லை. வாயை மூடிக்கொண்டு இருந்தால் இந்நேரம் வெற்றி பெற்று இருப்பார்கள் என்று ஸ்ரீகாந்த் பெங்களூரு அணியை கடுமையாக சாடி உள்ளார்.