ஹர்திக் பாண்டியாவை விட்டு விலகிய மனைவி…குழந்தை பிறந்த பின்பு நடந்த ஹர்திக் பாண்டியா திருமணத்தில் ஏற்பட்ட குழப்பம்..

0
Follow on Google News

ஐபிஎல் 17ஆவது சீசனில், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, படுமோசமாக சொதப்பி பிளே ஆப் ரேசில் இருந்து வெளியேறியது. ஐபிஎல் 17ஆவது சீசனில், ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்ஸி சுமாராகதான் இருந்தது. ரோஹித்தை புறக்கணித்தது, சக வீரர்களை களத்திலேயே திட்டியது, பௌலர்களை சரியாக பயன்படுத்த முடியாமல் தடுமாறியது என ஹர்திக் தொடர்ந்து சொதப்பினார்.

கேப்டன்ஸியில் மட்டுமல்ல, ஆல்-ரவுண்டராகவும் ஹர்திக் சிறப்பாக செயல்படவில்லை. 200 ரன்களை மட்டுமே அடித்த அவர், 11 விக்கெட்களைதான் சாய்த்தா். மும்பை அணி பின்னடைவை சந்திக்க, இதுவும் ஒரு காரணம். இப்படி விளையாட்டில் பின்னடைவு சந்தித்த அவர், தனிப்பட்ட வாழ்விலும் சறுக்கியுள்ளார். அதாவது ஹர்திக் பாண்டியா மற்றும் நடாசா ஸ்டான்கோவிச் உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும், இருவரும் விவாகரத்து பெற இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் வதந்தி பரவி வருகிறது.

ஹர்திக் பாண்டியா இந்திய அணியில் இருப்பவர்களிலேயே ரொம்ப மாடர்னான வீரர். ஆல் – ரவுண்டரான அவர் குறித்து அவ்வப்போது காதல் கிசுகிசு எழுந்து வந்தது. இந்த நிலையில், கடந்த 2020 ஆம் ஆண்டு ஹர்திக் பாண்டியாவின் சுவாரஸ்யம் நிறைந்த காதல் கதை தொடங்கியது. ஊடகங்கள் முழுக்க அந்த கிசுகிசுக்களிலும் சுவாரயஸ்த்திலும் மூழ்கிப் போயிருந்த சமயம். நடாஷாவும் அந்த சமயத்தில் பாலிவுட்டின் மிகப் பிரபலமான பேசப்படும் நடிகைகளில் ஒருவராக இருந்தார். இவர்கள் இருவருக்கும் காதல் ஏற்பட்டதே ரொம்ப வித்தியாசமானது தான்.

காதலிலும் பல எல்லி, ஊர்வசி ரௌதெலா ஆகிய பல நடிகைகளுடன் இணைத்துக் கிசுகிசுக்கப்பட்டார். நடாஷாவைப் பொருத்தவரை பாலிவுட் மாடல் மற்றும் பிரபல நடிகையும் ஆவார். இவர் ஹிந்தி பிக்பாஸ் சீசன் 8 இல் போட்டியாளராக பங்கெடுத்த பின் மிகவும் பிரபலமடைந்தார். தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்த சமயத்தில் நடிகர் ஒருவருடன் காதல் என கிசுகிசுப்புகள் வெளியாகின.

2020 ஆண்டு புத்தாண்டின் போதுதான் நடாஷாவுக்கு அந்த சர்பிரைஸ் காத்திருந்தது. நைட் கிளப்பில் நண்பர்களான மாறிய நடாஷஷாவும் பாண்டியாவும் சேர்ந்து புத்தாண்டைக் கொண்டாடிக் கொண்டிருந்த போதுதான் ஹர்த்திக் பாண்டியா நடாஷாவிடம் தன்னுடைய காதலை வெளிப்படுத்த, நடாஷாவுக்கும் ஹர்திக்கை பிடித்திருந்ததால் ஓகே சொல்லிவிட்டார்.

ஹர்திக் பாண்டியாவும் நடாஷாவும் சேர்ந்து துபாய்க்கு சுற்றுலா சென்றது வரை தெரிந்த பாண்டியாவின் குடும்பத்துக்கும் அவர் நடாஷாவுக்கு லவ் ப்ரபோஷல் செய்தது, நிச்சயதார்த்தம் செய்து கொண்டது எதுவும் நீண்ட நாள் தெரியவே தெரியாதாம். க்ருணால் பாண்டியாவுக்கு மட்டும் நிச்சயதார்த்த விஷயத்தை சில நாட்கள் கழித்து ஹர்திக் சொல்லியிருக்கிறார். இந்த ஜோடிக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது என்ற அதிர்ச்சியில் இருந்து ரசிகர்கள் வெளிவருவதற்கு முன்பாகவே, இன்னுமொரு பெரிய அதிர்ச்சியன செய்தியை அறிவித்தார் ஹர்திக்.

மே 31 ஆம் தேதி தங்களுடைய திருமணம் குறித்தும் அதோடு தாங்கள் நடாஷாவின் வயிற்றில் இருக்கும் தங்களுடைய குழந்தையை எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் அறிவிப்பை வெளியிட்டார். 2020 ஜனவரி முதலே இந்தியாவில் கோவிட் பெருந்தொற்று காரணமாக, மக்கள் முடங்க ஆரம்பித்தினர். அந்த சமயத்தில் தங்களுடைய வாழ்வின் இனிமையான தருணங்களை வீட்டுக்குள்ளேயே கொண்டாடி வந்த தம்பதி, வளைகாப்பையும் ஜூன் 8 ஆம் தேதி வீட்டுக்குள்ளேயே தங்களுடைய செல்லப் பிராணிகள் உடன் சேர்ந்து கொண்டாடினார்கள்.

மகன் பிறந்து 7 மாதம் கழித்து ஹர்திக் பாண்டியா மற்றும் நடாசா ஸ்டோன்கோவிச் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். கோவிட் பெருந்தொற்று காரணமாக, எளிமையான முறையில் திருமணம் செய்தனர். இதைத் தொடர்ந்து கடந்த 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஹர்திக் பாண்டியா மற்றும் நடாசா ஸ்டோன்கோவிச் இருவரும் காதலர் தினத்தை முன்னிட்டு மறுபடியும் திருமணம் செய்து கொண்டுள்ளனர். அது மிகவும் பிரமாண்டமாக நடந்தது.

இந்நிலையில் ஹர்திக் பாண்டியா மற்றும் நடாசா ஸ்டான்கோவிச் உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும், இருவரும் விவாகரத்து பெற இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் வதந்தி பரவி வருகிறது. காரணம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடாசா ஸ்டான்கோவிச் பாண்டியா என்று பெயர் வைத்திருந்த நிலையில், தற்போது பாண்டியாவை நீக்கிவிட்டு வெறும் நடாசா ஸ்டான்கோவிச் என்று மாற்றியுள்ளார். மேலும் பாண்டியா உடன் எடுத்த அனைத்து புகைப்படங்களையும் நீக்கியுள்ளார். மறுபக்கம் ஹர்திக் பாண்டியா கடந்த 2 மாதங்களாக எந்த புகைப்படங்களையும் பதிவிடவில்லை. இதனால் இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.